தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 109:30
கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்குள் எல்லாவற்றிலும் நம்மை பக்குவப்படுத்துவோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
எஸ்றா 7:1-6
இந்த வர்த்தமானங்களுக்குப்பின்பு, செராயாவின் குமாரனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான்; இந்தச் செராயா அசரியாவின் குமாரன், இவன் இல்க்கியாவின் குமாரன்,
இவன் சல்லூமின் குமாரன், இவன் சாதோக்கின் குமாரன், இவன் அகிதூபின் குமாரன்,
இவன் அமரியாவின் குமாரன், இவன் அசரியாவின் குமாரன், இவன் மெராயோதின் குமாரன்,
இவன் சேராகியாவின் குமாரன், இவன் ஊசியின் குமாரன், இவன் புக்கியின் குமாரன்,
இவன் அபிசுவாவின் குமாரன், இவன் பினெகாசின் குமாரன், இவன் எலெயாசாரின் குமாரன், இவன் பிரதான ஆசாரியனான ஆரோனின் குமாரன்.
இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.
மேற்கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளில் செராயாவின் குமாரனாகிய எஸ்றா பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்தில் பாபிலோனிலிருந்து வந்தான். மேலும் எஸ்றாவின் வம்ச அட்டவணைகள் கூறப்பட்டுள்ளது. இந்த எஸ்றா ஆசாரியனான ஆரோனின் குமாரன். இவன் கர்த்தர் அருளிய மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தில் தேறின வேதபாரகனாயிருந்தான்; கர்த்தருடைய கரம் அவன் மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜாக் கொடுத்தான். அவனோடு கூட,
எஸ்றா 7:7
அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரரிலும், ஆசாரியரிலும், லேவியரிலும், பாடகரிலும், வாசல் காவலாளரிலும், நிதனீமியரிலும், சிலர் அர்தசஷ்டா ராஜாவின் ஏழாம் வருஷத்திலே எருசலேமுக்குப் போனார்கள்.
மேற்கூறப்பட்டவர்கள் எஸ்றாவோடுகூட அர்தசஷ்டா ராஜாவின் ஏழாம் வருஷத்தில் எருசலேமுக்கு போனார்கள். ஐந்தாம் மாதத்தில் எருசலேமுக்கு வரும்போது, அந்த அர்தசஷ்டாவின் ஏழாம் வருஷம். எப்படியென்றால் அவனிடத்தில் தன் தேவனுடைய தயவுள்ள கரம் அவனோடிருந்தபடியினால் முதலாம் மாதம் முதல் தேதியிலே அவன் பாபிலோனிலிருந்து புறப்பட்டு, ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே எருசலேமுக்கு வந்தான். அல்லாமலும் கர்த்தருடைய வேதத்தை ஆராயவும் அதன்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதி நியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தை பக்குவப்படுத்தியிருந்தான். பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது கர்த்தருக்காக நாம் நம்மை முழுமையும் ஒப்புக்கொடுத்து, பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று,நாம் தேவனுடைய ஆலயமாகவும், தேவன் நம்மில் திரியேக தேவனாக வசிக்கவும் நம் இருதயத்தை ஒருமுகப்படுத்திக்கொண்டு, புதிய எருசலேமாக மாறி, சகல ஜாதிகளின் அசுத்தங்களும் மாற்றப்பட்டு, கிறிஸ்துவின் மாம்சமும் இரத்தமுமாகிய பஸ்கா ஆசரிக்கவும் செய்தால் நம் உள்ளம் எப்போதும் கிறிஸ்துவுக்குள் மகிழ்ச்சியாயிருக்கும். இப்படிப்பட்ட வாழ்வு நம்மில் வரும் போது நம்முடைய உலகத்தின் அசுத்தங்களை விட்டு விலகுகிறோம். எருசலேமுக்குள் வருகிறோம். அவ்விதம் நாம் கிறிஸ்துவினால் புதுப்பிக்கப்படும் போது அவர் நாம் விசுவாசத்தோடு எதைக்கேட்டாலும் நம்முடைய ராஜாவாகிய கிறிஸ்து நமக்கு தருவார் என்பது நிச்சயம். அல்லாமலும் கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், நீதி நியாயங்கள் உபதேசிக்கவும் நம்முடைய இருதயத்தை பக்குவபடுத்தவும் கர்த்தரிடத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.