தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோசுவா 1:5 

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்மை பரிசுத்தபடுத்தி, இசைகளோடுகூட கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

11நாளாகமம் 30:1-8 

அதன்பின்பு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமில் இருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வாருங்கள் என்று எசேக்கியா இஸ்ரவேல் யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதும் அன்றி, எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.

பஸ்காவை இரண்டாம் மாதத்தில் ஆசரிக்கும்படி, ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் எருசலேமிலுள்ள சபையார் யாவரும் யோசனைபண்ணியிருந்தார்கள்.

ஆசாரியர் போதுமானபேர் தங்களைப் பரிசுத்தம்பண்ணாமலும், ஜனங்கள் எருசலேமில் இன்னும் கூடிவராமலும் இருந்தபடியினால், அதின் காலத்தில் அதை ஆசரிக்கக் கூடாமற்போயிற்று.

இந்தக் காரியம் ராஜாவின் பார்வைக்கும் சமஸ்த சபையின் பார்வைக்கும் நியாயமாய்க் காணப்பட்டது.

எழுதியிருக்கிறபடி வெகுகாலமாய் அவர்கள் அதை ஆசரிக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமுக்கு வாருங்கள் என்று பெயெர்செபாமுதல் தாண்மட்டுமுள்ள இஸ்ரவேல் தேசமெங்கும் பறைசாற்றுவிக்கத் தீர்மானம்பண்ணினார்கள்.

அப்படியே ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கொடுத்த நிருபங்களை அஞ்சல்காரர் வாங்கி, ராஜாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் யூதா எங்கும் போய்: இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம் இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களண்டைக்கு அவர் திரும்புவார்.

தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குத் துரோகம்பண்ணின உங்கள் பிதாக்களைப்போலவும் உங்கள் சகோதரரைப்போலவும் இராதேயுங்கள்; அதற்காக, நீங்கள் காண்கிறபடியே, அவர்கள் பாழாய்ப்போகிறதற்கு ஒப்புக்கொடுத்தாரே.

இப்போதும் உங்கள் பிதாக்களைப்போல உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்கு உடன்பட்டு, அவர் சதாகாலத்துக்கும் பரிசுத்தம்பண்ணின அவருடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு வந்து, உங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவியுங்கள்; அப்பொழுது அவருடைய உக்கிரமான கோபம் உங்களைவிட்டுத் திரும்பும்.

மேற்கூறிய வசனங்களில் உள்ளபடி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு பஸ்காவை ஆசரிக்கும்படி, எருசலேமில் இருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு எசேக்கியா இஸ்ரவேல் யூதா எப்பிராயீம் மனாசே  கோத்திரங்களை அழைக்கும்படியாக நிருபங்களை எழுதியனுப்பினான்.  ஏனென்றால் இரண்டாம் மாதத்தில் ஆசரிக்கும்படி, ராஜாவும், அவனுடைய பிரபுக்களும், எருசலேமிலுள்ள சபையார் அனைவரும் யோசனைப்பண்ணியிருந்தார்கள்.  ஆனால் ஆசாரியர்கள் அநேகம் பேர் தங்களை பரிசுத்தம் பண்ணாமலும், ஜன்கள் எருசலேமில் கூடி வராமலும் இருந்தபடியினால் அவர்கள் பஸ்காவை ஆசரிக்ககூடாமற் போயிற்று.  அதற்காக தான் எல்லாரையும் எசேக்கியா எருசலேமில் கூடி வர செய்தான்.  இந்த காரியம் ராஜாவின் பார்வைக்கும், சமஸ்த சபையின் பார்வைக்கும் நியாயமாய்க் காணப்பட்டது. ஆதலால்  கர்த்தருக்கு பஸ்காவை ஆசரிக்கும்படி  பெயர்செபா முதல் தாண் மட்டுமுள்ள இஸ்ரவேல் தேசமெங்கும் உள்ள ஜனங்கள் எருசலேமுக்கு கூடி வாருங்கள் என ராஜாவாகிய எசேக்கியா பறைசாற்றுவித்தான்.   அப்படியே ராஜாவும், பிரபுக்களும் கொடுத்த நிருபங்களை அஞ்சற்காரர்  வாங்கி, இஸ்ரவேல் யூதா எங்கும் போய் இஸ்ரவேல் புத்திரரிடம் சொன்னது கர்த்தரிடத்திற்கு திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்கு தப்பியிருக்கிற மீதியான உங்களிடத்திற்கு கர்த்தர் திரும்புவார்.  ஆனால் தங்கள் பிதாக்களின் தேவனுக்கு துரோகம் பண்ணின உங்கள் பிதாக்களை போல இராதேயுங்கள் என்றும், நீங்கள் காண்கிறபடியே அவர்கள் பாழாய் போகிறதற்கு ஒப்புக்கொடுத்தாரே.   ஆதலால் உங்கள் பிதாக்களை போல கழுத்தை கடினப்படுத்தாதேயுங்கள்.  நீங்கள் கர்த்தருக்கு உடன்பட்டு, அவர் சதாகாலத்துக்கும் பரிசுத்த ஸ்தலத்திற்கு நீங்கள் வந்து; உங்கள் தேவனாகிய கர்த்தரை சேவியுங்கள். அப்பொழுது அவருடைய உக்கிர கோபம் உங்களை விட்டு திரும்பும்.  மேலும் அவர்கள் சொன்னது,

