தேவனுக்கே மகிமையுண்டாவதாக

வெளி 21:22 

அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தரின் ஆலயம் எழும்ப நம்மை மனபூர்வமாக கர்த்தருக்கென்று காணிக்கையாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.  

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய ஆலயமாக எழும்ப வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

எஸ்றா 1:1-6

எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்:

பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன்; எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன்.

அந்த ஜனங்களில் மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து, உதவி செய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான்.

அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள்,

அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற யாவரும் மனஉற்சாகமாய்க் காணிக்கை கொடுத்ததுமன்றி, வெள்ளிப் பணிமுட்டுகளையும் பொன்னையும் மற்ற வஸ்துக்களையும் மிருகஜீவன்களையும் உச்சிதமான பொருள்களையும் கொடுத்து, அவர்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளில் எஸ்றா சொல்வது என்னவென்றால் எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் அவன் ஆவியை ஏவினதினாலே பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்கு தந்தருளி யூதாவிலுள்ள எருசலேமிலே தனக்கு ஆலயத்தை கட்டும்படி கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்கு போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டகடவன்.  எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன்.  பின்னும் அவன் சொன்னது அவ்விடத்து ஜனங்கள் தேவனுடைய ஆலயத்திற்கென்று உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருக ஜீவன்களையும் கொடுத்து, உதவி செய்ய வேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம் பண்ணுவித்தான். இதனை கண்டு எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை கட்டுகிறதற்கு போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியரும் மற்றும் தேவனுடைய ஆவியினால் ஏவப்பட்டவர்கள் எல்லாரும் எழும்பினார்கள். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களில் நாம் கர்த்தரின் ஆலயமாய் விளங்கின பின்பு, நம் வாழ்வானது உலக அசுத்தங்களால் நிறையப்படும்போது, கர்த்தர் பாபிலோனாகிய சாத்தானால் அதனை அக்கினியால் சுட்டெரித்து அதன் பணிமுட்டுகள் எல்லாம் பாபிலோனால் கொண்டு போகப்பட்ட பின்பு, பாழாய் கிடக்கும் போது கர்த்தர் நம்மில் ஒரு ஆவியை அனுப்பி, அதனை பரிசுத்த ஆலயமாக, அதாவது கிறிஸ்து நம் சரீரத்தில் ஆலயம் கட்டும்படி எழுப்புகிறார் என்பதனை கர்த்தர் கோரேசின் ஆவியை எழுப்பி நம்மை திருஷ்டா்தப்படுத்துகிறார்.  அவ்விதமாக யாருடைய சரீரத்தில் தேவாலயமாக கர்த்தர் எழும்ப  வேண்டுமோ, அவர்கள் தங்களை மனபூர்வமாய் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க வேண்டும். மேலும் கர்த்தருக்கு அருவருப்பாகயிருக்கிற எல்லாவற்றையும் நம்மை விட்டு அகற்றி விட்டு, அவர் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டால் அவர் நம்மை அவருடைய ஆலயமாக்குகிறார்.  இவ்விதமாக அவர் ஆவியினால் ஏவப்படுகிறவர்கள் யாவரும் நம்மை கர்த்தரின் ஆலயமாக்கும்படியாக  ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.