தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 15:22
ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய இருதயம் ஒருபோதும் கர்வங்கொள்ளக்கூடாது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு கீழ்படிய வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
II நாளாகமம் 25:17-20
பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைபண்ணி, யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் புத்திரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லியனுப்பினான்.
அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி: நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்து கொடு என்று கேட்கச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.
நீ ஏதோமியரை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடே யூதாவும்கூட விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச் சொன்னான்.
ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; அவர்கள் ஏதோமின் தெய்வங்களை நாடினதினிமித்தம் அவர்களை அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படிக்கு தேவனாலே இப்படி நடந்தது.
மேற்கூறப்பட்ட வசனங்களில் யூதாவின் ராஜாவாகிய அமத்சியா தேவனுடையஆலோசனையை கேளாமல் அலட்சியம் செய்து, அவனாகவே யோசனைப் பண்ணி, யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் புத்திரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு நம்முடைய சாமர்த்தியத்தை பார்ப்போம் வா என்று சொல்லியனுப்பினதால், அவன் சொன்னது: லீபனோனிலுள்ள முட்செடியானது, லீபனோனிலுள்ள கேதுரு மரத்தை நோக்கி: நீ உன் மகளை எனக்கு மனைவியாக விவாகம் செய்துகொடு என்று கேட்க சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டு மிருகம் அந்த வழியாக போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்து விட்டது. பின்னும் அவன் சொன்னது நீ ஏதோமியரை அடித்தாய் என்று பெருமைப் பாராட்ட உன் இருதயம் உன்னை கர்வங்கொள்ள பண்ணினது.ஆதலால் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடே யூதாவும் விழும்படிக்கு பொல்லாப்பை தேடிக்கொள்வானேன் என்றான். ஆனாலும் அமத்சியா செவிக்கொடாதே போனான்; அவர்கள் ஏதோமியரின் தெய்வங்களை நாடினதினால் அவர்களை அவர்கள் சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கும் படிக்கு தேவனாலே இப்படியாயிற்று.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானித்தால் நம்முடைய இருதயம் எந்த காரியத்திலும் மேட்டிமையடைந்து விட்டால் கர்த்தர் நமக்கு சத்துருவாக எழும்புவார். அல்லாமலும் இருதயம் கர்வம் அடைகிறதென்றால் நம்முடைய உள்ளமானது உலகத்துக்குரிய காரியங்களால் கர்வம் கொள்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கையை கர்த்தர் விரும்புகிறதில்லை. ஆதலால் கர்த்தர் நம்மை சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கும் படியாக நம்முடைய வாழ்வில் தப்புகள் காணப்படும்போது கர்த்தர் நம்மை தண்டிக்கும்படியாகவே கர்வங்கொள்ள வைக்கிறார். ஆதலால் நாம் யாருடைய இருதயமும் கர்வங்கொள்ள இடங்கொடாதபடி, கர்த்தரின் ஆலோசனைக்கு கீழ்படியும்படியாக ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.