தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மீகா 6:8 

மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாக நாம் மனதாழ்மையணிந்து அனுதினம் நம் உள்ளத்தை சுத்திகரித்துக் கொள்ள வேண்டும் 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

IIநாளாகமம் 30:10-20 

அப்படி அந்த அஞ்சல்காரர் எப்பிராயீம் மனாசே தேசங்களில் செபுலோன்மட்டுக்கும் ஊரூராகத் திரிந்தார்கள்; ஆனாலும் அவர்கள் இவர்களைப்பார்த்து நகைத்துப் பரிகாசம்பண்ணினார்கள்.

ஆகிலும், ஆசேரிலும், மனாசேயிலும், செபுலோனிலும், சிலர் மனத்தாழ்மையாகி எருசலேமுக்கு வந்தார்கள்.

யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும் கட்டளையிட்டபிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று.

அப்படியே இரண்டாம் மாதத்தில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஆசரிக்க வெகு ஜனங்கள் எருசலேமில் மகாபெரிய சபையாய்க் கூடினார்கள்.

அவர்கள் எழும்பி, எருசலேமில் உண்டான பலிபீடங்களையும், தூபபீடங்களையும் அகற்றிக் கீதரோன் ஆற்றிலே போட்டார்கள்.

பின்பு அந்த இரண்டாம் மாதம் பதினாலாந்தேதியில் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்; ஆசாரியரும் லேவியரும் வெட்கி, தங்களைச் சுத்தம்பண்ணி, சர்வாங்க தகனபலிகளைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்து,

தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்ற தங்கள் முறைமையின்படியே தங்கள் ஸ்தானத்திலே நின்றார்கள்; ஆசாரியர் லேவியரின் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித்தெளித்தார்கள்.

சபையிலே அநேகர் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தார்கள்; ஆகையால் சுத்தமில்லாத எல்லாரையும் கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ண, லேவியர் அவர்களுக்காகப் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடிக்கும் காரியத்தை விசாரித்தார்கள்.

அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனுஷரில் ஏராளமான அநேகம் ஜனங்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தும், எழுதியிராதபிரகாரமாகப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள்.

எசேக்கியா அவர்களுக்காக விண்ணப்பம்பண்ணி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரான தேவனைத் தேடும்படிக்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தாங்கம் அடையாதிருந்தாலும், கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லாருக்கும் மன்னிப்பாராக என்றான்.

கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு, ஜனங்களுக்கு அநுகூலஞ்செய்தார்.

