தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 57:2
எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை ஆவியினால் ஆராதித்தால் மட்டுமே கர்த்தரின் ஆலயமாக விளங்க முடியும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில்,
மணவாட்டி சபையாகிய நம்மில் கிறிஸ்து மகிமையின் ஆலயமாக எழும்பும்படி நம்மை முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
எஸ்றா 6:1-2
அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச் சோதித்தார்கள்.
மேதிய சீமையிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின் அரமனையிலே ஒரு சுருள் அகப்பட்டது; அதிலே எழுதியிருந்த விபரமாவது:
மேற்கூறப்பட்ட வசனங்களில் ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜாவினுள்ள தஸ்திர அறையை சோதித்தார்கள். அப்போது அங்கு அகப்பட்ட சுருள் அம்மேதா பட்டணத்தின் அரமனையிலே இருந்தது. அதிலே எழுதியிருந்த விபரமாவது கோரேசின் முதலாம் வருஷத்திலே,
எஸ்றா6:3-5
ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்தில், கோரேஸ் ராஜா எருசலேமிலிருந்த தேவாலயத்தைக்குறித்துப் பிறப்பித்த உத்தரவு என்னவென்றால்: தேவாலயமானது பலிசெலுத்தப்பட்டுவந்த ஸ்தானத்திலே கட்டப்படக்கடவது; அதின் அஸ்திபாரங்கள் பலமாயிருப்பதாக; அது அறுபது முழ உயரமும், அறுபது முழ அகலமுமாயிருக்கவேண்டும்.
அது மூன்று வரிசை பெருங்கற்களாலும், ஒரு மச்சு வரிசை புது உத்திரங்களாலும் கட்டப்படக்கடவது; அதற்குச் செல்லும் செலவு ராஜாவின் அரமனையிலிருந்து கொடுக்கப்படுவதாக.
அன்றியும் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த ஆலயத்திலிருந்து எடுத்து, பாபிலோனுக்குக் கொண்டுவந்த தேவனுடைய ஆலயத்துக்கடுத்த பொன் வெள்ளிப் பணிமுட்டுகள் எருசலேமிலுள்ள தேவாலயமாகிய தங்கள் ஸ்தானத்திற்குப் போய்ச் சேரும்படிக்குத் திரும்பக் கொடுக்கப்படக்கடவது; அவைகளை தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகக்கடவர்கள் என்று எழுதியிருந்தது.
மேற்கூறப்பட்ட காரியங்களை தரியு ராஜா கண்டபின்பு தரியு ராஜா எழுதியனுப்பின விபரமாவது,
எஸ்றா 6:6-7
அப்பொழுது தரியுராஜா எழுதியனுப்பினதாவது: இப்பொழுதும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும் சேத்தார்பொஸ்னாயுமாகிய நீங்களும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான உங்கள் வகையரா யாவரும் அவ்விடத்தைவிட்டு விலகியிருங்கள்.
தேவனுடைய ஆலயத்தின் வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகள் என்ன சொல்லுகிறதென்றால் தேவாலயம் கட்டும் வேலை நிறுத்தக்கூடாமல் கட்டப்பட வேண்டும் என்றும், தடையாக இருக்கிற யாவரும் அவ்விடத்தை விட்டு விலகுங்கள் என்றும்; தேவனுடைய ஆலயத்து வேலையை யூதரின் அதிபதியும், யூதரின் மூப்பரும் தேவனுடைய ஆலயத்தை அதன் ஸ்தானத்திலே கட்ட கடவர்கள். அல்லாமலும்
எஸ்றா 6:8-10
தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்குத் தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும்.
பரலோகத்தின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளையிடத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் முதலானவை தினந்தினம் அவர்கள் சொற்படி தாழ்ச்சியில்லாமல் கொடுக்கப்படக்கடவது.
எருசலேமிலிருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும் அவர் குமாரருக்கும் தீர்க்காயுசுண்டாக மன்றாடும்படிக்கு இப்படிச் செய்யப்படுவதாக.
மேற்கூறப்பட்டவற்றை நாம் தியானிக்கும் போது தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில், உண்டான கட்டளை என்னவென்றால் , அந்த மனிதருக்கு தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்கு தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்க வேண்டும். மேலும் பரலோகத்தின் தேவனுக்கு சர்வாங்க தகனபலியிட தேவையான இளங்காளை,ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் முதலானவை தினம்தினம் அவர்கள் சொல்படி தாழ்ச்சியில்லாமல் கொடுக்கப்படகடவது. எருசலேமிலிருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும், அவர் குமாரருக்கும் தீர்க்காயுசுண்டாக மன்றாடும்படிக்கு இப்படி செய்யப்படுவதாக என்று கூறப்படுகிறது.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தியிருக்கிறது என்னவென்றால் நாம் கர்த்தரின் ஆலயமாக விளங்குவதற்கு தடையாக உலகமும் உலகத்திலுள்ளவைகளும் நம்மை பலமாக தடைபண்ணும். மட்டுமல்லாமல் உலகமாகிய பாபிலோன் நம் உள்ளத்தை வஞ்சித்து சிறைப்படுத்தி வைத்திருக்கும் போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ராஜாதி ராஜாவாக செயல்பட்டு, நம்முடைய சிறையிருப்பை திருப்பி நமக்கு தேவையான கிருபையால் நம்மை நிரப்பும் போது, அவருடைய ஆவியினால் நாம் கர்த்தரை ஆராதித்தால் கிறிஸ்துவின் ஆலயமாக நம்மை எழுப்புகிறார். அவ்விதம் நாம் கிறிஸ்துவின் ஆலயமாக எழும்பும் போது, அவர் என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறது போல நம்முடைய ஆத்துமாவும் என்றென்றும் தீர்க்காயுசுயோடு காணப்படும். இப்படியாக நாம் கிறிஸ்துவோடு வாழும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.