தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 33:20 

நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சபை பெருக செய்கிறவர்களாகயிருக்க வேண்டும்.  

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலும் பெலங்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

II நாளாகமம் 26:1-10 

அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.

ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலோதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.

உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின்பேர் எக்கோலியாள்.

அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து,

தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.

அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, காத்தின் அலங்கத்தையும், யப்னேயின் அலங்கத்தையும், அஸ்தோத்தின் அலங்கத்தையும் இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.

பெலிஸ்தரையும் கூர்பாகாலிலே குடியிருக்கிற அரபியரையும் மெகுனியரையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணைநின்றார்.

அம்மோனியர் உசியாவுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்; அவனுடைய கீர்த்தி எகிப்தின் எல்லைமட்டும் எட்டினது; அவன் மிகவும் பெலங்கொண்டான்.

உசியா எருசலேமிலே மூலைவாசல்மேலும், பள்ளத்தாக்கு வாசல்மேலும், அலங்கத்துக் கோடிகள்மேலும் கோபுரங்களைக் கட்டி அவைகளைப் பலப்படுத்தினான்.

அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேகம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும் வயல்வெளியிலேயும் பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான்; அவன் வெள்ளாண்மைப் பிரியனாயிருந்தான்.

மேற்கூறபட்ட வசனங்களில் அமத்சியாவின் குமாரனாகிய உசியாவுக்கு பள்ளதாக்கிலும், சமபூமியிலும் அநேகம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும் வயல்வெளிகளிலேயும் பயிர் குடிகளும், திராட்சத் தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான்; அவன் வெள்ளாண்மை பிரியனாயிருந்தான்.  அவனுக்கு யுத்த வீரரின் சேனையும் இருந்தது;அவர்கள் யுத்தத்திற்கு வகுப்பு வகுப்பாய் சேவகம்பண்ணப் புறப்பட்டது.  பராக்கிரமசாலியான வம்சதலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு. இவர்கள் கையின் கீழ் சத்துருக்களுக்கு விரோதமாக துணை நிற்க, பராக்கிரமத்தோடே யுத்தவீரரான சேனை மூன்று லட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான சேனை இருந்தது.  இந்த சேனையிலுள்ளவருக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைசீராக்களையும், மார்க்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தமாக்கினான்.  மேலும் உசியா எல்லா ஆயுதங்களையும் பிரயோகிக்கிறதற்கு, நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த யந்திரங்களையும் எருசலேமில் உண்டாக்கினான்.  அப்படியே அவன் கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று; அவன் பலபடுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அனுகூலமாயிற்று.  

பிரியமானவர்களே,  மேற்கூறப்பட்ட வசனங்கள், நாம் இரட்சிக்கப்படுகிறதும், அதன் பின்பு நம்  ஆத்துமாவில் எவ்விதம் காணப்படவேண்டும் என்பதனை குறித்தும் திருஷ்டாந்தப் படுத்தபடுகிறது.  அதெப்படியென்றால் நம் உள்ளம் மணவாட்டி சபையாகிய பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவதும்; அவ்விதம் மீட்கப்பட்டவர்கள் ஜாதிக போராட்டங்களிலிருந்து கிறிஸ்துவினால் வெற்றிப் பெற்று, அநேக பாவங்களினால் சிக்கிண்டு கிடந்து வேதனையாக கிடங்கிட ஜனங்களை கர்த்தருக்காய் ஆதாயப்படுத்திக்கொள்வதும்; அவ்விதம் கர்த்தரின் சபைகள் பெருக நாம் காரணமாக இருப்போமாகில் கர்த்தர் நமக்கு பெலன் தந்து அனுகூலமாயிருப்பார்.   அப்படியிருக்கிறவர்கள் சத்தியத்தை கச்சையாக கட்டிக்கொண்டு, அவர் வசனம் நமக்கு கேடகமாகவும், அவர் ஆவி நமக்கு மார்க்கவசமாகவும், அவர் வல்லமை நமக்கு தலைசீராவாகவும், அவர் கிருபையானது சத்துருக்களை தேவ வசனத்தால் மேற்க்கொள்கிற கவண்களாகவும் நாம் பிரயோகிக்கும்படியாக கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிறார். மேலும் சத்துருக்களை ஜெயிக்கவேண்டுமானால் அவருடைய நீதியின் கிரியைகளில் நிறையப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும்.அப்போது கர்த்தரின் கீர்த்தி எல்லா இடங்களிலும் நம்மூலம் பரவிக்கொண்டிருக்கும்.  இப்படியாக நாம் நம்மை கர்த்தருக்காய் ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.