தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ரோமர் 6:22
இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய ஆலயமாக எழும்ப வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா பாபிலோனாகிய உலகத்தினால் வஞ்சிக்கப்படாமல் காத்துக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
11நாளாகமம் 36: 9-16
கொனானியா, செமாயா, நெதனெயேல் என்னும் அவர்கள் சகோதரரும், அசபியா, ஏயெல், யோசபாத் என்னும் லேவியரின் பிரபுக்களும், லேவியருக்குப் பஸ்கா பலிக்கென்று ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஐந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.
இப்படி ஆராதனை திட்டம்பண்ணப்பட்டபோது, ராஜாவினுடைய கட்டளையின்படியே, ஆசாரியர் தங்கள் ஸ்தானத்திலும், லேவியர் தங்கள் வகுப்புகளின் வரிசையிலும் நின்று,
பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்; ஆசாரியர் அவர்கள் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித் தெளித்தார்கள்; லேவியர் தோலுரித்தார்கள்.
மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி ஜனங்கள் கர்த்தருக்குப் பலிசெலுத்தும்படி, அவர்கள் தகனபலி மிருகங்களைப் பிதாக்களுடைய வம்சப்பிரிவுகளின்படியே, இவர்களுக்குக் கொடுக்கத்தக்கதாய் அவைகளைப் பிரித்துவைத்தார்கள்; காளைகளையும் அப்படியே செய்தார்கள்.
அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை நியாயமுறைமையின்படியே அக்கினியில் பொரித்து, பரிசுத்தமாக்கப்பட்ட மற்றவைகளைப் பானைகளிலும் கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்து, ஜனங்களுக்கெல்லாம் தீவிரமாய்ப் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
பின்பு தங்களுக்காகவும் ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்; ஆரோனின் புத்திரராகிய ஆசாரியர்கள் சர்வாங்க தகனபலிகளையும் நிணத்தையும் செலுத்துகிறதில், இரவுமட்டும் வேலையாயிருந்தபடியினால், லேவியர் தங்களுக்காகவும், ஆரோனின் புத்திரராகிய ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்.
தாவீதும், ஆசாபும், ஏமானும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய எதுத்தூனும் கற்பித்தபடியே, ஆசாபின் புத்திரராகிய பாடகர் தங்கள் ஸ்தானத்திலும், வாசல்காவலாளர் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள்; அவர்கள் தங்கள் ஊழியத்தை விட்டு விலகக்கூடாதிருந்தது; லேவியரான அவர்கள் சகோதரர் அவர்களுக்காக ஆயத்தப்படுத்தினார்கள்.
அப்படியே ராஜாவாகிய யோசியாவினுடைய கட்டளைப்படி, பஸ்காவை ஆசரிக்கிறதற்கும், கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளை இடுகிறதற்கும் அடுத்த கர்த்தருடைய ஆராதனையெல்லாம் அன்றையதினம் திட்டமாய்ச் செய்யப்பட்டது.
யோயாக்கீன் ராஜாவாகிற போது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதமும் பத்து நாளும் எருசலேமில் அரசாண்டு, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்தான். மறு வருஷத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அவனையும், கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையும், பாபிலோனுக்கு கொண்டுவரபண்ணி, அவன் சிறிய தகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின் மேலும், எருசலேமின் மேலும் ராஜாவாக்கினான். அவன் ராஜாவாகிற போது இருபத்தொரு வயதாயிருந்து, பதினொரு வருஷம் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தான். அவன் கர்த்தருடைய வார்த்தையை சொன்ன எரேமியா தீர்க்கதரிசிக்கு முன்பாக தன்னை தாழ்த்தவில்லை. தேவன்மேல் தன்னை ஆணையிடுவித்துக்கொண்ட ராஜாவுக்கு விரோதமாக கலகம் பண்ணி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்கு திரும்பாதபடிக்கு, தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தை கடினப்படுத்தினான். பின்பு ஆசாரியரில் பிரதானமானவர்கள் யாவரும்,ஜனங்களும் கூடி புறஜாதிகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம் பண்ணி, கர்த்தர் எருசலேமிலே பரிசுத்தம் பண்ணின கர்த்தருடைய ஆலயத்தை தீட்டுபடுத்தினார்கள். ஆனால் கர்த்தர் தமது ஜனத்தையும், தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கு இரக்கமுள்ளவராயிருந்தபடியால், தமது ஸ்தானாபதிகளை ஏற்கனவே அனுப்பியிருந்தார். ஆனால் அவர்கள் ஸ்தானாபதிகளை பரியாசம்பண்ணி, கர்த்தருடைய வார்த்தைகளை அசட்டைப்பண்ணி, அவருடைய வார்த்தைகளை நிந்தித்தபடியால் கர்த்தருடைய உக்கிரகம் அவர்கள் மேல் மூண்டது; சகாயம் இல்லாமல் போயிற்று. ஆதலால் அவர்கள் மேல் கல்தேயரின் ராஜாவை வரபண்ணினார். மேலும் அவர்கள் செய்தது
11நாளாகமம் 36:17-19
அங்கே வந்திருந்த இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்தில் பஸ்காவையும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகையையும் ஏழு நாளளவும் ஆசரித்தார்கள்.
தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் நாள்தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியரும், லேவியரும், யூதாவனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை.
யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளின்படி கர்த்தர் அவர்களை கல்தேயரின் கையில் ஒப்புக்கொடுத்தது மட்டுமல்ல கர்த்தருடைய ஆலயத்தின் எல்லா பொக்கிஷங்கள் அனைத்தையும் பாபிலோனுக்கு கொண்டு போனான். அவர்கள் தேவனுடைய ஆலயத்தை தீக்கொழுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்விய பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள். பட்டயத்திற்கு தப்பின மீதியானவர்களை அவன் பாபிலோனுக்கு சிறைப்பிடித்துப் போனான்; பெர்சியா ராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்படுமட்டும் அங்கே அவர்கள் அவனுக்கும், அவன் குமாரருக்கும் அடிமைகளாயிருந்தார்கள். கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அனுபவித்து தீருமட்டும், அது பாழாய் கிடந்த வருஷம் எழுபது, அந்த வருஷமெல்லாம் ஓய்ந்ததாயிருந்தது. கர்த்தர் எரேமியாவில் வாயினால் சொன்ன வார்த்தைகள் நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே கர்த்தர் கோரேசின் ஆவியை எழுப்பினதினாலே, அவன் சொன்னது; பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தை கட்டுவிக்கும்படி எனக்கு கட்டளையிட்டிருக்கிறார். மேலும் அவன் சொன்னது; அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன் போகட்டும், அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று, தன் ராஜ்யம் எங்கும் எழுதியனுப்பி விளம்பரம் பண்ணினான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டவைகளில் எழுதப்பட்டுள்ள சத்தியம் என்னவென்றால் நாம் கர்த்தரால் இரட்சிப்பைப் பெற்று, அபிஷேகம் பண்ணப்பட்ட பின்பு கர்த்தருக்கு பிரியமல்லாத அருவருப்பான காரியங்களை செய்து, அவருடைய வார்த்தைகளை அசட்டைப்பண்ணி பொல்லாப்புகளை செய்தால், நம்மை கர்த்தர் பாபிலோனாகிய உலகத்தால் கறைப்படுத்தி பாபிலோனுக்கு சிறைப்படுத்தி கொண்டுப்போகப்படுகிறது. அவ்விதம் கறைப்படுத்தபடுவோமானால், நாம் பெற்ற அத்தனை ஆசீர்வாதங்களும் உலகமாகிய அசுத்தத்தால் சிறைப்படுத்தப்பட்டு, அக்கினிக்கு இரையாக்கி, அதன் திவ்விய கிருபைகள் எல்லாம் அழிக்கப்படுகிறது.ஆனால் கர்த்தர் நம்மேல் இரக்கமுள்ளவராயிருந்தபடியால் ஏற்கனவே கர்த்தரின் வார்த்தைகளை நமக்கு தந்தும், நாம் கீழ்படியாமல் இருந்ததால் வருஷங்களை கர்த்தர்பாழாய் போகப்பண்ணுகிறார். ஆனால் கர்த்தரின் வார்த்தை நம்மில் நிறைவேறி தீருமட்டும் நம் உள்ளம் ஒன்றுமில்லாமல் பாழாய் கிடக்கும். ஆனால் அவர் தம்முடைய சித்தத்தின் படியே தம்முடைய குமாரன் மூலம் என்றைக்கு நம்மேல் இரக்கம் வைக்கிறாரோ அன்றைக்கு நம்மில் ஆலயம் எழுப்புகிறார் என்பது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது. ஆதலால் நாம் ஒவ்வொருவரும் கர்த்தரின் ஆலயமாக எழும்பும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.