தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மல்கியா 3:10 

என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்குரிய காணிக்கை காரியத்தில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சபைகள் பெருகுவதற்கு காரணமாய் இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,

11நாளாகமம் 31:9-12 

அந்தக் குவியல்களைக் குறித்து எசேக்கியா ஆசாரியரையும் லேவியரையும் விசாரித்தபோது,

சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தோம்; இன்னும் மிச்சமும் இருக்கிறது; கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றான்.

அப்பொழுது எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்தில் பண்டகசாலைகளை ஆயத்தப்படுத்தச் சொன்னான்.

அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளையும் உண்மையாய் எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாயிருந்தான்.

மேற்கூறிய வசனங்களில் ராஜாவாகிய எசேக்கியாவும், பிரபுக்களும் குவியல் குவியலாக இஸ்ரவேலர் காணிக்கைகளை கொண்டு வந்ததை கண்டு கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, இஸ்ரவேலை புகழ்ந்தது மட்டுமல்ல அதனைக் குறித்து ஆசாரியரிடமும், லேவியரிடமும் விசாரித்தப்போது சாதோக்கின் சந்ததியான அசரியா என்னும் பிரதான ஆசாரியன் ராஜாவிடம் சொன்னது என்னவென்றால்; இந்த காணிக்கை கர்த்தரின் ஆலயத்திற்கு கொண்டு வர தொடங்கினது முதல் நாங்கள் திருப்தியாக சாப்பிட்டு, மிச்சமும் இருக்கிறது;கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்த திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றான்.  அப்போது எசேக்கியா ராஜா கர்த்தருடைய ஆலயத்தின் பண்டக சாலையை ஆயத்தப்படுத்த சொன்னான்.  அதனை ஆயத்தப்படுத்தின பின்பு காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளையும் உண்மையாக அதில் எடுத்து வைத்தார்கள்.  அவைகளின் மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும் அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதாயிருந்தான் மேலும் ராஜாவாகிய எசேக்கியாவும்,தேவனுடைய  ஆலயத்தின் விசாரிப்புக்காரனாகிய அசரியாவும் பண்ணின கட்டளையின்படியே, 

11நாளாகமம் 31:13-15 

ராஜாவாகிய எசேக்கியாவும், தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் பண்ணின கட்டளையின்படியே, யெகியேலும், அகசியாவும், நாகாத்தும், ஆசகேலும், யெரிமோத்தும், யோசபாத்தும், ஏலியேலும், இஸ்மகியாவும், மாகாத்தும், பெனாயாவும், கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.

கிழக்குவாசலைக் காக்கிற இம்னாவின் குமாரனாகிய கோரே என்னும் லேவியன், கர்த்தருக்குச் செலுத்தப்பட்ட காணிக்கைகளையும் மகா பரிசுத்தமானவைகளையும் பங்கிடும்படிக்கு, தேவனுக்குச் செலுத்தும் உற்சாகக் காணிக்கைகள்மேல் அதிகாரியாயிருந்தான்.

அவனுடைய கைக்கு உதவியாக ஆசாரியரின் பட்டணங்களில் வகுப்புகளின்படியிருக்கிற தங்கள் சகோதரரிலே பெரியவனுக்கும் சிறியவனுக்கும் சரிசமானமாய்க் கொடுக்கும்படிக்கு, உண்மையுள்ளவர்களாக எண்ணப்பட்ட ஏதேனும், மின்யமீனும், யெசுவாவும், செமாயாவும், அமரியாவும், செக்கனியாவும் ஏற்படுத்தப்பட்டார்கள்.

