தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஆபகூக் 3:18
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் தேவனின் ஆலயமாகவும், கர்த்தரின் கட்டளை மீறாமல் இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
எஸ்றா 6:17-22
தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிகளையும், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, இஸ்ரவேல் அனைத்தின் பாவநிவாரணபலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு,
மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியரை அவர்கள் வகுப்புகளின்படியும், லேவியரை அவர்கள் முறைவரிசைகளின்படியும் நிறுத்தினார்கள்.
சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள்.
ஆசாரியரும் லேவியரும் ஒருமனப்பட்டுத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டதினால், எல்லாரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாருக்காகவும், ஆசாரியரான தங்கள் சகோதரருக்காகவும், தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்.
அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் புத்திரரும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தை விட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைப் புசித்து,
புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் தேவனுடைய ஆலயத்தின் பிரதீஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுகடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிகளையும், இஸ்ரவேல் கோத்திரங்களின் இலக்கத்தின்படியே பாவ நிவாரணப்பலிக்காக பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியரை அவர்கள் வகுப்புகளின்படியேயும், லேவியரை அவர்கள் முறை வரிசைகளின்படியேயும் நிறுத்தினார்கள். அவர்கள் முதலாம் மாதம் பதினாலாந் தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள். அவர்கள் தங்களை சுத்தமாக்கிக் கொண்டதினால் எல்லாரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுக்கெல்லாருக்காகவும், ஆசாரியரான தங்கள் சகோதரருக்காகவும், தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டியை அடித்தார்கள். பின்பு அவர்கள் எல்லாரும் பூலோக ஜாதிகளின் அசுத்தத்தை விட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதை புசித்து புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழு நாளாக சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்திலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களில் தியானிப்பது நாம் கர்த்தரின் ஆலயமாக விளங்கினால், எப்போதும் நம்மை சுத்தமாக்கிக் கொண்டவர்களாய், நம்மை பரிசுத்தப்படுத்திக்கொண்டு,நம்மிலுள்ள அசுத்தத்தை மாற்றி விட்டு நம்முடைய உள்ளமாகிய பலிபீடம் எப்போதும் கர்த்தருக்கென்று ஸ்தோத்திரபலி செலுத்துவதும், கர்த்தருக்கு ஆராதனை செய்வதும், நாம் கிறிஸ்துவின் மாம்சமும் இரத்தமும் புசித்து பஸ்கா ஆசரிப்பதும், இவ்விதமாக நாம் கர்த்தரை ஆராதித்தால் கர்த்தர் நம்மை மகிழ்ச்சியாக்குகிறார் என்று நமக்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.