தேவனுக்கே மகிமையுண்டாவதாக

 1கொரிந்தியர் 3:17

ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தேவனின் ஆலயமாகவும், கர்த்தரின் கட்டளை மீறாதவர்களாவும் இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை ஆவியினால் ஆராதித்தால் மட்டுமே கர்த்தரின் ஆலயமாக விளங்க முடியும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

எஸ்றா 6:11-16

பின்னும் நம்மால் பிறக்கும் கட்டளை என்னவென்றால்: எந்த மனிதனாவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவன் வீட்டிலிருந்து ஒரு உத்திரம் பிடுங்கி நாட்டப்பட்டு, அவன் அதில் தூக்கிப்போடப்படவும், அதினிமித்தமாக அவனுடைய வீடு குப்பைமேடாக்கப்படவுங்கடவது.

ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும் சகல ஜனங்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கப்பண்ணின தேவன் நிர்மூலமாக்கக்கடவர்; தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம்; இதின்படி ஜாக்கிரதையாய்ச் செய்யப்படக்கடவது என்று எழுதியனுப்பினான்.

அப்பொழுது நதிக்கு இப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் வகையராவும், தரியுராஜா கட்டளையிட்ட பிரகாரம் ஜாக்கிரதையாய்ச் செய்தார்கள்.

அப்படியே யூதரின் மூப்பர் கட்டினார்கள்; தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடிவந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் அதைக்கட்டி முடித்தார்கள்.

ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருஷம் ஆதார் என்னும் மாதம் மூன்றாந்தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிந்தது.

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரும், ஆசாரியரும், லேவியரும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும், தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள்.

மேற்கூறிய வசனங்களில் தரியு ராஜா சொன்னது நம்மால் பிறக்கும் கட்டளை என்னவென்றால் எந்த மனிதனாவது கர்த்தருக்கு ஆலயம் கட்டி, பலிசெலுத்தி, தீர்க்காயுசை பெற்றுக்கொள்ளும்படி விண்ணப்பம் பண்ண வேண்டும் என்ற கட்டளையை மாற்றினால், அவன் வீட்டிலிருந்து ஒரு உத்திரம் பிடுங்கி நாட்டப்பட்டு, அவன் அதில் தூக்கிப் போடப்படவும், அதனிமித்தமாக அவனுடைய வீடு குப்பைமேடாகவும்படகடவது.  ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற எந்த ராஜாக்களையும், ஜனங்களையும், தம்முடைய நாமத்தை விளங்கப் பண்ணின தேவன் நிர்மூலமாக்கக்கடவர் என்றும் தரியு ராஜாவாகிய நாம் இந்த கட்டளையைக் கொடுத்தோம்; இதன்படி ஜாக்கிரதையாய் செய்யப்படகடவது. அப்படியே யூதரின் மூப்பர் செய்தார்கள்.  ஆகாயும், சகரியாவும் தீர்க்கத்தரிசனம் சொல்லிவந்தபடியினால் இந்த காரியம் கைக்கூடி வந்தது.  என்னவென்றால் அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளையின் படியும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களின் கட்டளையின்படியும் அதை கட்டி முடித்தார்கள்.  ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருஷம் ஆதார் என்னும் மாதம் மூன்றாம் தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிந்தது.  பின்பு இஸ்ரவேல் புத்திரரும், ஆசாரியரும், லேவியரும் சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும், தேவனுடைய ஆலய பிரதீஷ்டையை சந்தோஷமாகக் கொண்டாடினார்கள். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களை தியானிக்கும் போது, நாம் கர்த்தரின் ஆலயமாக மாறினால் அதனை யாரும் கெடுக்கக்கூடாது என்பது நமக்கு கர்த்தர் தந்த கட்டளை என்பது திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது. ஒருவன் தேவனுடைய  ஆலயத்தை  கெடுத்தால் அவனை தேவன் கெடுப்பார்.  மேலும் நாம் தேவனின் ஆலயமாக இருக்கும் போது, தேவன் நம்மில் தங்கும்படியாக தேவனுக்காக நம்மை முழுமையும் சந்தோஷமாய் பிரதீஷ்டை பண்ண வேண்டும்.  அவ்விதம் பிரதீஷ்டைபண்ணினால் நம் வாழ்வு கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாயிருக்கும்.  அல்லாமலும் நாம் சபையாக கூடி கர்த்தரை மனமகிழ்ச்சியோடு ஆராதிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.