மேற்கூறிய வார்த்தைகளில் ராஜவாகிய எசேக்கியாவும், பிரபுக்களும் கொடுத்த நிரூபங்களை அஞ்சற்காரர்கள் வாங்கி எப்பிராயீம் மனாசேயிலும், செபுலோன் மட்டுக்கும் ஊர் ஊராக திரிந்தார்கள்.  ஆனாலும் அவர்கள் இவர்களைப் பார்த்து நகைத்து பரிகாசம் பண்ணினார்கள்.   ஆகிலும்  ஆசேரிலும், செபுலோனிலும், மனாசேயிலும் சிலர் மனதாழ்மையணிந்து எருசலேமுக்கு வந்தார்கள்.  யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும் கட்டளையிட்டபடியே செய்கிறதற்கு தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்துகிறது.  அப்படி இரண்டாம் மாதத்தில் ஏராளமான ஜனங்கள் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஆசரிப்பதற்கு மகா சபையாய் கூடினார்கள். அவர்கள் எழும்பி எருசலேமில் உண்டாயிருந்த பலிபீடங்களையும், தூபப்பீடங்களையும் அகற்றி கீதரோன் ஆற்றில் போட்டார்கள்.  பின்பு அதே மாதம் பதினாலாந் தேதியிலே பஸ்காவின் ஆட்டிக்குட்டியை அடித்தார்கள்; ஆசாரியரும், லேவியரும் வெட்கி, தங்களை சுத்தம் பண்ணி, சர்வாங்க தகன பலிகளை கர்த்தருடைய ஆலயத்திற்கு கொண்டு வந்து, கர்த்தர் மேசேயின் மூலம் கொடுத்த நியாயப்பிரமாண முறைமைகளின் படியே தங்கள் ஸ்தானத்திலே நின்றார்கள்; ஆசாரியர் லேவியரின் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித் தெளித்தார்கள்.  சபையிலே அநேகர் தங்களை சுத்திகரித்துக் கொள்ளாததினால், சுத்தமில்லாத எல்லாரையும், கர்த்தருக்கு பரிசுத்தம் பண்ண, லேவியர் அவர்களுக்காக பஸ்கா ஆட்டுக்குட்டியை அடிக்கும் காரியத்தை விசாரித்தார்கள். மற்றும் எப்பிராயீம் மனாசே இசக்கார் செபுலோன் மனுஷரில்  அநேகர் பேர் தங்களை சுத்தம் பண்ணிக்கொள்ளாதிருந்தார்கள்.  மேலும் எழுதியிராதப் பிரகாரம் பஸ்காவை சாப்பிட்டார்கள்.  எசேக்கியா அவர்களுக்காக விண்ணப்பம் பண்ணி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரான தேவனை தேடும்படிக்கு தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தாங்கம் அடையாதிருந்தாலும், கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லாருக்கும் மன்னிப்பாராக என்றான்.  கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு, ஜனங்களுக்கு அனுகூலம் செய்தார். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்கள் நமக்கு திருஷ்டாந்தத்திற்கென்று கொடுக்கப்பட்டிருக்கிறது. என்னவென்றால் கர்த்தருடைய வார்த்தைகளை கேட்கிறவர்களில் சிலர் அதனை பரிகசிப்பார்கள்.  அப்படி பரிகசிக்கிறவர்களின் கூட்டத்திலிருந்தும் சிலரை கர்த்தர் தமக்கென்று பிரித்தெடுத்து அவருக்காய் ஒருமனப்படுத்துகிறார்.   இவ்விதம் ஒருமனப்படுத்தப்படும் போது மனதாழ்மையை தரித்துக்கொண்டவர்களாய் எருசலேமாகிய கிறிஸ்துவுக்குள் கடந்து வந்து, சபையாக கூடி கர்த்தருக்கு ஆராதனை செய்து; புளிப்பில்லாத அப்பப்பண்டிகை ஆசரிக்கிறவர்களாக காணப்படவேண்டும்.  அவ்விதம் புளிப்பில்லாத அப்பமாகிய கிறிஸ்துவின் சுவிசேஷம் ஏற்றுக்கொண்டு, பின்பு நம்முடய உள்ளத்தின் எல்லா அசுத்தங்களும் நீங்க நம்மை சுத்திகரித்திக் கொண்டு பஸ்கா புசிக்கும்படியான ஆயத்தங்களை செய்ய வேண்டும். ஆனால் நாம் ஒருபோதும் சுத்தாங்கம் அடையாமல் பஸ்கா புசிக்கக்கூடாது.  ஆனால் நம்மை சுத்திகரித்து கொள்ளாமல் நாம் யாராவது பஸ்கா ஆசரித்து இருந்தோமானால்; இந்நேரத்தில் கர்த்தரின் சந்நிதியில் நாம் தாழ்மையடைந்து, நாம் செய்த தப்பிதங்களுக்காக வெட்கி, மீண்டும் அசுத்தங்களை நம்மிலிருந்து மாற்றிக்கொண்டால் கிறிஸ்து நமக்காக வேண்டுதல் செய்யும் போது; கர்த்தர் நமக்கு அனுகூலமாயிருப்பார்; நம்முடைய பாவங்களை மன்னிப்பார்.  இப்படியாக நம்மை அனுதினம் சுத்திகரித்து கொள்கிறவர்களாக நம்மை ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.