தேவனுக்கே மகிமையுண்டாவதாக

Iகொரிந்தியர் 3:17 

ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய சரீரமாகிய கர்த்தரின் ஆலயத்தை அனுதினம் கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரித்து பரிசுத்தபடுத்த வேண்டும்.  

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய சரீரமாகிய கிறிஸ்துவின் ஆலயம், சபையாக கூடி சுத்திகரித்து பரிசுத்தபடுத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

IIநாளாகமம் 29:16-17 

ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்கும்படி உட்புறத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் வெளியே கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் கொண்டுவந்தார்கள்; அப்பொழுது லேவியர் அதை எடுத்து, வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோனார்கள்.

முதல் மாதம் முதல் தேதியிலே அவர்கள் பரிசுத்தம்பண்ணத்துவக்கி, எட்டாந்தேதியிலே கர்த்தருடைய மண்டபத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தை எட்டுநாளில் பரிசுத்தம்பண்ணி, முதலாம் மாதம் பதினாறாம் தேதியில் அதை முடித்தார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் கர்த்தருடைய ஆலயத்தை சுத்திகரிப்பதற்கு ஆசாரியர்கள் உட்பிரவேசித்து,அங்கு கண்ட அசுத்தத்தையும் வெளியே ஆலயப் பிரகாரத்தில் கொண்டு வந்தார்கள்;அப்பொழுது லேவியர் அதை எடுத்து கீதரோன் ஆற்றிற்கு கொண்டு போய்; முதல் மாதம் முதலாம் தேதியிலே அவர்கள் பரிசுத்தம்பண்ண துவக்கி; எட்டாந்தேதியிலே, கர்த்தருடைய மண்டபத்திலே பிரவேசித்து, கர்த்தரின் ஆலயத்தை எட்டாம் நாளில் பரிசுத்தம்பண்ணி, முதலாம் மாதம் பதினாறாம் தேதியிலே அதை முடித்தார்கள்.  பின்பு அவர்கள் எசேக்கியா ராஜாவினிடத்தில் போய் சொன்னது; 

IIநாளாகமம் 29:18-24 

அவர்கள் ராஜாவாகிய எசேக்கியாவினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தரின் ஆலயத்தையும், சர்வாங்க தகனபலிபீடத்தையும், அதினுடைய சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களின் மேஜையையும், அதின் சகல பணிமுட்டுகளையும் சுத்திகரித்து,

ராஜாவாகிய ஆகாஸ் அரசாளும்போது தம்முடைய பாதகத்தினால் எறிந்துபோட்ட சகல பணிமுட்டுகளையும் முஸ்திப்பாக்கிப் பரிசுத்தம்பண்ணினோம்; இதோ, அவைகள் கர்த்தரின் ஆலயத்திற்கு முன்பாக இருக்கிறது என்றார்கள்.

அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான்.

அப்பொழுது ராஜ்யபாரத்திற்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்கடாக்களையும், பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் புத்திரருக்குச் சொன்னான்.

அப்படியே ஆசாரியர் காளைகளை அடித்து, அந்த இரத்தத்தைப் பிடித்துப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்கடாக்களை அடித்து, அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்குட்டிகளையும் அடித்து, அவைகளின் இரத்தத்தையும் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்.

பிற்பாடு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள்.

இஸ்ரவேல் அனைத்திற்காகவும், சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரண பலியையும் செலுத்துங்கள் என்று ராஜா சொல்லியிருந்தான்; ஆதலால் ஆசாரியர் அவைகளை அடித்து, இஸ்ரவேல் அனைத்திற்கும் பாவநிவிர்த்தி உண்டாக்க, அவைகளின் இரத்தத்தால் பலிபீடத்தின்மேல் பிராயச்சித்தஞ்செய்தார்கள்.

மேற்கூறியிருக்கிற வசனங்களில் எழுதியிருக்கிறபடி ஆலயத்தின் எல்லா இடங்களிலும், அதன் பணிமுட்டுகளையும் , மேலும் ஆகாசுடைய ஆளுகையில் இருந்த அவனுடைய பாதகத்தினால் எறிந்து போட்ட சகல பணிமுட்டுகளையும் முஸ்திப்பாக்கி பரிசுத்தப்படுத்தினோம், அது கர்த்தரின் ஆலயத்தின் முன்பாக இருக்கிறது என்றார்கள். அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா, காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக் கொண்டு,கர்த்தரின் ஆலயத்திற்கு போனான்.  பின்பு ராஜ்யபாரத்திற்காகவும், பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்கடாக்களையும் பாவநிவாரணபலியாகக் கொண்டு வந்தார்கள். அவைகளை கர்த்தருடைய பலிபீடத்தின் மேல் பலியிடுங்கள் என்று ஆரோனின் புத்திரராகிய ஆசாரியருக்கு சொன்னான்.  அவர்கள் அதேபோல் வெள்ளாட்டு கடாவை தவிர மற்றவைகளை அடித்து, அதன் இரத்தத்தை எடுத்து பலிபீடத்தின் மேல் தெளித்தார்கள்.  பின்பு பாவ நிவாரண பலிக்காக கொண்டு வந்த வெள்ளாட்டுக் கடாக்களை ராஜாவுக்கும், சபையாருக்கும் முன்பாக கொண்டு வந்தார்கள்.  ராஜா சொன்னது போல் பாவ நிவாரண பலியையும், தகன பலியையும், இஸ்ரவேல் அனைத்திற்கும் பாவ நிவிர்த்தி உண்டாக்க அவைகளின் இரத்தத்தால் பலிபீடத்தின் மேல் பிராயசித்தஞ் செய்தான்.  

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் திருஷ்டாந்தங்கள் என்னவென்றால், நாம் கர்த்தரின் ஆலயமாகவும், நமக்குள்ளிலுள்ள சிந்தனையிலும், செயலிலும், நடத்தையிலும் நம்மில் உள்ள அசுத்தங்கள் எல்லாவற்றையும் நம்மை விட்டு வெளியே அகற்றி, பின்பு கர்த்தரின் சமூகத்தில் நம்முடைய பாவங்களுக்காக கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் கழுவி, நம்முடைய ஆத்துமாவினால் கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியால் பாவ நிவாரண பலிக்காக செலுத்தி, பின்பு நம்முடைய சரீரத்தின் எல்லா அவயங்களையும் கர்த்தருக்காக அர்ப்பணித்து, தகனமாக அவருடைய வார்த்தையினால் தகனித்து, அவ்விதமாக நம்மை பரிசுத்தபடுத்தும் போது, அவருடைய ராஜ்யபாரம் நம்மில் வரும்படியாக பரிசுத்த ஆவியானவர் நம்மேல் இறங்குகிறார்.  அப்போது  நம்முடைய உள்ளத்தை பரிசுத்த ஸ்தலமாக கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிறார். இவ்விதமாக நம்மை அனுதினம் பரிசுத்தப்படுத்திக்கொள்ளும்படியாக ஒப்புக் கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.