தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எசேக்கியல் 36:37
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம்பண்ணவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சபைகள் பெருகுவதற்கு காரணமாகயிருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை இருதயத்தில் பரிசுத்தம் பண்ணி பஸ்கா புசித்து, கர்த்தரை தினம் தினம் போரோசையுள்ள கீதத்தால் துதிக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
11நாளாகமம் 31:1-7
இவையெல்லாம் முடிந்தபின்பு, வந்திருந்த இஸ்ரவேலர் எல்லாரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், யூதா பென்யமீன் எங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலுங்கூட உண்டான சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் தகர்த்துப்போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல்புத்திரர் எல்லாரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் காணியாட்சிக்குத் திரும்பினார்கள்.
எசேக்கியா ஆசாரியர் லேவியருடைய வகுப்புகளை அவர்கள் வரிசைகளின்படியேயும், அவரவரை அவர்கள் ஊழியத்தின்படியேயும் திட்டப்படுத்தி, ஆசாரியரையும் லேவியரையும், சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தவும், கர்த்தருடைய பாளயத்தின் வாசல்களில் ஊழியஞ்செய்து துதித்து ஸ்தோத்திரிக்கவும் ஒழுங்குப்படுத்தினான்.
ராஜா கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே அந்திசந்திகளில் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும் தன் ஆஸ்தியிலிருந்தெடுத்துத் தன் பங்கைக் கொடுத்தான்.
ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாய்க் கைக்கொள்ளும்படி, அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.
இந்த வார்த்தை பிரசித்தமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரத்திலும் முதற்பலன்களைத் திரளாகக்கொண்டுவந்து, சகலத்திலும் தசமபாகத்தைப் பரிபூரணமாய்க் கொடுத்தார்கள்.
யூதாவின் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரவேல் புத்திரரும், யூதாபுத்திரரும், மாடுகளிலும் ஆடுகளிலும் தசமபாகத்தையும், தங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளில் தசமபாகத்தையும் கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்தார்கள்.
மூன்றாம் மாதத்தில் குவியல் செய்யத்தொடங்கி ஏழாம் மாதத்தில் முடித்தார்கள்.
மேற்கூறிய வசனங்களில் ராஜாவாகிய எசேக்கியா ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணின பின்பு கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்த பின்பு வந்திருந்த இஸ்ரவேலர் எல்லாரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டு போய் , யூதா பென்யமீனெங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலும்கூட உண்டான சிலைகளை உடைத்து, விக்கிரக தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து; அவைகளையெல்லாம் தகர்த்துப் போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் காணியாட்சிக்குத் திரும்பினார்கள். பின்பு எசேக்கியா ஆசாரியர் லேவியருடைய வகுப்புகளை எல்லாம் வரிசைகளின்படியேயும், அவரவர் அவர்கள் ஊழியத்தின்படியேயும் திட்டப்படுத்தி, ஆசாரியரையும், லேவியரையும், சர்வாங்க தகன பலிகளையும், சமாதான பலிகளையும் செலுத்தவும், கர்த்தருடைய பாளயத்தின் வாசல்களில் ஊழியஞ் செய்து துதித்து ஸ்தோத்தரிக்கவும் ஒழுங்குப்படுத்தினான். மேலும் ராஜா கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிற படி அந்திசந்திகளில் செலுத்த வேண்டிய பலிகளில் தகனபலிக்கும், ஓய்வு நாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்த வேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும் தன் ஆஸ்தியிலிருந்தெடுத்து தன் பங்கை கொடுத்தான். ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாக கைக்கொள்ள, அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான். இந்த வார்த்தை பிரசித்தமான போது இஸ்ரவேல் புத்திரர் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரத்திலும் முதற்பலன்களைத் திரளாக கொண்டு வந்து, சகலத்திலும் தசம பாகத்தைப் பரிபூரணமாய் கொடுத்தார்கள். இஸ்ரவேல் புத்திரரும், யூதா புத்திரரும் மாடுகளிலும் ஆடுகளிலும் தசமபாகத்தையும், தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பரிசுத்தம் பண்ணப்பட்டவைகளில் தசம பாகத்தைக் கொண்டு வந்து குவியல் குவியலாக வைத்தார்கள். மூன்றாம் மாதத்தில் குவியல் செய்யத் தொடங்கி ஏழாம் மாதத்தில் முடித்தார்கள். பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது நம்முடைய ஆசீர்வாதம் என்றால் நாம் கர்த்தருக்குள் முழுமையாக பரிசுத்தமாகுதல் ஆகும். என்னவென்றால் பரிசுத்தப்படுத்தி, கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஆசீர்வாதமோவென்றால் நம் உள்ளத்தில் எந்த விக்கிரங்களுக்கோ,சிலைகளுக்கோ இடங்கொடாதாபடி அதனை உடைத்து, உள்ளத்தின் மேடையான பீடங்களை தகர்க்கும் போது, நம் இரட்சிப்பு நமக்கு கிடைக்கிறது தான் கர்த்தரால் பெற்றுக் கொள்கிற ஆசீர்வாதம் என்பதனை புரிந்துக்கொள்ள வேண்டும். அவ்விதம் செய்கிறவர்களை கர்த்தர் லேவியரும், ஆசாரியருமாக்கி அவரவருக்கு கர்த்தர் வைத்திருக்கிற ஊழியத்தின்படி திட்டப்படுத்தி, நாம் கர்த்தருக்கு செலுத்த வேண்டிய ஸ்தோத்திரபலிகளை செலுத்தி, அவருக்கு ஊழியம் செய்து, ஸ்துதிக்கவும் ஸ்தோத்திரம் செலுத்துகிறவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படியாக நாம் கர்த்தருக்கு அந்தி சந்தி பலிகளை செலுத்துவதும், தகனபலிகளுக்கும்; எல்லா நாளும் கிறிஸ்துவாக இருப்பதால் தினந்தோறும் நம் தேவனுக்கு நம் உள்ளத்திலிருந்து பலிகளை செலுத்துகிறவர்களாகயிருக்க வேண்டும். அப்படியாக எல்லாரும் உற்சாகமான பலிகளை செலுத்த வேண்டும். அப்படி நாம் கர்த்தருக்கு உற்சாக பலிகளை செலுத்துவோமானால் கர்த்தரின் வசனத்தாலும், கிருபையினாலும், அவர் அபிஷேகத்தாலும், அவருடைய மகிமையின் ஐசுவரியத்தாலும், நமக்கு கர்த்தர் தந்த ஆத்தும பலன்களில் முதற்பலன்களாகிய கிருபா வரங்கள் யாவையும் கர்த்தருக்காய் கொடுக்கிறவர்களாகயிருக்க வேண்டும். இவ்விதமான ஆசீர்வாதங்கள் நாம் பெற்றுக்கொள்ளும் போது கர்த்தர் நம்மை சபையின் வளர்ச்சிக்கும், அநேக சபைகள் பெருகுவதற்கு அது காரணமாகும். இப்படியாக நாம் நம்மை ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.