தேவனுக்கே மகிமையுண்டாவதாக

I கொரிந்தியர் 2:4

உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலும் பெலங்கொள்ள வேண்டும்.  

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாட்களில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் எல்லாவற்றிலும் பரிசுத்தமுள்ளவர்களாக காணப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

II நாளாகமம் 26:1-8 

அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.

ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலோதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.

உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின்பேர் எக்கோலியாள்.

அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து,

தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.

அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, காத்தின் அலங்கத்தையும், யப்னேயின் அலங்கத்தையும், அஸ்தோத்தின் அலங்கத்தையும் இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.

பெலிஸ்தரையும் கூர்பாகாலிலே குடியிருக்கிற அரபியரையும் மெகுனியரையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணைநின்றார்.

அம்மோனியர் உசியாவுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்; அவனுடைய கீர்த்தி எகிப்தின் எல்லைமட்டும் எட்டினது; அவன் மிகவும் பெலங்கொண்டான்.

மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களில் அமத்சியாவின் குமாரனாகிய பதினாறு வயதான  உசியாவை யூதா ஜனங்கள் அழைத்து வந்து, அவனை அவன் தகப்பனுடைய ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.  ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்த பின்பு, இவன் ஏலோதை கட்டி அதை திரும்ப யூதாவின் வசமாக்கிக் கொண்டான். அவன் பதினாறு  வயதுத் தொடங்கி ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.  அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தது போல் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்து தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலெல்லாம் தேவனை தேட மனதிணங்கியிருந்தான்.  அவன் கர்த்தரை தேடின நாட்களிலெல்லாம் அவன் காரியங்களை கர்த்தர் பெலன் கொள்ள செய்தார். 

பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்களில் நாம் கர்த்தருக்கு செம்மையானதை செய்து, அவரோடு மனதிணங்குவோமானால்; அவர் நம்முடைய எல்லா காரியங்களிலும் நம்மை பெலன் கொள்ள வைப்பார் என்பது நிச்சயம். என்னவென்றால் கர்த்தருடைய ஆவியின் பெலத்தால் நம்முடைய  எகிப்தின் பாவ வாழ்க்கையாகிய பாரம்பரிய நடத்தைகளாகிய மாம்ச செயல்களை முற்றிலும் மாற்றி, நாம் ஆவிக்குரிய சிந்தைகளோடு வளர, அவர் தம்முடைய பெலன் நமக்கு ஆத்துமாவில்  தந்து;நம்மை உலகம், மாம்சம், பிசாசு இவற்றிலிருந்தெல்லாம் ஜெயம் எடுக்க கிருபை செய்கிறார். இவ்விதமாக நம்மை கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.