11நாளாகமம் 30:9  

நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் சகோதரரும் உங்கள் பிள்ளைகளும் தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்த தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள்.

மேற்கூறிய வசனங்களில் உள்ளபடி, நம்முடைய சகோதரருக்கும்  நம்முடைய பிள்ளைகளுக்கும் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக கர்த்தரின் இரக்கம் கிடைத்து அவர்கள் சொந்த தேசத்திற்கு திரும்புவதற்கு அது ஏதுவாகும். உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும், இரக்கமுமானவர்; நீங்கள் அவரிடத்திற்கு திரும்பினால் அவர் தம்முடைய முகத்தை உங்களை விட்டு விலக்குவதில்லை என்றார்கள். 

பிரியமானவர்களே, மேற்கூறிய  வசனங்களில் எழுதியிருக்கிறபடி, கர்த்தருக்காக நாம் பஸ்காவாகிய பரிசுத்த பந்தியில் பங்குக்கொள்கிறவர்கள், தங்களை பரிசுத்தப்படுத்தினால் மட்டுமே பஸ்காவை ஆசரிக்க முடியும். அல்லாமலும் உலக ஆசைகளாகிய அலங்காரங்களிலிருந்து தப்புவிக்கப்பட்டவர்களிடத்தில் மட்டுமே கர்த்தர் திரும்புவார்.  ஆதலால் நம் முன்னோர்களை போல நாம் கழுத்தை கடினப்படுத்தாதபடிக்கு, சதாகாலத்துக்கும் பரிசுத்தப்படுத்தப்பட்ட பரிசுத்த ஸ்தலமாகிய கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குள் வந்து அனுதினம் கர்த்தரை சேவித்து பரிசுத்தப்படுத்தி; அதனதன் நேரத்தில் பஸ்காவை ஆசரிக்க வேண்டும்.  அப்போது நம் முன்னோர்களால்  வந்த தேவனுடைய உக்கிர  கோபம் நம்மை விட்டு திரும்பும், அவர் நம்மிடமாக திரும்புவார்.  இப்படியாக கர்த்தரின் சித்தம் செய்து உண்மையாக சத்தியத்தின் பாதையில் வாழ்வோமானால், நம்முடைய சபையாம் சகோதரர்களும், சபையாம் பிள்ளைகளும் கர்த்தரிடத்திலிருந்து இரக்கம் பெறுவார்கள்.  மேலும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுள்ளவராயிருக்கிறபடியால், அவர் தம்முடைய கிருபையைநம்மை விட்டு விலக்க மாட்டார்  ஆதலால் நாம் எப்போதும் கர்த்தருக்கு முன்பாக உண்மையும், பரிசு்தமும், நேர்மையுமாய் கர்த்தரை சேவிக்கிறவர்களாக ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.