தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 10:16

இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தரின் ஆலயம் பரிசுத்த அலங்காரம் உள்ளதாக காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்குள் எல்லாவற்றிலும் நம்மை பக்குவப்படுத்தவேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

எஸ்றா 7:11-16 

கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும், படித்துத் தேறின வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு, ராஜாவாகிய அர்தசஷ்டா கொடுத்த சன்னதின் நகலாவது:

ராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்குப் பூரண சமாதானமுண்டாக வாழ்த்தி எழுதுகிறது என்னவென்றால்:

 நம்முடைய ராஜ்யத்தில் இருக்கிற இஸ்ரவேல் ஜனத்திலும், அதின் ஆசாரியரிலும், லேவியரிலும், உன்னோடேகூட எருசலேமுக்குப் போக மனப்பூர்வமாயிருக்கிற யாவரும் போகலாம் என்று நம்மாலே உத்தரவாகிறது.

நீ உன் கையிலிருக்கிற உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி, யூதாவையும் எருசலேமையும் விசாரித்து நடத்தவும்,

ராஜாவும் அவருடைய மந்திரிமாரும் எருசலேமில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனுக்கு மனப்பூர்வமாய்க் கொடுத்த வெள்ளியையும் பொன்னையும்,

பாபிலோன் சீமையெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உன்னுடைய ஜனமும் ஆசாரியரும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று மனஉற்சாகமாய்க் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும், நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிமாராலும் அனுப்பப்படுகிறாய்.

மேற்கூறிய வசனங்களில் படித்த தேறினவனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு, ராஜாவாகிய அர்தசஷ்ட கொடுத்த நகல் கர்த்தரின் கற்பனைகளின் வார்த்தைகளும், கட்டளைகளுமாயிருந்தது. ராஜாதி ராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தை போதிக்கிற உத்தம வேதப்பாரனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு பூரணசமாதானமுண்டாவதாக என்று வாழ்த்தி எழுதுகிறதாவது நம்முடைய ராஜ்யத்தில் இருக்கிற  இஸ்ரவேல் ஜனத்திலும், லேவியரிலும் , ஆசாரியரிலும் உன்னோடேகூட எருசலேமுக்கு போக மனப்பூர்வமாயிருக்கிற யாவரும் போகலாம் என்று நம்மாலே உத்தரவாகிறது. மேலும் உன் கையிலிருக்கிற உன் தேவனுடய நியாயப்பிரமாணத்தின் படி எருசலேமையும், யூதாவையும் விசாரித்து நடத்தவும், ராஜாவும் அவருடைய மந்திரிமாரும் எருசலேமில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனுக்கு மனபூர்வமாய் கொடுத்த வெள்ளியையும் பொன்னையும், பாபிலோன் சீமையங்கும் கிடைக்கும் வெள்ளியையும், பொன்னையும், உன்னுடைய ஜனமும் ஆசாரியரும் தேவனுடைய ஆலயத்திற்கென்று  மன உற்சாகமாய் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டு போகவும், நீ ராஜாவினாலும், அவருடைய ஏழு மந்திரிமாராலும் அனுப்பப்படுகிறாய். பின்பு அவன் சொன்னது 

எஸ்றா 7:17-23 

ஆகையால் அந்தத் திரவியத்தினால் நீ தாமதமின்றி காளைகளையும் ஆட்டுக்கடாக்களையும், ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த போஜனபலிகளையும், பானபலிகளையும் வாங்கி, அவைகளை எருசலேமிலுள்ள உங்கள் தேவனுடைய ஆலயத்துப் பலிபீடத்தின்மேல் செலுத்துவாயாக.

மீதியான வெள்ளியையும் பொன்னையும் கொண்டு செய்யவேண்டியது இன்னதென்று உனக்கும் உன் சகோதரருக்கும் நலமாய்த் தோன்றுகிறபடி அதை உங்கள் தேவனுடைய சித்தத்தின்படியே செய்யுங்கள்.

உன் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக உனக்குக் கொடுக்கப்பட்ட பணிமுட்டுகளையும் நீ எருசலேமின் தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கக்கடவாய்.

