தேவனுக்கே மகிமையுண்டாவதாக

 சங்கீதம் 25:15 

என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் தேவ ஆலோசனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் ஒரு புதிய திருப்பத்தோடு பஸ்காவாகிய பரிசுத்த ஆராதனையை ஆயத்தம்பண்ணி திட்டம்பண்ணுவோம் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

11நாளாகமம் 35:20-27

யோசியா தேவாலயத்திற்கு அடுத்ததைத் திட்டப்படுத்தின இந்த எல்லா நடபடிகளுக்கும்பின்பு, எகிப்தின் ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண வந்தான்; அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப் புறப்பட்டான்.

அவன் இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்கவேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடைசெய்வதை விட்டுவிடும் என்று சொல்லச் சொன்னான்.

ஆனாலும் யோசியா தன் முகத்தை அவனை விட்டுத் திருப்பாமலும், நேகோ சொன்ன தேவனுடைய வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடாமலும், அவனோடே யுத்தம்பண்ண வேஷம்மாறி, மெகிதோவின் பள்ளத்தாக்கிலே யுத்தம்பண்ணுகிறதற்கு வந்தான்.

வில்வீரர் யோசியா ராஜாவின்மேல் அம்பெய்தார்கள்; அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்றான்.

அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அந்த இரதத்தின் மேலிருந்த அவனை இறக்கி, அவனுக்கு இருந்த இரண்டாவது இரதத்தின்மேல் ஏற்றி அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவன் மரணமடைந்து தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்; யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் யோசியாவுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.

எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகரும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின்மேல் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழங்கிவருகிறது; அவைகள் புலம்பலின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதற்கொத்த அவன் செய்த நன்மைகளும்,

 அவனுடைய ஆதியோடந்த நடபடிகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின்புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

மேற்கூறப்பட்ட வசனங்களில் யோசியா ராஜாவின் ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே பரிசுத்த பஸ்கா ஆசரிக்கப்பட்டு முடிந்த பின்பு, தேவாலயத்திற்கு அடுத்ததை திடப்படுத்தின எல்லா நடபடிகளுக்கு பின்பு, எகிப்தின் ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டணத்தின் மேல் யுத்தம் பண்ண வந்தான்; அப்போது யோசியா அவனுக்கு விரோதமாய் யுத்தம் பண்ண புறப்பட்டான்.   அவன் எகிப்தின் ஸ்தானாபதிகளை அனுப்பி; யூதாவின் ராஜாவே, எனக்கும், உமக்கும் என்ன? அவன் சொன்னது, நான் உமக்கு விரோதமாக அல்ல, என்னோடு யுத்தம் பண்ணுகிவர்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ண போகிறேன்; நான் தீவிரமாய் போக வேண்டும் என்று தேவன் சொன்னதினால் தேவன் என்னோடிருக்கிறார்.  ஆதலால் அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரியாக செய்வதை விட்டு விடும்  என்று சொல்ல சொன்னான்.  ஆனாலும் யோசியா தன்  முகத்தை அவனை விட்டு திருப்பாமலும், நேகோ சொன்ன தேவனுடைய வாயின் வார்த்தைகளுக்கு செவிக்கொடாமலும், அவனோடே யுத்தம் பண்ண வேஷம் மாறி மெகிதோவின் பள்ளதாக்கிலே யுத்தம் பண்ண வந்தான்.  வில்வீரர் யோசியா ராஜாவின் மேல் அம்பெய்ததினால், தன் ஊழியக்காரரை நோக்கி என்னை அப்புறம் கொண்டு போங்கள், எனக்கு கொடிய காயம்பட்டது என்றான். அப்போது அவனுடைய ஊழியக்காரர் இரதத்தின் மேலிருந்து அவனை இறக்கி, அவனுக்கு இருந்த இரண்டாவது இரதத்தின் மேல் ஏற்றி அவனை எருசலேமுக்கு கொண்டு வந்தார்கள்; அவன் மரணமடைந்து தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்.  யூதாவிலும், எருசலேமிலுமுள்ள யாவரும் யோசியாவுக்காக துக்கங்கொண்டாடினார்கள்.  எரேமியா யோசியாவின் மேல் புலம்பல் பாடினான்.  சகல பாடகரும், பாடகிகளும், இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின் மேல் பாடுகிறார்கள்.  அவன் செய்த நன்மைகளும் அவனுடைய ஆதியோடந்த நடபடிகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்கள் நாம் தியானிக்கையில் நாம் கர்த்தருக்குரிய காரியங்களில் எவ்வளவு பரிசுத்த வாழ்வு வாழவேண்டும் என்று நினைத்து பரிசுத்தமாய்  ஆசரித்தாலும்,நம் இருதயத்தை அவர் சோதிக்கும்படி கடந்து வரும்போது நம்முடைய கீழ்படிதலும்,  அவர் ஆலோசனைப்பிரகாரம் நடக்கிறோமா என்றும் பார்க்கிறார்.  அவ்விதம் நம்மை சோதிக்கும் போது, நாம் மாமிச சிந்தைகளுக்கேற்ற பிரகாரம் எந்த காரியங்கள் செய்தாலும், மற்றும் அவர் சித்தம் இல்லாத இடங்களுக்கு போவோமானால் சத்துருவின் கையில் நம்மை ஒப்புக்கொடுப்பது மட்டுமல்ல, நம்மை கைவிடுவார்.  அப்படியாக அவர் நம்மை கைவிடும்போது, நம் ஆத்துமா வஞ்சிக்கப்பட்டு கொல்லப்படும்.  ஆதலால் எப்போதும் கர்த்தரின் ஆலோசனைக்காக காத்திருக்க வேண்டும்.  இப்படி கருத்தோடு கர்த்தரை தேடும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.