தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நெகேமியா 4:9

ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும் பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் சத்துருவின் கையில் சிறைப்படுத்தபட்டு இருப்போமானால், மீண்டும் மனந்திரும்பி புதுப்பிக்கக் கடவோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்மை முதலில் சீர்படுத்தி விக்கிரகங்களுக்கு விலக்கி காத்துக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

IIநாளாகமம் 28:12-17 

அப்பொழுது எப்பிராயீம் புத்திரரின் தலைவரில் சிலபேராகிய யோகனானின் குமாரன் அசரியாவும், மெஷிலெமோத்தின் குமாரன் பெரகியாவும், சல்லூமின் குமாரன் எகிஸ்கியாவும், அத்லாயின் குமாரன் அமாசாவும் யுத்தத்திலிருந்து வந்தவர்களுக்கு விரோதமாக எழும்பி,

அவர்களை நோக்கி: நீங்கள் சிறைபிடித்த இவர்களை இங்கே உள்ளே கொண்டுவரவேண்டாம்; நம்மேல் திரளான குற்றமும், இஸ்ரவேலின்மேல் உக்கிரமான கோபமும் இருக்கையில், நீங்கள் கர்த்தருக்கு முன்பாக நம்மேல் குற்றம் சுமரப்பண்ணத்தக்கதாய், நம்முடைய பாவங்களையும் நம்முடைய குற்றங்களையும் அதிகமாக்க நினைக்கிறீர்கள் என்றார்கள்.

அப்பொழுது ஆயுதபாணிகளானவர்கள் சிறைபிடித்தவர்களையும், கொள்ளையுடைமைகளையும், பிரபுக்களுக்கு முன்பாகவும் சமஸ்த சபைக்கு முன்பாகவும் விட்டுவிட்டார்கள்.

அப்பொழுது பேர் குறிக்கப்பட்ட மனுஷர் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் வஸ்திரமில்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட வஸ்திரங்களைக் கொடுத்து, உடுப்பையும் பாதரட்சைகளையும் போடுவித்து, அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுக்கு எண்ணெய் வார்த்து, அவர்களில் பலட்சயமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சமரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்துக்குக் கொண்டுவந்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.

அக்காலத்திலே ஆகாஸ் என்னும் ராஜா, அசீரியாவின் ராஜாக்கள் தனக்கு ஒத்தாசைபண்ண அவர்களிடத்துக்கு ஆட்களை அனுப்பினான்.

ஏதோமியரும் கூடவந்து, யூதாவை முறிய அடித்து, சிலரைச் சிறைபிடித்துப்போயிருந்தார்கள்.

மேற்கூறபட்ட வசனங்களை தியானிக்கும் போது கர்த்தர் தீர்க்கதரிசி மூலம் சொன்னதின்படியே சிறைபிடித்துக் கொண்டு வரபட்ட யூதா ஜனங்களை விட்டு விடும்படியாக மேற்கூறபட்டவர்கள் யுத்தத்திலிருந்து வந்தவர்களுக்கு விரோதமாக எழும்பி; நீங்கள் சிறைபடித்தவர்களை இங்கே கொண்டு வர வேண்டாம்; நம்மேல் திரளான குற்றமும், இஸ்ரவேலின் மேல் உக்கிரமுமான கோபமும் இருக்கையில், நீங்கள் கர்த்தருக்கு முன்பாக நம்மேல் குற்றம் சுமரதக்கதாய், நம்முடைய பாவங்களையும், நம்முடைய குற்றங்களையும் அதிகமாக நினைக்கிறீர்கள் என்றார்கள்.  அப்போது ஆயுதபாணியானவர்கள் சிறைபிடித்தவர்களையும், கொள்ளையுடமைகளையும், பிரபுக்களுக்குமுன்பாகவும், சமஸ்த சபைக்கு முன்பாகவும் விட்டு விட்டார்கள். அப்போது பேர் குறிக்கப்பட்டவர்கள் எழும்பி, சிறைப்பிடிக்கபட்டவர்களை சேர்த்துக்கொண்டு, அவர்களில் வஸ்திரமில்லாத சகலர்க்கும், வஸ்திரங்களையும், உடுப்பையும், பாதரட்சைகளையும் போடுவித்து, சாப்பிடவும், குடிக்கவும், கொடுத்து அவர்களுக்கு எண்ணெய் வார்த்து, அவர்களில் பலட்சயமானவர்களையெல்லாம் கழுதைகள் மேல் ஏற்றி, பேரீச்சமரங்களின் பட்டணங்களாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்திற்கு கொண்டு வந்து விட்டு திரும்ப போனார்கள்.  அவர்களோடகூட ஏதோமியரும் வந்து யூதாவை முறியடித்து, சிலரை சிறைபிடித்து போயிருந்தார்கள்.  பெலிஸ்தரும் யூதாவிலே சமபூமியிலும் தெற்கேயும் இருக்கிற பட்டணங்கள் மேல் விழுந்து, 

