தேவனுக்கே மகிமையுண்டாவதாக

கலாத்தியர் 2:20

 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா என்றென்றைக்கும் கிறிஸ்துவோடு பிழைத்திருக்க வேண்டும்.  

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய இருதயம் ஒருபோதும் கர்வங்கொள்ளக்கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

 IIநாளாகமம் 25:21-28 

அப்படியே இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலிருக்கிற பெத்ஷிமேசிலே அவனும், அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவும் தங்கள் சாமர்த்தியத்தைப் பார்த்தார்கள்.

யூதா இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அகசியாவின் குமாரனாகிய யோவாசுக்குப் பிறந்த அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவைப் பெத்ஷிமேசிலே பிடித்து, அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்து, எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல்தொடங்கி மூலைவாசல்மட்டும் நானூறுமுழ நீளம் இடித்துப்போட்டு,

தேவனுடைய ஆலயத்தில் ஓபேத் ஏதோமின் வசத்திலே அகப்பட்ட சகல பொன்னையும், வெள்ளியையும், சகல பணிமுட்டுகளையும், ராஜாவின் அரமனைப் பொக்கிஷங்களையும், கிரியிருப்பவர்களையும், பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.

யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு, யோவாசின் குமாரனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருஷம் உயிரோடிருந்தான்.

அமத்சியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

அமத்சியா கர்த்தரை விட்டுப் பின்வாங்கின காலமுதற்கொண்டு எருசலேமிலிருந்தவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டார்கள்; அதினிமித்தம் அவன் லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவன் பிறகே லாகீசுக்கு மனுஷரை அனுப்பினார்கள்; அவர்கள் அங்கே அவனைக் கொன்றுபோட்டு,

குதிரைகள்மேல் அவனை எடுத்துவந்து, யூதாவின் நகரத்தில் அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.

மேற்கூறிய வசனங்களில் யூதாவின் ராஜாவாகிய அமத்சியா, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசிடம் சாமர்த்தியத்தை பார்ப்போம் என்று சொல்லியனுப்பினது போல் யோவாஸ் வந்தான்.  இரண்டு பேரும் பெத்ஷிமேசிலே தங்கள் சாமர்த்தியத்தை பார்த்தார்கள்.  யூதா இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்து அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப் போனார்கள்.  இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ், அமத்சியாவை பெத்ஷிமேசிலே பிடித்து எருசலேமுக்கு கொண்டு வந்து, எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல் தொடங்கி மூலை வாசல் மட்டும் நானூறு முழ நீளம் இடித்துப் போட்டு, தேவனுடைய ஆலயத்தில் ஓபேத் ஏதோமின் வசத்திலே அகப்பட்ட வெள்ளியையம், பொன்னையும், சகல பணிமுட்டுகளையும், ராஜாவின் அரமனைப் பொக்கிஷங்களையும், கிரியிருப்பவர்களையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்கு போனான்.  யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்த பின்பு, யூதாவின் ராஜாவாகிய அமத்சியா பதினைந்து வருஷம் உயிரோடிருந்தான் அமத்சியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறது.  அமத்சியா கர்த்தரை விட்டு பின் வாங்கின கால முதற்கொண்டு எருசலேமிலிருந்தவர்கள் அவனுக்கு விரோதமாக கட்டுப்பாடு பண்ணிக்கொண்டதால், அவன் லாகீசுக்கு போனான்; ஆனாலும் அவன் பின்னே லாகீசுக்கு மனுஷரை அனுப்பினார்கள்; அவர்கள் அங்கே அவனைக் கொன்றுப் போட்டு,குதிரைகள் மேல் அவனை எடுத்து வந்து, யூதாவின் நகரத்தில் அவன் பிதாக்களண்டையில் அடக்கம் பண்ணினார்கள்.    

பிரியமானவர்களே,  மேற்கூறப்பட்ட வசனங்களில் அமத்சியாவின் இருதயம்  கர்வங் கொண்டதின் காரணமாக கர்த்தர் அவனை இஸ்ரவேலின் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்து, எருசலேமுக்கு கொண்டுப்போகப்பட்டு, பின்பு அங்கிருந்த பொருட்களை கொள்ளையாடி, அந்த பொருட்கள் சமாரியாவுக்குக் கொண்டுப் போகப்படுகிறது.  இவையென்றால் நாம் அமத்சியாவை போல் கர்த்தரை விட்டு பின் வாங்கிப்போவாதானால். நம் ஆத்துமாவும், அவற்றின் ஆசீர்வாதங்களும் புற தேசமாகிய சமாரியாவுக்குக் கொண்டு போகப்படுகிறது.  மற்றும் நம் உள்ளான மனுஷன் அனுதினம் புதுபிக்கபடாவிட்டால்,அது பாவத்தினால் மாண்டு போகும்.  ஆனால் கிறிஸ்துவின் ஜீவன் அதில் தங்கியிருக்கும்.  இங்கு நாம் பார்க்கும் போது கர்த்தர் திருஷ்டாந்தத்திற்கென்று, யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவை கொண்டு கர்த்தர் விளக்கம் காட்டுகிறார்.  பதினைந்து வருஷம் கர்த்தர் நம்மில் ஆத்துமாவை ஜீவனோடிருக்க வைத்து நாம் உள்ளான மனுஷன் மனந்திரும்பி புதுபிக்கும் படியாக  எதிர்பார்க்கிறார்.  இதனை தான் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு கர்த்தர் பதினைந்து வருஷம் ஆயுசைக் கூட்டுகிறார். இவைகள் தான் நாம் கிறிஸ்துவினால் ஜீவன் பெற்று என்றன்றைக்கும் உயிரோடிருக்கும்படி கர்த்தர் இதனை தெளிவுப்படுத்துகிறார்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவராக நம்மிலிருந்து எழும்புகிறார். ஆதலால் நாம் ஒருபோதும் கர்த்தரை விட்டு பின் வாங்காமல், அவருடைய வசனத்தால் நாம் உயிர்பெற்று கிறிஸ்துவின் ஜீவனால் என்றென்றைக்கும் உயிரோடிருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.