தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 26:3 

 உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை உறுதியாய் பற்றிக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்குரிய காணிக்கைப்பொருட்களில் ஜாக்கிரதையுள்ளவர்களாக காணப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எஸ்றா 8: 31-34 

நாங்கள் எருசலேமுக்குப்போக, முதலாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே, அகாவா நதியைவிட்டுப் பயணம் புறப்பட்டோம்; எங்கள் தேவனுடைய கரம் எங்கள்மேலிருந்து, வழியிலே சத்துருவின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் எங்களைத் தப்புவித்தது.

நாங்கள் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு,

நாலாம் நாளிலே அந்த வெள்ளியும் பொன்னும் பணிமுட்டுகளும், எங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியனாகிய உரியாவின் குமாரன் மெரேமோத்தின் கையிலும், பினெகாசின் குமாரன் எலெயாசாரின் கையிலும், எல்லாவற்றிற்கும் இருந்த நிறையின்படியேயும் நிறுத்து, ஒப்புவிக்கப்பட்டது; யெசுவாவின் குமாரன் யோசபாத்தும், பின்னூயின் குமாரன் நொவதியாவும் என்கிற லேவியரும் அவர்களோடேகூட இருந்தார்கள்.

அந்த நிறையெல்லாம் அக்காலத்தில் எழுதப்பட்டது.

மேற்கூறபட்ட வசனங்களில் எஸ்றா சொன்னது நாங்கள் எருசலேமுக்கு போக முதலாம் மாதம் பன்னிரண்டாம் தேதியிலே அகாயா நதியை விட்டு பயணம் புறப்பட்டபோது கர்த்தரின் கரம் எங்கள் மேலிருந்து, வழியிலே சத்துருவின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் எங்களை தப்புவித்தது.   பின்பு எருசலேமுக்கு வந்து மூன்று நாள் கழிந்த பின்பு நாலாம் நாளிலே வெள்ளியும், பொன்னும், பணிமுட்டுகளும் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆசாரியனாகிய உரியாவின் குமாரன் மெரேமோத்தின் கையிலும், பினெகாசின் குமாரன் எலெயாசாரின் கையிலும் எல்லாவற்றிற்கும் இருந்த நிறையின்படி நிறுத்துக் கொடுத்து ஒப்புவிக்கப்பட்டது.  அப்போது யெசுவாவின் குமாரன் யோசபாத்தும் பின்னூயின் குமாரன் தொவதியாவும் என்கிற லேவியரும் அவர்களோடேகூட இருந்தார்கள்.  அந்த நிறையெல்லாம் அக்காலத்தில் எழுதப்பட்டது.  சிறைப்பட்டு மீட்டவர்கள் இஸ்ரவேலின் தேவனுக்கு சர்வாங்க பலியாக இஸ்ரவேல் அனைத்தினிமித்தம் 

எஸ்றா 8:35 

சிறைப்பட்டு மீண்டவர்கள் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளாக இஸ்ரவேல் அனைத்தினிமித்தம் பன்னிரண்டு காளைகளையும், தொண்ணூற்றாறு ஆட்டுக்கடாக்களையும், எழுபத்தேழு ஆட்டுக்குட்டிகளையும், பாவநிவாரணத்துக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு, அவையெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தினார்கள்.

மேற்படி எல்லாம் கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியாக செலுத்தினார்கள். பின்பு ராஜாவின் சன்னதுகளை நதிக்கு இப்புறத்திலிரிருக்கும்

ராஜாவின் தேசாதிபதிக்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஒப்புவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் தேசாதிபதிகளுக்கும், அப்பொழுது அவர்கள் ஜனங்களுக்கும், தேவனுடைய ஆலயத்திற்கும் உதவியாயிருந்தார்கள்.

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் கூறப்படுவது நாம் கர்த்தரின் சமூகத்தில் மூன்று நாள் தங்கியிருந்து காத்திருப்போமானால், நாலாம் நாளில் கர்த்தருக்குரிய காணிக்கையை குறைவில்லாமல் கொடுத்து;  பின்பு கர்த்தருக்கு சர்வாங்க தகனபலி செலுத்த வேண்டும்.  அப்போது கர்த்தர் நம்மை கர்த்தரின் வேலைக்காய் அங்கீகரிப்பார்.  அப்போது நாம் கர்த்தரின் ஆலயத்திற்கும், அங்கு வருகிற ஜனங்களுக்கும் உதவியாயிருக்க முடியும். இப்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.