தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யோவான் 10:7
ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நமக்கு கிறிஸ்துவே வாசல்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் இழந்து போன இரட்சிப்பை மீண்டும் நித்திய இரட்சிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
நெகேமியா 3:1-2
அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைபண்ணி, அதின் கதவுகளை வைத்து, மேயா என்கிற கொம்மை முதல் அனானெயேலின் கொம்மைமட்டும் கட்டிப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.
அவன் அருகே எரிகோவின் மனுஷர் கட்டினார்கள்; அவர்கள் அருகே இம்ரியின் குமாரனாகிய சக்கூர் கட்டினான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரர்களாகிய ஆசாரியர்களும் எழுந்து ஆட்டு வாசலை கட்டினார்கள்; அதைக் கட்டி பிரதீஷ்டைப் பண்ணி அதன் கதவுகளை வைத்து மேயா என்கிற கொம்மை முதல் அனானியேலின் கொம்மை மட்டும் கட்டி பிரதீஷ்டை பண்ணினார்கள். அவன் அருகே எரிகோவின் மனுஷர் கட்டினார்கள்; அவர்கள் அருகே இம்ரியின் குமாரன் சக்கூர் கட்டினான்; பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் நாம் கர்த்தரின் சந்நதியில் பாவ அறிக்கை செய்த பின்பு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு நம் உள்ளத்தை அவருக்காய் பிரதீஷ்டிக்கிறவர்களாக இருக்க வேண்டும். அப்படியாக நாம் கிறிஸ்துவோடு உடன்படிக்கையெடுத்திருக்கும் போது நம் முழு சரீரமும் அவருக்கே சொந்தமாகிறது. ஆனால் சத்துருவாகிய சாத்தான் நம்மை வஞ்சித்து சரீரத்தை ஆநீதியின் ஆயுதங்களை தரிக்க வைப்பதால் எரிகோவை கட்டி விடுகிறான். எரிகோ என்பது சாபத்தை நாம் அங்கியாக போர்த்து விடுகிறோம். ஆதலால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் பாவத்தையும், சாபத்தையும் சிலுவையில் சுமந்து தீர்த்தார் என்பதாய் வேதவசனம் எழுதப்பட்டுள்ளது. ஆதலால் நம்முடைய பாவமும், சாபமும் நீக்கப்படுதல், ஆட்டு வாசலைக் கட்டினார்கள் என்று திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது. ஆதலால் கிறிஸ்துவே நமக்கு வாசல் என்பதனை உணர்ந்துக்கொண்டு, அந்த வாசல் வழியாய் கர்த்தரிடத்தில் உட்பிரவேசிக்கும்படியாய் ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.