தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா43;15

நானே உங்கள் பரிசுத்தராகிய கர்த்தரும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய உள்ளத்தை அந்நிய தெய்வங்களின் பலிபீடமாக்கக்கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் சத்துருவினால் சிறைப்படுத்தப்படுவோமானால் மீண்டும் மனந்திரும்பி புதுப்பிக்க கடவோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,

II நாளாகமம் 28:20- 27

அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில்நேசர் அவனிடத்தில் வந்தான்; அவனை நெருக்கினானே அல்லாமல் அவனைப் பலப்படுத்தவில்லை.

ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒரு பங்கும், ராஜ அரமனையில் ஒரு பங்கும், பிரபுக்களின் கையில் ஒரு பங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக்கொடுத்தும், அவனுக்கு உதவிகிடைக்கவில்லை.

தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான்.

எப்படியென்றால்: சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணைசெய்கிறபடியினால், அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்குப் பலியிடுவேன் என்று சொல்லி, தன்னை முறிய அடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்; ஆனாலும் அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் நாசமாகிறதற்கு ஏதுவாயிற்று.

ஆகாஸ் தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைச் சேர்த்து, தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைத் துண்டுதுண்டாக்கி, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிப்போட்டு, எருசலேமில் மூலைக்குமூலை பலிபீடங்களை உண்டுபண்ணி,

அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டும்படிக்கு, யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டுபண்ணி, தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமூட்டினான்.

அவனுடைய மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய ஆதியோடந்தமான சகல நடபடிகளும் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை எருசலேம் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் ராஜாக்களின் கல்லறைகளில் அவனைக் கொண்டுவந்து வைக்கவில்லை; அவன் குமாரனாகிய எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் யூதாவின் ராஜாவாகிய ஆகாஸ் கர்த்தருக்கு விரோதமான துரோகம் செய்து. கரத்தரால் தாழ்த்தபட்டிருக்கையில் அசீரியா ராஜாவாகிய திலகாத் பில் நேசர் அவனிடத்தில் வந்து; அவனை நெருக்கினானேயல்லாமல் பலப்படுத்தவில்லை.  ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒரு பங்கும், ராஜ அரமனையில் ஒருபங்கும் எடுத்து அசீரிய ராஜாவுக்கு கொடுத்தும் அவனிடத்திலிருந்து அவனுக்கு உதவிக் கிடைக்கவில்லை.  தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாக துரோகம் செய்துக் கொண்டிருந்தான்.    என்னவென்றால் சீரிய ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்கு துணை செய்கிறபடியினால் அவர்கள் எனக்கும் துணைசெய்ய பலியிடுவேன் என்று சொல்லி, தன்னை முறிய அடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்; அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் நாசமாவதற்கு ஏதுவாயிற்று. ஆகாஸ் தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளை சேர்த்து, அதனை துண்டு துண்டாக்கி, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளை பூட்டிப்போட்டு மூலைக்கு மூலை பலிபீடங்களை உண்டு பண்ணினான். மேலும் அந்நிய தெய்வங்களுக்கு தூபங்காட்டும்படிக்கு யூதாவின் ஒவ்வொரு பட்டணங்களிலும் மேடைகளை உண்டு பண்ணி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு கோபமூட்டினான்.   அவனுடைய மற்ற வர்த்தமானங்களும், ஆதியோடந்த நடபடிகளும் யூத இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தில் எழுதியுள்ளது.  ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்த பின்பு அவனை எருசலேம் நகரத்தில் அடக்கம் பண்ணினார்கள்.  ஆனாலும் இஸ்ரவேல் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை கொண்டு வந்து வைக்கவில்லை; அவன் குமாரனாகிய எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.  

பிரியமானவர்களே,மேற்கூறிய வசனங்களில் எழுதப்பட்டு நமக்கு திருஷ்டாந்தத்திற்கென்று எழுதப்பட்டிருக்கிறது; என்னவென்றால் நம் உள்ளம் கர்த்தரை விட்டு தூரமாகி பின் வாங்கி கர்த்தருக்கு விரோதமாக துரோகம் செய்து நம் மனது விரும்புகிற பிரகாரம் உலக ஆசை இன்பங்களுக்கு இணங்கி போவோமானால் கர்த்தர் அசீரிய ராஜாவாகிய தில்காத் பில்நேசாரை அனுப்புகிறது; எப்படியென்றால் அதிமதிகமாக உலக இன்பங்களையும், அலங்கார வஸ்திரங்களோடும் பலவிதமான இச்சைகளோடும் நடக்கும்படியாக மனதை உறுதிபடுத்தி கொள்கிறவர்களாக இருப்போமல்லாமல், ஆவிக்குரிய பலன்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மனதை பலப்படுத்துவதில்லை.  இவ்விதமாக நம் இருதயம் வஞ்சிக்கப்படுமாகில், நாம் அந்நிய தெய்வங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுத்து பலிபீடம் கட்டி  தூபம் காட்டுகிறவர்களாக மாறி விடுவோம், அவ்விதமாக நாம் கர்த்தருக்கு விரோதமான காரியங்களை நடப்பித்து; கர்த்தருக்கு கோபமூட்டுகிறோம். ஆதலால் கர்த்தருக்கு கோபமுண்டாக்காதபடி அவருக்கு சித்தமானப்பிரகாரம் எந்த அந்நிய கிரியைகளுக்கோ உடன்படாதபடி நடந்து கர்த்தருக்கு மட்டும் நம்முடய இருதயம் பலி செலுத்தும் பலிபீடமாக இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை