தேவனுக்கே மகிமையுண்டாவதாக
11தீமோத்தேயு 2:21
ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் பரிசுத்தமானதில் மட்டும் புசிக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மை சத்துரு சிறைப்பிடித்திருந்தால், ஒருபோதும் நம் ஆத்துமாவில் கிறிஸ்து ஆசாரியராக செயல்படுவதில்லை என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
எஸ்றா 2:63-70
ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூறு பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து,
அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்காக மன உற்சாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசையும், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும், நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
ஆசாரியரும், லேவியரும், ஜனங்களில் சிலரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்க தகாதென்று திர்ஷாதா அவர்களுக்கு சொன்னான். அல்லாமலும் சபையார், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், பாடகரும், குதிரைகளும். கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் அவர்களுக்கு உண்டாயிருந்தது. வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள ஆலயத்திற்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்திலே அதன் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்காக மன உற்சாகமான காணிக்கைகளை கொடுக்கிறார்கள். அவர்கள் தங்கள் திராணிக்கு தக்கதாக திருப்பணி பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசையும், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும், நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள். ஆசாரியரும், லேவியரும், ஜனங்களில் சிலரும், பாடகரும், வாசல் காவாலாளரும், நிதனீமியரும் இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால் தீர்க்கதரிசனமும், நியாயத்தீர்ப்புக்குரிய ஆசாரியன் எழும்பினால் மட்டுமே நாம் பரிசுத்தமானவைகளில் புசிக்கமுடியும் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஏனென்றால் நம்மிலிருந்து கர்த்தரின் வார்த்தைகளை எடுத்துகூறி, மற்றும் நமக்கு விரோதமாக நம்மில் எழும்புகிற துர்கிரியைகளை நம்மை விட்டு அகற்றினால் மட்டுமே நாம் எருசலேமாக மாற முடியும். அதற்காக கர்த்தராகிய தேவன் கிறிஸ்துவை ஆசாரியராக நம் உள்ளத்தில் எழுப்புகிறார் அப்படியாக நம் உள்ளத்தில் எழும்புவதால் நம்மை பரிசுத்தப்படுத்துகிறார். அப்படி பரிசுத்தப்படுத்தபட்ட நாம் பரிசுத்த பாத்திரம் என்றெண்ணப்படுகிறோம். அவ்விதமாக நாம் வாழ்வோமானால் கர்த்தரின் ஆலயத்திற்குரிய எல்லா செயல்களையும் கிறிஸ்து நம்மிலிருந்து நடத்துகிறவராயிருக்கிறார். இப்படியாக நாம் தேவனுடைய ராஜ்யத்திற்குரியவர்களாகிறோம். இப்படி தேவராஜ்யத்திற்குரியவர்களாக முழுமையும் ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.