மேற்கூறப்பட்ட வசனத்தில் எழுதப்பட்டவர்கள் கொனானியாவின் கீழும், அவன் தம்பியாகிய சீமேயின் கீழும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள். கிழக்கு வாசலைக் காக்கிற இம்னாவின் குமாரனாகிய கோரே என்னும் லேவியன், கர்த்தருக்குச் செலுத்தப்பட்ட காணிக்கைகளையும் மகா பரிசுத்தமானவைகளையும் பங்கிடும்படிக்கு, தேவனுக்கு செலுத்தும் உற்சாக காணிக்கையின் மேல் அதிகாரியாயிருந்தான். மேலும் காணிக்கைகளை தங்கள் சகோதரரிலே பெரியவனுக்கும், சிறியவனுக்கும் சரிசமானமாய் கொடுக்கும்படி, உண்மையுள்ளவர்களாக எண்ணப்பட்ட ஏதேனும், மின்யமீனும், யெசுவாவும், செமாயாவும், அமரியாவும், செக்கனியாவும், ஏற்படுத்தப்பட்டார்கள். வம்ச அட்டவணையில் எழுதப்பட்ட மூன்று வயது முதல், அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளை தவிர, கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் வகுப்புகளின்படியே, தாங்கள் பணிவிடைக்கு தக்கதாய் அனுதினபடி கொடுக்கப்பட்டது. மேலும் தங்கள் வகுப்புகளின்படி இருபது வயது முதல் அதற்கு மேற்பட்ட ஆசாரியருக்கும் லேவியருக்கும், அவர்களுடைய கூட்டத்தில் அட்டவணையில் எழுதப்பட்டுள்ள எல்லா குழந்தைகளுக்கும், மனைவிகளுக்கும், குமாரருக்கும், குமாரத்திகளுக்கும் பங்கு கொடுத்தார்கள்.  அவர்கள் பரிசுத்தமானதை பரிசுத்தமாய் விசாரித்தார்கள்.  மற்றும் ஆசாரியரில் எல்லா ஆண் பிள்ளைகளுக்கும், லேவியரில் அட்டவணையில் எழுதப்பட்டவர்கள் எல்லாருக்கும் படி கொடுக்க ஆரோன் புத்திரரில் பேர்பேராக குறிக்கப்பட்ட மனுஷர் இருந்தார்கள்.    இந்த பிரகாரமாக எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும், உண்மையுமானதை செய்தான்.    அவன் தன் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலும், தன் தேவனை தேடும் நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் அடுத்த காரியத்திலும் என்ன செய்ய தொடங்கினானோ அதையெல்லாம் தன் முழு இருதயத்தோடும செய்தான்.  

பிரியமானவர்களே,  நாம் கர்த்தருக்காக காணிக்கைக் கொடுப்போமானால், கர்த்தர் நம்மை ஆவிக்குரிய ஆசீர்வாதங்களாலும், உலக ஆசீர்வாதங்களாலும் நம்மை ஆசீர்வதிப்பார். நாம் கர்த்தருக்கு கொடுக்கிற காணிக்கையை கர்த்தர் பரிசுத்தப்படுத்துகிறார்.  கர்த்தருக்கு கொடுக்கிற காணிக்கையில் கர்த்தரின் வேலை செய்கிறவர்கள் திருப்தியாக சாப்பிடவும் மேலும் அவர்கள் இருபது வயதிற்கு மேற்பட்டசந்ததிகளும், கர்த்தரின் ஆலயத்தில் வேலை செய்கிறவர்கள் யாவருக்கும் கர்த்தரால் உள்ள ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளவும் ஏதுவாகும்.இவ்விதம் கர்த்தருக்குரிய காணிக்கையையும், தசமபாக காணிக்கையையும்  கர்த்தரின் ஆலயத்தில் வைக்கவேண்டும்.  இப்படியாக கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதை நாம் செய்ய வேண்டும்.  இவ்விதமாக தேவனுடைய ஆலயத்தின் வேலையிலும், தன் தேவனை தேடும்படிக்கு நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் அடுத்த காரியத்தை எல்லாம் நாம் முழு இருதயத்தோடு செய்து கர்த்தரிடத்திலிருந்து சித்திப் பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.