தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு 13:52

அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால், பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசன வார்த்தைகள் அலட்சியம் பண்ணாமல், காத்து நடக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினால் ஆத்தும ஆதாயம் செய்கிறவர்களாயிருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 3:6-12 

பழைய வாசலைப் பசெயாகின் குமாரனாகிய யோய்தாவும், பேசோதியாவின் குமாரனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.

அவர்கள் அருகே கிபியோன் மிஸ்பா ஊர்களின் மனுஷரான மெலதீயா என்னும் கிபியோனியனும், யாதோன் என்னும் மெரொனோத்தியனும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அதிபதியின் சமஸ்தானமட்டும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

அவர்கள் அருகே தட்டாரில் ஒருவனாகிய அராயாவின் குமாரன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே தைலக்காரரில் ஒருவன் குமாரனாகிய அனனியா பழுதுபார்த்துக்கட்டினான்; அதுமுதற்கொண்டு அகலமான மதில்மட்டும் எருசலேம் இடிக்காமல் விட்டிருந்தது.

அவர்கள் அருகே எருசலேம் பட்டணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய ஊரின் குமாரன் ரெப்பாயா பழுதுபார்த்துக் கட்டினான்.

அவர்கள் அருகே அருமாப்பின் குமாரன் யெதாயா தன் வீட்டுக்கு எதிரானதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே ஆசாப்நெயாவின் குமாரன் அத்தூஸ் பழுதுபார்த்துக் கட்டினான்.

மற்றப் பங்கையும், சூளைகளின் கொம்மையையும், ஆரீமின் குமாரன் மல்கிஜாவும், பாகாத்மோவாபின் குமாரன் அசூபும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

அவன் அருகே எருசலேம் பட்டணத்தின் மறுபாதிக்குப் பிரபுவாகிய அலோகேசின் குமாரன் சல்லூமும், அவன் குமாரத்திகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

மேற்கூறிய வசனங்களில் பழைய வாசல்களை பழுது பார்த்து  கட்டினவர்களும், அதற்கு கதவுகளையும், தாழ்பாள்களை போட்டவர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருக்கிறது.   அவர்கள் அருகே கிபியோன் மிஸ்பா ஊர்களின் மனுஷரான மெலதீயா என்னும் கிபியோனியனும். யாதோன் என்னும் மெரொனோத்தியனும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அதிபதியின் சமஸ்தானமட்டும் பழுது பார்த்து கட்டினான்.  அவர்கள் அருகே தட்டாரில் ஒருவனாகிய அரயாவினின் குமாரன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே தைலக்காரரின் குமாரனான அனனியா பழுது பார்த்துக் கட்டினான்.  அது முதற்கொண்டு அகலமான மதில்மட்டும் எருசலேமில் இடிக்காமல் விட்டிருந்தது.  அவர்கள் அருகே எருசலேம் பட்டணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய ஊரின் குமாரன் ரெப்பாயா பழுது பார்த்துக் கட்டினான். அவர்கள் அருகே அருமாப்பின் குமாரன் யெதாயா தன் வீட்டிற்கு எதிரானதை பழுது பார்த்துக் கட்டினான். மற்றும் கட்டினவர்கள் பழுது பார்த்து கட்டினார்கள் என்பதனை 

நெகேமியா 3:10-12-ல் கொடுக்கப்பட்டிருக்கிறது.  

பிரியமானவர்களே,மேற்கூறிய வசனங்களின் கருத்துகளை நாம் ஆராய்ந்தறியும் போது நாம் புதிய எருசலேமாக பணியப்படும் போள் நம்மில் உள்ள குறைகளை அறிந்து நம்மை கர்த்தரின் சந்நிதியில் சீர்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.  பழைய வாசல்  என்பது பழைய ஏற்பாட்டின் தேவனுடைய வார்த்தைகளை நாம் அலட்சியம் செய்யாமல், நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசிகளின் புஸ்தகங்களில் அடங்கியிருக்கிற கட்டளை கற்பனை

எல்லாவற்றியும் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.  ஏனெனில் அநேகர் அது பழைய ஏற்பாடு என்று தள்ளிவிடுகிறார்கள்; இது எத்தனை பாவம், அக்கிரமம் என்பதனை  நினைத்து, அவற்றிலுள்ள கருத்தக்களை கண்டறிந்து நம் வாழ்வை சீர்திருத்தி நிலைப்படுத்திக்கொண்டால் தான் புதிய எருசலேமாகிய மணவாட்டியானவர் நம்மில் கிரியை நடப்பித்து, நித்திய ஜீவனுக்கேதுவான காரியங்களில் நம்மை உறுதிப்படுத்துவார். ஆதலால் பிரியமானவர்களே, கிறிஸ்துவினால் பெற்றுக்கொள்ள வேண்டிய ஞானஸ்நானமும், அபிஷேகத்தாலும் நிறைந்து, வேதப்பிரமாணம், நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசன வார்த்தைகள், இவைகளையெல்லாம் கைக்கொண்டு கர்த்தரை முழு மனதோடு ஆராதிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.