தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யோவான் 2:19
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் சத்துருவை ஜெயித்து கர்த்தரின் ஆலயமாகிய இரட்சிப்பை சுதந்தரிப்போம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில்,
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சித்தம் செய்கிறவர்களாகவும், தங்களை கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கிறவர்களாகவும் மாற வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
எஸ்றா 4:6-8
அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகப் பிரியாது எழுதினார்கள்.
அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரியபாஷையிலும் எழுதியிருந்தது.
ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும் கணக்கனாகிய சிம்சாவும் எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு எழுதின மனுவிலே கையொப்பம் போட்டவர்கள் யாரென்றால்:
மேற்கூறிய வசனங்களில் அகாஸ்வேரு அரசாளுகிறபோது அவனுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாக பிரியாது எழுதினார்கள். அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரிய பாஷையிலும் எழுதியிருந்தது. ஆலோசனை தலைவனாகிய ரெகூமும் கணக்கனாகிய சிம்சாவும் எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்ட என்னும் ராஜாவுக்கு எழுதின மனுவிலே கையொப்பம் போட்டவர்கள் யாரெல்லாம் என்றால்
எஸ்றா 4:9-10
ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும், கணக்கனாகிய சிம்சாயும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவாகிய தீனாவியர், அபற்சாத்தியர், தர்பேலியர், அப்பார்சியர், அற்கேவியர், பாபிலோனியர், சூஷங்கியர், தெகாவியர், ஏலாமியரானவர்களும்,
பெரியவரும் பேர்பெற்றவருமான அஸ்னாப்பார் அவ்விடங்களிலிருந்து அழைத்துக்கொண்டுவந்து சமாரியாவின் பட்டணத்திலே குடியேறப்பண்ணின மற்ற ஜனங்களும், நதிக்கு இப்பாலே இருக்கிற மற்ற ஜனங்களுமே.
மேற்கூறபட்டவர்கள் அனுப்பின நகலாவது நதிக்கு இப்புறத்திலிருக்கிற உமது அடியார்கள் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால் உம்மிடத்திலிருந்து என்னிடத்திற்கு வந்த யூதர் எருசலேமிலே கூடி கலகமும் பொல்லாப்புமான அந்த பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதில் மதில்களை எழுப்பி கட்டுகிறார்கள், என்பது ராஜாவுக்கு அறியலாவதாக.மேலும் அந்த நகலில் எழுதப்பட்ட காரியங்கள்
எஸ்றா 4:16
ஆகையால் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, இதின் அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், நதிக்கு இப்புறத்திலே உமக்கு ஒன்றும் இராதேபோம் என்பதை ராஜாவுக்கு அறியப்படுத்துகிறோம் என்று எழுதி அனுப்பினார்கள்.
மேற்கூறிய கருத்துக்களை ராஜாவுக்கு எழுதியனுப்பினார்கள். அப்பொழுது ராஜா ஆலோசனை தலைவனாகிய ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், சமாரியாவில் குடியிருக்கிற மற்றுமுள்ள அவர்களுடைய வகையராவும், நதிக்கு அப்புறத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் எழுதியனுப்பின பிரதியுத்தரமானது: உங்களுக்கு சமாதானம். நீங்கள் அனுப்பின நகல் தீர்க்கமாய் வாசிக்கப்பட்டது என்று எழுதி
எஸ்றா 4:19-22
நம்முடைய உத்தரவினால் சோதித்துப் பார்க்கும்போது, அந்தப் பட்டணம் பூர்வகாலமுதல் ராஜாக்களுக்கு விரோதமாய் எழும்பினது என்றும், அதிலே கலகமும் ராஜதுரோகமும் காணப்பட்டது என்றும்,
எருசலேமில் வல்லமையுள்ள ராஜாக்கள் இருந்தார்கள் என்றும், அவர்கள் நதிக்கு அப்புறத்தில் இருக்கிற சகல தேசங்களையும் ஆண்டுவந்தார்கள் என்றும், பகுதியும் தீர்வையும் ஆயமும் அவர்களுக்குச் செலுத்தப்பட்டது என்றும் தெரியவருகிறது.
இப்பொழுதும் நம்மிடத்திலிருந்து மறுஉத்தரவு பிறக்கும்வரையும் அந்த மனிதர் அந்தப் பட்டணத்தைக் கட்டாமல் நிறுத்திவிடும்படி கட்டளையிடுங்கள்.
இதிலே நீங்கள் தவறாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ராஜாக்களுக்கு நஷ்டமும் சேதமும் வரவேண்டியது என்ன என்று எழுதி அனுப்பினான்.
மேற்கூறப்பட்ட காரியங்களை ராஜா அவர்களுக்கு எழுதி கட்டப்பட்டு வந்த பட்டணத்தை கட்ட விடாமல் நிறுத்திவிடும்படி கட்டளையிடுங்கள் என்று எழுதி ராஜா அனுப்புகிறதைப் பார்க்கிறோம். அந்த நகல் அவர்கள் கையில் கிடைத்து அவர்கள் வகையராவுக்கு வாசிக்கப்பட்ட போது, அவர்கள் தீவிரமாய் எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்கு வந்து, பலவந்தத்தோடும், கட்டாயத்தோடும் அவர்களை வேலைசெய்யவிடாதபடி நிறுத்திப்போடுகிறதை வாசிக்க முடிகிறது. அப்போது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைப்பட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷ மட்டும் நிறுத்தப்பட்டிருந்தது. பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது, மதில் என்பது இரட்சிப்புக்கு காரணமாக கர்த்தர் நாம் புதிய எருசலேமாக மாற வேண்டும் என்பதனை திருஷ்டந்தப்படுத்துகிறார். என்னவென்றால் நம்முடைய உள்ளம் மிகவும் வாஞ்சையோடு புதிய எருசலேமாக தோன்ற வேண்டும் என்று இருந்தாலும் நம் உள்ளத்திலிருக்கிற கர்த்தரின் வசனத்திற்கு விரோதமாக செயல்படுகிற அந்தகார சக்திகள் நம்மில் இடம்பெற்றுள்ளதால் நாம் கர்த்தரின் இரட்சிப்பை பெற்றுக்கொள்வதற்கு அது தடைசெய்கிறது. எப்படியென்றால் கர்த்தருக்கு சித்தமில்லாத செயல்களை விட்டுவிட முடியாதவர்களாக உலகத்தால் கறைப்படுத்திக்கொண்டிருக்கும். ஆதலால் தான் தேவன் நம்மில் அவருடைய வசனத்தை அனுப்பி, துர்கிரியைகளின் மேல் ஆளுகை செய்து சத்துருக்களை அழித்து கிறிஸ்து மகிமையடைந்து நம்மில் ஆலயமாக தேவன் கிறிஸ்துவை எழுப்புகிறார். ஆதலால் தேவன் நம்மில் ராஜரீகம் பண்ணும்படியாகவும், சத்துருவின் கையிலிருந்து நம்மை விடுதலையாக்கி, நம்மை கர்த்தரின் ஆலயமாக மாற்றும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.