தேவனுக்கே மகிமையுண்டாவதாக
லேவியராகமம் 20:26
கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய சரீரமாகிய கிறிஸ்துவின் ஆலயம், சபையாக கூடி சுத்திகரித்து பரிசுத்தபடுத்துகிறவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், கர்த்தர் நம்மை துயரத்துக்கும், திகைப்புக்கும், பழிப்புக்கும் ஒப்புக்கொடாதபடி பாதுகாக்க வேண்டும். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
II நாளாகமம் 29: 9-10
இதோ, இதினிமித்தம் நம்முடைய பிதாக்கள் பட்டயத்தினால் விழுந்து, நம்முடைய குமாரரும் நம்முடைய குமாரத்திகளும் நம்முடைய மனைவிகளும் சிறையிருப்பில் அகப்பட்டார்கள்.
இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடே உடன்படிக்கைபண்ண என் மனதிலே நிர்ணயித்துக்கொண்டேன்.
மேற்கூறிய வசனங்களில் நம்முடைய பிதாக்கள் செய்த குற்றங்களினால் அவர்கள் பட்டயத்தினால் விழுந்து, அவர்களுடைய குமாரரும், குமாரத்திகளும், அவர்களுடைய மனைவிகளும் சிறையிருப்பில் அகப்பட்டார்கள். ஆதலால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய உக்கிரக கோபம் நம்மைவிட்டு திரும்பும்படி அவரோடே உடன்படிக்கை பண்ண நம்முடைய மனதை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். என்ன உடன்படிக்கையென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக இரத்தம் சொரிந்தார். அந்த இரத்தத்தை நாம் விசுவாசித்து அவரோடு உடன்படிக்கை செய்துக் கொள்வோமானால்; பிதாக்கள் செய்த அக்கிரமம் பிள்ளைகளிடத்தில் கர்த்தர் கேட்பதில்லை, நம் ஆத்துமா அவர்கள் பாவத்தினால் சிறைப்படுத்தபடுவதில்லை. ஆதலால் கர்த்தர் சொல்கிறார்;
11நாளாகமம் 29:11
என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ்செய்கிறவர்களும் தூபங்காட்டுகிறவர்களுமாயிருக்கவும் உங்களை அவர் தெரிந்துகொண்டார் என்றான்.
மேற்கூறிய வசனங்களில் அசதியாயிராதேயுங்கள் என்றும், கர்த்தருக்கு பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியம் செய்கிறவர்களாவும், ஜெபிக்கிறவர்களாகவும் இருக்கும்படி நம்மை தெரிந்துக்கொண்டார். இந்த வார்த்தைகளை கேட்டவர்கள் அவருடைய வேலைக்காக எழும்புகிறதை,
11நாளாகமம் 29:12-14
அப்பொழுது கோகாத் புத்திரரில் அமாசாயின் குமாரன் மாகாத்தும், அசரியாவின் குமாரன் யோவேலும், மெராரியின் புத்திரரில் அப்தியின் குமாரன் கீசும், எகலேலின் குமாரன் அசரியாவும், கெர்சோனியரில் சிம்மாவின் குமாரன் யோவாகும், யோவாகின் குமாரன் ஏதேனும்,
எலிச்சாப்பான் புத்திரரில் சிம்ரியும், ஏயெலும், ஆசாப்பின் புத்திரரில் சகரியாவும், மத்தனியாவும்,
ஏமானின் புத்திரரில் எகியேலும், சிமேயியும், எதுத்தூனின் புத்திரரில் செமாயாவும், ஊசியேலும் என்னும் லேவியர் எழும்பி,
வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை போல் நாமும் கர்த்தருக்காய் எழும்பி நம்முடைய சகோதரரை கூடிவர செய்து, பரிசுத்தம் பண்ணிக் கொண்டு, கர்த்தருடைய வசனங்களுக்கொத்த ராஜாவினுடைய கற்பனையின்படியே கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்க வேண்டும். அப்படியாக நாம் எல்லாரும் கிறிஸ்துவின் ஆலயமாகிய நம்முடைய சரீரம் அனுதினம் எந்த அருவருப்புகளும் உள்ளத்தில் வராதபடி நம்மை சுத்திகரித்துக்கொள்கிறவர்களாக இருக்கும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.