தேவனுக்கே மகிமையுண்டாவதாக
மத்தேயு 26:19
இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் ஒரு புதிய திருப்பத்தோடு பஸ்காவாகிய பரிசுத்த ஆராதனையை ஆயத்தம்பண்ணி திட்டம்பண்ணுவோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் அனுதினம் நம்மை பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
11நாளாகமம் 35:16-19
அப்படியே ராஜாவாகிய யோசியாவினுடைய கட்டளைப்படி, பஸ்காவை ஆசரிக்கிறதற்கும், கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளை இடுகிறதற்கும் அடுத்த கர்த்தருடைய ஆராதனையெல்லாம் அன்றையதினம் திட்டமாய்ச் செய்யப்பட்டது.
அங்கே வந்திருந்த இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்தில் பஸ்காவையும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகையையும் ஏழு நாளளவும் ஆசரித்தார்கள்.
தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் நாள்தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியரும், லேவியரும், யூதாவனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை.
யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது.
ராஜாவாகிய யோசியா சபையை பரிசுத்தம் செய்து பஸ்கா ஆயத்தம் பண்ணின பின்பு, அங்கே வந்திருந்த இஸ்ரவேல் புத்திரர் பஸ்காவையும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகையையும் ஏழுநாளளவும் ஆசரித்தார்கள். தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் நாள் தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை; மேலும் ராஜாவும், ஆசாரியரும், லேவியரும், யூதாவனைத்தும் , இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமில் வந்திருந்தவர்களும், எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப் போல் இதற்கு முன் ஒருபோதும் இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை. யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே இந்த பஸ்கா ஆசரிக்கப்பட்டது.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட பகுதிகளை நாம் தியானித்தால் நம்மில் இதுவரையில் இல்லாத ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்னவென்றால் நம்மில் அநேகர் பேர் பஸ்காவாகிய பரிசுத்தபந்தியை, ஏதோ கடமை என்று நினைத்து, பரிசுத்தப்படுத்துதலை உணராமல் தங்கள் மனம் போன போக்கில் வாழ்ந்துக்கொண்டு பந்தியில் புசிக்கிறோம். ஆனால் இந்நாட்களில் மேலே கூறியப்பிரகாரம் கர்த்தரின் பரிசுத்த ஆராதனையை விசேஷமாக திட்டம்பண்ணி பஸ்காவை ஏழுநாள் உபவாசத்தால் கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருந்து நம்மை முழுமையும் சுத்திகரித்து பரிசுத்தமாக ஆசரிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.