தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 43:15
நானே உங்கள் பரிசுத்தராகிய கர்த்தரும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா பாபிலோனாகிய உலகத்தின் ஆவியால் வஞ்சிக்கப்படாமல் அனுதினம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் தேவ ஆலோசனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
11நாளாகமம 36:1-8
அப்பொழுது ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை எருசலேமிலே அவன் தகப்பன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.
யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதம் எருசலேமில் அரசாண்டான்.
அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான தண்டத்தைச் சுமத்தி,
அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.
யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொரு வருஷம் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
அவனுக்கு விரோதமாகப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டினான்.
கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளிலும் சிலவற்றை நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவர்களைப் பாபிலோனிலுள்ள, தன்னுடைய கோவிலிலே வைத்தான்.
யோயாக்கீமுடைய மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்ததும், அவனிடத்திலே கண்டுபிடிக்கப்பட்டதுமான அவனுடைய அருவருப்புகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோயாக்கீன் ராஜாவானான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் ராஜாவாகிய யோசியா மரணமடைந்த பின்பு, அவன் குமாரனாகிய யோவாகாசை அழைத்து அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள். அவன் ராஜாவாகிற போது அவனுக்கு இருபத்து மூன்று வயதாயிருந்து, மூன்று மாதம் எருசலேமில் அரசாண்டான். அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா, அவனைத்தள்ளிவிட்டு, தேசத்தின் மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒருதாலந்து பொன்னுமான தண்டத்தை சுமத்த, அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் ராஜாவாக்கி,அவன்பேரை யோயாக்கீம் என்று மாற்றி யோவகாசை எகிப்திற்கு கொண்டு போனான். யோயாக்கீம் ராஜாவாகிற போது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொரு வருஷம் எருசலேமில் அரசாண்டு,தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தான். அவனுக்கு விரோதமாக பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத் நேச்சார் வந்து அவனை பாபிலோனுக்கு கொண்டு போக இரண்டு வெண்கல சங்கிலிகளால் அவனை கட்டினான். கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளில் சிலவற்றை நேபுகாத் நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டு போய், அவைகளை பாபிலோனிலுள்ள தன்னுடைய கோவிலிலே வைத்தான். யோயாக்கீமுடைய மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சகல அருவருப்புகளும், இஸ்ரவேல், யூதா ராஜாக்களின் புஸ்தகததில் எழுதியிருக்கிறது; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரன் யோயாக்கீன் ராஜாவானான். பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வார்த்தைகளில் நம்முடைய ஆத்துமா கர்த்தரின் வசனத்தால் வேலியடைத்து பாதுகாத்துக்கொள்ளாவிட்டால், நாளுக்கு நாள் எப்படி கெட்டுப்போகிறது என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். என்னவென்றால் நாம் கிறிஸ்துவினால் தேவனிடத்தில் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்ட பின்பு; ஏதாவது பழைய பாரம்பரிய பாவ வாழ்வில் ஏதாவது ஒரு காரியத்தை செய்தாலும் நாம் எகிப்தின் ராஜாவுக்கு அடிமையாகி, ஒவ்வொரு காரியமாக சாத்தான் நம் உள்ளத்தை வஞ்சித்து பின்பு முழுமையும் உலகத்தின் ஆவியால் நிரப்பப்பட்டு பாபிலோனுக்கு நம்மைக் கொண்டு போய் அவனுடைய கோவிலாகிய விக்கிரகங்களுக்கு நம்மை அடிமையாக்கிக் கொள்கிறான். இவ்விதமாக ஒவ்வொரு நாளிலும் நம்முடைய ஆத்துமா பாபிலோனால் சிறைப்படுத்தபடாதபடி நம்மை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.