தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 8:13

சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை இருதயத்தில் பரிசுத்தம் பண்ணி பஸ்கா புசித்து, கர்த்தரை தினம் தினம் போரோசையுள்ள கீதத்தால் துதிக்க வேண்டும். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாக நாம் மனதாழ்மையணிந்து அனுதினம் நம் உள்ளத்தை சுத்திகரித்துக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

IIநாளாகமம் 30:21 - 27

அப்படியே எருசலேமிலே காணப்பட்ட இஸ்ரவேல் புத்திரர் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளளவும் மகா ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்; லேவியரும் ஆசாரியரும் தினந்தினம் கர்த்தருக்கென்று பேரோசையாய்த் தொனிக்கும் கீதவாத்தியங்களால் கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.

கர்த்தருக்கு அடுத்த காரியத்தில் நல்ல உணர்வுள்ள எல்லா லேவியரோடும் எசேக்கியா பட்சமாய்ப் பேசினான்; இப்படி அவர்கள் பண்டிகையின் ஏழுநாள் அளவும் புசித்து, ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.

பின்பு வேறே ஏழுநாளளவும் ஆசரிக்கச் சபையார் எல்லாரும் யோசனைபண்ணி, அந்த ஏழுநாளும் ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்.

யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சபைக்கு ஆயிரம் காளைகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கொடுத்தான்; பிரபுக்களும் சபைக்கு ஆயிரம் காளைகளையும் பதினாயிரம் ஆடுகளையும் கொடுத்தார்கள்; ஆசாரியரில் அநேகம்பேர் தங்களைச் சுத்தம்பண்ணினார்கள்.

யூதாவின் சபையனைத்தும், ஆசாரியரும், லேவியரும், இஸ்ரவேலிலிருந்து வந்தவர்களுடைய சபையனைத்துமாகிய இஸ்ரவேல் தேசத்திலிருந்துவந்த அந்நியரும் யூதாவில் குடியிருந்தவர்களும் மகிழ்ச்சியாயிருந்தார்கள்.

அப்படியே எருசலேமில் மகா சந்தோஷம் உண்டாயிருந்தது; தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள்முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை.

லேவியரான ஆசாரியர்கள் எழுந்துநின்று, ஜனத்தை ஆசீர்வதித்தார்கள்; அவர்களுடைய சத்தம் கேட்கப்பட்டு, அவர்களுடைய விண்ணப்பம் அவருடைய பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் வந்து எட்டினது.

மேற்கூறிய வசனங்களில் இஸ்ரவேலர் சுத்தாங்கம் அடையாமல் பஸ்காவை புசித்ததினால் , ராஜாவாகிய எசேக்கியா அவர்களுக்காக கர்த்தரிடத்தில் விண்ணப்பித்ததினால், கர்த்தர் அவர்களுக்கு அனுகூலம் செய்தார்.  பின்பு எருசலேமிலே காணப்பட்ட இஸ்ரவேல் புத்திரர் புளிப்பில்லாத அப்பப் பண்டிகையை ஏழு நாளளவும் மகா ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்; லேவியரும் ஆசாரியரும் கர்த்தருக்கென்று பேரோசையாய் தொனிக்கும் கீத வாத்தியங்களால் கர்த்தரை துதித்துக் கொண்டிருந்தார்கள். கர்த்தருக்கடுத்த காரியத்தில் நல்ல உணர்வுள்ள லேவியரோடும் பட்சமாய் எசேக்கியா பேசினான்.  இப்படி அவர்கள் பண்டிகையின் ஏழு நாளளவும் புசித்து, ஸ்தோத்திர பலிகளை செலுத்தி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை துதித்துக் கொண்டிருந்தார்கள்.  அல்லாமலும் சபையார் வேறு ஏழு நாளளவும் ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள். இவ்விதமாக நாமும் கர்த்தரின் புளிப்பில்லாத  அப்பமாகிய கிறிஸ்துவின் சுவிசேஷ வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, அவரை துதிக்கும் சத்தத்தை உயர்த்தி, ஆனந்தத்தோடே ஆசரிக்க வேண்டும்.   மற்றும் தினம் தினம் கர்த்தருக்கென்று பேரோசையாய் தொனிக்கும் கீத வாத்தியங்களல் கர்த்தரை துதிக்க வேண்டும். ஏராளமான துதி ஸ்தோத்திரங்களை கர்த்தருக்கு செலுத்தி நம்மை சுத்திகரித்துக்கொள்ள வேண்டும்.  இவ்விதம் நாம் கர்த்தருக்கு  ஆராதனை செய்யும் போது நம் உள்ளம் மகிழ்ச்சியடையும்.  அவ்விதம் கர்த்தருக்கு ஆராதனை செய்து நம் உள்ளம் மகிழும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை ஆசீர்வதிப்பார்; மட்டுமல்ல நம்முடைய விண்ணப்பம் பிதாவின் சந்நிதியில் எட்டுகிறது.  இவ்விதமாக நாம் கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.