IIநாளாகமம் 28:18,19

பெலிஸ்தரும் யூதாவிலே சமபூமியிலும் தெற்கேயும் இருக்கிற பட்டணங்களின்மேல் விழுந்து, பெத்ஷிமேசையும், ஆயலோனையும், கெதெரோத்தையும், சொக்கோவையும் அதின் கிராமங்களையும், திம்னாவையும் அதின் கிராமங்களையும், கிம்சோவையும் அதின் கிராமங்களையும் பிடித்து அங்கே குடியேறினார்கள்.

யூதாவின் ராஜாவாகிய ஆகாசினிமித்தம் கர்த்தர் யூதாவைத் தாழ்த்தினார்; அவன் யூதாவைச் சீர்குலைத்து, கர்த்தருக்கு விரோதமாய் மிகவும் துரோகம்பண்ணினான்.

வசனங்களில் உள்ள கிராமங்களையும் பிடித்து அங்கே குடியேறினார்கள்.  யூதாவின் ராஜாவாகிய ஆகாசினிமித்தம் கர்த்தர் யூதாவை தாழ்த்தினார். அவன் யூதாவை சீர்குலைத்து, கர்த்தருக்கு விரோதமாய் மிகவும் துரோகம் பண்ணினான்.  

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் திருஷ்டாந்தம் என்னவென்றால், நாம் இரட்சிக்கபட்டு, அபிஷேகிக்கபட்ட பிறகு, விக்கிரகங்ளுக்கு தூபங்காட்டினால் கர்த்தர் சத்துருக்களால் நம் ஆத்துமா சிறைப்படுத்தப்பட்டு, நம்முடைய இரட்சிப்பாகிய வஸ்திரம் களைந்துப் போடப்படுகிறது.  ஆனால் கர்த்தர் நம்மேல் இரக்கம் உள்ளவராய் நம்மை மீட்கும் போது அஞ்ஞானிகளினிமித்தம் உரியபட்ட இரட்சிப்பாகிய வஸ்திரம், கிறிஸ்துவினால் நமக்கு மீண்டும் தரப்பட்டு, நாம் இழந்து போன ஆகாரமாகிய பரலோக வசனத்தை கரத்தர் மீண்டும் நமக்கு புசிக்க தந்து; அவருடைய சுவிசேஷமாகிய நற்செய்தியை நமக்கு மீண்டும் புதுப்பித்து, புதிய அபிஷகத்தால் மீண்டும் நம்மை புதுப்பித்து நம்முடைய ஆத்துமாவை விடுதலையாக்குகிறார்.  மேலும் நாம் கர்த்தரை விட்டு தூரம் போகிறதால், நம் உள்ளத்தில் அந்நிய ஜாதிகளாகிய பிசாசின் கிரியைகள் நம்மில் உட்பிரவேசிக்கிறது.  இப்படியாக நாம் பொல்லாப்புகளை செய்கிறதினால் கர்த்தரால் தாழ்த்தப்படுகிறோம்.  ஆதலால் நாம் தாழ்த்தபடாதபடியிருக்கும்படி, கர்த்தருக்கு விரோதமாக துரோகம் செய்யாதபடி சகல பொல்லாத கிரியைகளை விட்டு, மனந்திரும்பி கர்த்தரால் புதுப்பிக்கபட்டு, இரட்சிக்கப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.