தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 25:20
என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மை சத்துரு சிறைப்பிடித்திருந்தால், ஒருபோதும் நம் ஆத்துமாவில் கிறிஸ்து ஆசாரியராக செயல்படுவதில்லை.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தரின் ஆலயம் எழும்ப நம்மை மனபூர்வமாக கர்த்தருக்கென்று காணிக்கையாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
எஸ்றா 1:7
நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.
நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்துக் கொண்டு வந்து தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான். அதனை பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் பொக்கிஷக்காரனாகிய மித்திரேதாத்தின் கையினால் எடுக்கச் செய்து, யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் எண்ணிக் கொடுத்தான். அவைகளின் தொகையாவது பொன் தட்டுகள் முப்பது, வெள்ளி தாலங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது, மேலும்
எஸ்றா 1:10-11
பொற்கிண்ணங்கள் முப்பது, வெள்ளிக்கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்றப் பணிமுட்டுகள் ஆயிரம்.
பொன் வெள்ளிப் பணிமுட்டுகளெல்லாம் ஐயாயிரத்து நானூறு, இவைகளையெல்லாம் சேஸ்பாத்சார், சிறையிருப்பினின்று விடுதலைபெற்றவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குப் போகையில், எடுத்துக்கொண்டுபோனான்.
மேற்கூறப்பட்ட பொருட்கள் எல்லாம் சேஸ்பாத்சார், சிறையிருப்பினின்று விடுதலைபெற்றவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குக் கொண்டு போகையில் எடுத்துக்கொண்டு போனான். அல்லாமல்
எஸ்றா 2:1,2
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,
செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களோடேகூட திரும்பிவந்த தேசத்துப் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனமான மனிதரின் தொகையாவது:
மேற்கூறிய வசனங்களில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டு போனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும் மற்றும் இங்கு குறிக்கப்பட்டவர்களுடனே திரும்பி வந்த தேசத்துபுத்திரராகிய இஸ்ரவேல் புத்திராகிய ஜனமான மனிதரின் தொகைகள் கீழே குறிக்கப்பட்டுள்ளது.
எஸ்றா 2:3-62
பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.
யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.
ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.
சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.
பானியின் புத்திரர் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.
அஸ்காதின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டுபேர்.
அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர்.
பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்.
ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்து நான்குபேர்.
எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர்.
பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர்.
யோராகின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.
ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர்.
பெத்லகேமின் புத்திரர் நூற்றிருபத்துமூன்றுபேர்.
நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.
ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர்.
கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.
ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொருபேர்.
மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர்.
பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர்.
மக்பீஷின் புத்திரர் நூற்றைம்பத்தாறுபேர்.
மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
ஆரீமின் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.
லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர்.
எரிகோவின் புத்திரர் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்.
சேனாகின் புத்திரர் மூவாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.
ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.
பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.
ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப்பதினேழுபேர்.
லேவியரானவர்கள்: ஒதாயாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் புத்திரர் எழுபத்து நான்குபேர்.
பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
வாசல் காவலாளரின் புத்திரரானவர்கள்: சல்லூமின் புத்திரரும், அதேரின் புத்திரரும், தல்மோனின் புத்திரரும், அக்கூபின் புத்திரரும், அதிதாவின் புத்திரரும், சோபாயின் புத்திரருமானவர்களெல்லாரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.
நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர்,
கேரோசின் புத்திரர், சீயாகாவின் புத்திரர், பாதோனின் புத்திரர்,
லெபானாகின் புத்திரர், அகாபாவின் புத்திரர், அக்கூபின் புத்திரர்,
ஆகாபின் புத்திரர், சல்மாயின் புத்திரர், ஆனானின் புத்திரர்,
கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர், ராயாகின் புத்திரர்,
ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், காசாமின் புத்திரர்,
ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர், பேசாயின் புத்திரர்,
அஸ்னாவின் புத்திரர், மெயூனீமின் புத்திரர், நெபுசீமின் புத்திரர்,
பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர்,
பஸ்லூதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,
பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர்,
நெத்சியாவின் புத்திரர், அதிபாவின் புத்திரருமே.
சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,
யாலாகின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர்,
செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் புத்திரர், ஆமியின் புத்திரருமே.
நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
ஆசாரியரின் புத்திரரில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரரே.
இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
மேற்கூற்பட்டவர்கள் இஸ்ரவேலின் அட்டவணையில் தேடி காணாமற் போய், ஆசாரிய ஊழியஞ் செய்ய விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
பிரியமானவர்களே மேற்கூறப் பட்டவைகளில் தெரியவருவது என்னவென்றால் சத்துருவால் சிறைபிடிக்கப்பட்டவர்களில் திரும்பி எருசலேமுக்கும், யூதாவிலுள்ள பட்டணங்களுக்கும் வந்தவர்களின் தொகை ஆசாரிய ஊழியம் செய்ய கர்த்தரால் தெரிந்தெடுக்கப்படவில்லை என்பது தெரிய வருகிறாது. ஆதலால் எல்லாரிலும் கிறிஸ்து ஆசாரியத்துவ வேலை செய்யாதது என்னவென்றால், நாம் கர்த்தரின் சத்தம் கேட்டும், உலக ஆசைகளுக்கேற்ற பிரகாரம் ஆத்துமாவை சிறைபிடிக்க கொடுக்கிற காரணத்தால் கர்த்தர் அதற்கென்று அநேகம் பேரை தெரிந்தெடுக்கவில்லை. ஆதலால் நாம் யாவரும் கர்த்தரின் சித்தத்திற்கு செவிக்கொடுத்து அவர் சித்தம் செய்ய எப்போதும் நம்மை ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.