தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 28:16
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும்; விசுவாசிக்கிறவன் பதறான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் ஆலயமாக திட அஸ்பாரம் உள்ளவர்களாக காணப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் பரிசுத்தமானதில் மட்டும் புசிக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
எஸ்றா 3:1-3
இஸ்ரவேல் புத்திரர் பட்டணங்களிலே குடியேறி, ஏழாம் மாதமானபோது, ஜனங்கள் ஏகோபித்து எருசலேமிலே கூடினார்கள்.
அப்பொழுது யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், அவன் சகோதரராகிய ஆசாரியரும், செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், அவன் சகோதரரும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்க தகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்.
அவர்கள் அத்தேசத்தின் ஜனங்களுக்குப் பயந்ததினால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்கள் கர்த்தருக்கு அந்திசந்தி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள்.
மேற்கூறிய வசனங்களில் இஸ்ரவேல் புத்திரர் பட்டணங்களிலே குடியேறி ஏழாம் மாதமான போது ஜனங்கள் ஏகோபித்து எருலேமிலே கூடினார்கள். மேலும்
எஸ்றா 3:4
எழுதியிருக்கிறபடியே அவர்கள் கூடாரப்பண்டிகையை ஆசரித்து, நித்திய நியமத்தின்படியும் அன்றாடகக் கணக்கின்படியும் ஒவ்வொருநாளிலும் பலியிட்டார்கள்.
எஸ்றா 3:4-ல் கூறப்பட்டிருக்கிறவர்கள் எழும்பி தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்க தகனபலிகளை பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தை கட்டினார்கள். அவர்கள் அத்தேசத்து ஜனங்களுக்கு பயந்ததினால் பலிபீடத்தை அதன் ஆதாரங்கள் மேல் ஸ்தாபித்து அதின்மேல் அவர்கள் கர்த்தருக்கு அந்திசந்தி சர்வாங்க தகனபலிகளை செலுத்தினார்கள்.அல்லாமலும் கூடார பண்டிகையை ஆசரித்து, நித்திய நியமத்தின்படியேயும், அன்றாடக கணக்கின் படியேயும் ஒவ்வொரு நாளிலும் பலியிட்டார்கள். அதற்கு பின்பு மாதப்பிறப்புகளிலும், எல்லா பரிசுத்த பண்டிகைகளிலும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும், கர்த்தருக்கு அவரவர் செலுத்தும் உற்சாக பலியையும் செலுத்தினார்கள். ஏழாம் மாதம் முதலாம் தேதியிலே கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளை செலுத்தினார்கள். ஆனாலும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடபடவில்லை.
பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானித்தால் திருஷ்டாந்தத்தோடு கர்த்தர் நமக்கு விளக்கி காட்டுகிறார். அதென்னவென்றால் கர்த்தர் இரட்சிக்கப்பட்டவர்களை அனுதினம் சபையில் சேர்த்துக்கொள்வதும், கர்த்தரை தேடி வருகிறவர்களின் இருதயம் பலிபீடமாக கர்த்தரின் ஆதாரமாகிய வசனத்தால் மாற்றுவதும், உள்ளத்தின் ஆழத்திலிருந்து கர்த்தருக்கு ஸ்தோத்திரபலி செலுத்துவதும் மற்றும் அனுதினமும் கர்த்தருக்கு ஆராதனை செய்து உற்சாக பலி செலுத்துவதும் இவையெல்லாம் ஜனங்கள் செய்தாலும் தேவனோடு உடன்படிக்கையாகிய அஸ்திபாரம் போடாமல் அநேகர் கர்த்தரை விட்டு தூரமாய் ஏனோதானோ என்று விலகிப் போகிறார்கள். அப்படிபட்டவர்களாக நம்மில் யாராவது இருப்போமானால் இப்போதே அவரோடு பற்றிக்கொண்டு கர்த்தருடைய கற்பனை கட்டளைக்கு இணங்கி நாம் வாழ்வோம் என்று நம்மை ஒப்புக்கொடுத்து அப்படி செய்வோமானால் நாம் கர்த்தரின் ஆலயமாக கர்த்தர் நம்மை எழுப்பும் படியாக அஸ்திபாரம் போடப்படுகிறோம். இப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.