பின்னும் உன் தேவனுடைய ஆலயத்துக்கு அவசியமாய்க் கொடுக்கவேண்டியிருப்பதை, நீ ராஜாவின் கஜானாவிலிருந்து வாங்கிக் கொடுப்பாயாக.

 நதிக்கு அப்புறத்திலிருக்கிற எல்லா கஜான்சிகளுக்கும் அர்தசஷ்டா என்னும் ராஜாவாகிய நாம் இடுகிற கட்டளை என்னவென்றால், பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியன் நூறு தாலந்து வெள்ளி, நூற்றுக்கலக்கோதுமை, நூற்றுக்கலத் திராட்சரசம், நூற்றுக்கல எண்ணெய்மட்டும் உங்களைக் கேட்பவை எல்லாவற்றையும்,

வேண்டிய உப்பையும், தாமதமில்லாமல் கொடுக்கவும்,

பரலோகத்தின் தேவனுடைய கற்பனையின்படியே, எது தேவையாயிருக்குமோ அதுவெல்லாம் பரலோகத்தின் தேவனுடைய ஆலயத்திற்கு ஜாக்கிரதையாய்ச் செலுத்தப்படவும் வேண்டும்; ராஜாவும் அவர் குமாரரும் ஆளும் ராஜ்யத்தின்மேல் கடுங்கோபம் வருவானேன்.

மேற்கூறிய வசனங்களை ராஜா ஆசாரியனாகிய எஸ்றாவுக்கு அறிவித்து, பின்னும் நதிக்கு அப்புறத்திலிருக்கிற உன் தேவனுடைய நியாயப்பிரமாணங்களை அறிந்த சகல ஜனங்களையும் நியாயம் விசாரிக்கதக்க துரைகளையும், நியாயாதிபதிகளையும், நீ உன்னிலுள்ள உன் தேவனுடைய ஞானத்தின்படியே ஏற்படுத்துவாயாக; பிரமாணத்தை அறியாதவர்களுக்கு உபதேசிக்க கடவாய்.  மேலும் சொல்லப்பட்டவை என்னவென்றால் தேவனுடைய நியாயபிரமாணத்தின்படியேயும், ராஜாவினுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யாதவனெவனும் உடனே மரணத்துக்காகிலும், தேசத்து புறம்பாக்குதலுக்காகிலும், அபராதத்திற்காகிலும், காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்பட கடவன் என்று ராஜா எழுதியிருந்தது.  எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க, இப்படிப்பட்ட யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளி,ராஜாவுக்கும், அவருடைய மந்திரிமார்களுக்கும், ராஜாவின் கைக்குள்ளான பலத்த எல்லா மகா பிரபுக்களுக்கும் முன்பாக எனக்கு தயவு கிடைக்கப்பண்ணின தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.  அப்படியே என் தேவனாகிய கர்த்தரின் கரம் என்மேலிருந்ததினால், நான் திடன்கொண்டு இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடே சேர்த்துக்கொண்டேன்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எவ்விதத்தில் ஜனங்களை கர்த்தருக்காய் சேர்த்துக் கொள்கிறார் என்பது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது. மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் எல்லாவரையும் நியாயந்தீர்க்கிற நியாயாதிபதியாகவும், பிரமாணம் அறியாதவர்களுக்கு பிரமாணத்தை நமக்குள் இருந்து போதிக்கிறவராகவும்,  நியாயப்பிரமாணத்தின் படி நடக்காதவர்களை தண்டிக்கிறவராகவும், கர்த்தருக்காக ஜனங்கள் மன உற்சாகமாய் கொடுக்கும் காணிக்கைகள் எல்லாம் தேவனுடைய ஆலயத்திற்குரியதென்றும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதற்காக நமக்குள் அனுப்பப்படுகிறார்.  மேலும் கர்த்தருடைய ஆலயமாகிய நாம் பரிசுத்த ஆலங்காரம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.  பரிசுத்த அலங்காரம் பெற்று நாம் கர்ததரை ஸ்தோத்தரிக்க வேண்டும்.  இப்படியாக கர்த்தரின் கரம் நம்மேல் இருந்து நாம் திடன் கொள்ளும்போது, கிறிஸ்து அநேகரை தன்னண்டையில் சேர்த்துக்கொள்வார். இப்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.