தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மல்கியா 3:8

மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்குரிய காணிக்கைப் பொருட்களில் ஜாக்கிரதையுள்ளவர்களாக காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் உபவாசத்தோடு கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எஸ்றா 8:24 

பின்பு நான் ஆசாரியரின் தலைவரிலே பன்னிரண்டுபேராகிய செரெபியாவையும், அஷ்பியாவையும், அவர்கள் சகோதரரிலே பத்துப்பேரையும் பிரித்தெடுத்து,

மேற்கூறப்பட்ட வசனங்களில் எஸ்றா சொன்னது, ஆசாரியரின் தலைவரிலே பன்னிரண்டுபேராகிய செரெபியாவையும், அஷ்பியாவையும் அவர்கள் சகோதரரிலே பத்து பேரையும் பிரித்தெடுத்து அவர்கள் கையிலே தேவனுடைய ஆலயத்துக்கென்று  

எஸ்றா 8:25 

ராஜாவும், அவருடைய ஆலோசனைக்காரரும், அவருடைய பிரபுக்களும், அங்கேயிருந்த சகல இஸ்ரவேலரும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று எடுத்துக்கொடுத்த காணிக்கையாகிய வெள்ளியையும், பொன்னையும், பணிமுட்டுகளையும் அவர்களிடத்தில் நிறுத்துக் கொடுத்தேன்.

மேற்கூறப்பட்டவர்கள் கொடுத்த காணிக்கையாகிய வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் நிறுத்துக் கொடுத்தேன்.  அவர்கள் கையிலே நிறுத்துக் கொடுத்த நிறையின் அளவு 

எஸ்றா 8:26,27 

அவர்கள் கையிலே நான் அறுநூற்று ஐம்பது தாலந்து வெள்ளியையும், நூறு தாலந்து நிறையான வெள்ளிப் பணிமுட்டுகளையும், நூறு தாலந்து பொன்னையும்,

ஆயிரம் தங்கக்காசு பெறுமான இருபது பொற்கிண்ணங்களையும், பொன்னைப்போல எண்ணப்பட்ட பளபளப்பான இரண்டு நல்ல வெண்கலப்பாத்திரங்களையும் நிறுத்துக்கொடுத்து,

இவைகளை நிறுத்துக்கொடுத்து அவர்களிடம் சொன்னது 

எஸ்றா 8:28, 29

அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குப் பரிசுத்தமானவர்கள்; இந்தப் பணிமுட்டுகளும், உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தருக்கு மனஉற்சாகமாய்ச் செலுத்தப்பட்ட இந்த வெள்ளியும், இந்தப் பொன்னும் பரிசுத்தமானவைகள்.

நீங்கள் அதை எருசலேமிலிருக்கிற தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் ஆசாரியர் லேவியருடைய பிரபுக்களுக்கும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவர்களுக்கும் முன்பாக நிறுத்து ஒப்புவிக்குமட்டும் விழிப்பாயிருந்து, அதைக் காத்துக்கொள்ளுங்கள் என்றேன்.

கர்த்தருக்காய் மன உற்சாகமாய் கொடுக்கப்பட்ட காணிக்கையை ஆலயத்தின் ஆசாரியர், லேவியருடைய பிரபுக்களுக்கும், இஸ்ரவேல் வம்ச தலைவர்களுக்கு முன்பாக நிறுத்து ஒப்புவிக்குமட்டும் விழிப்பாயிருந்து அதை காத்துக்கொள்ளுங்கள் என்றான்.அந்தபடியே அவர்கள் காணிக்கைப் பொருட்களை வாங்கிக் கொண்டார்கள்.  மேலும்,

பிரியமானவர்களே, கர்த்தருக்கு கொடுக்கும் காணிக்கைகளில் , மிகவும் தவறாமல் ஜாக்கிரதையோடு காணப்பட வேண்டும்.  மேற்கூறப்பட்ட வார்த்தைகளில் நிறுத்துக் கொடுக்கிறதை பார்க்கிறோம்.  ஆனால் ஆசாரியர்களும் ,லேவியரும் நிறுத்து தான் வாங்கிக்கொள்வார்கள்.  ஆதலால் கர்த்தருக்குரிய காணிக்கையை பெற்றுக்கொள்பவர்கள் மிகவும் கவனமாக விழிப்போடு காணப்பட வேண்டும்.  ஏனென்றால் கர்த்தர் அதனை நிறுத்து பார்க்கிறார். ஆதலால் நம்மிலும் குறைவு வராதபடி ஜாக்கிரதையோடு காத்துக் கொள்கிறவர்களாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.