தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 4:34

இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினால் ஆத்தும ஆதாயம் செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்கு கிறிஸ்துவே வாசல் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்  

நெகேமியா 3:3-5 

மீன்வாசலை அசெனாவின் குமாரர் கட்டினார்கள்; அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.

அவர்கள் அருகே கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே மெஷேசாபெயேலின் குமாரனாகிய பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே பானாவின் குமாரனாகிய சாதோக் பழுதுபார்த்துக் கட்டினான்.

அவர்கள் அருகே தெக்கோவா ஊரார் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுடைய பிரபுக்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்கள் கழுத்தைக் கொடுக்கவில்லை.

மீன் வாசலை அசெனாவின் குமாரர் கட்டினார்கள்; அதற்கு உத்தரம் பாவி, அதற்கு கதவுகளையும், பூட்டுகளையும், தாள்பாள்களையும் போட்டார்கள்.  அவர்கள் அருகே கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் பழுது பார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே மெஷேசாபெயேலின் குமாரனாகிய பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே பானாவின் குமாரனாகிய சாதோக் பழுது பார்த்துக் கட்டினான். அவர்கள் அருகே தெக்கோவா ஊரார் பழுது பார்த்துக் கட்டினார்கள்.  அவர்களுடைய பிரபுக்களோ, தங்கள் ஆண்டவருடைய வலைக்குத் தங்கள் கழுத்தைக் கொடுக்கவில்லை. பிரியமானவர்களே,  மேற்கூறபட்டிருக்கிற கர்த்தரின் வார்த்தைகளை நாம் தியானிக்கும்போது, கிறிஸ்துவினால் ஆத்துமா ஆதாயம் திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது. என்னவென்றால் ஆத்தும ஆதாயப்படுத்தி பின்பு ஆத்துமாக்களில் இருக்கிற குறைகளை கண்டுணரந்து, அதனை சீர்படுத்துவது தான் பழுது பார்த்து கட்டினார்கள் என்று திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது. ஆனால் அதில் அனுபசாலிகள் தாங்கள் எந்த வேலையும் ஆண்டவருக்காய் செய்யவில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆதலால் பிரியமானவர்களே, நமக்குள் இருக்கிற கர்த்தரின் ஆலயத்தில் இவ்வித வாசல்கள் உண்டு என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  ஆதலால் நாம் எல்லாரும் தாழ்மைப்பட்டு, கர்த்தருக்கு கீழ்படிந்து ஆத்தும ஆதாயம் செய்கிறவர்களாக இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.