தேவனுக்கே மகிமையுண்டாவதாக

அப்போஸ்தலர் 2:46,47

அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,

தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

 மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம்  கர்த்தருக்குரிய ஆராதனை ஸ்தலமாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசன வார்த்தைகள் அலட்சியம் பண்ணாமல், காத்து நடக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 3:13

பள்ளத்தாக்கின் வாசலை ஆனூனும், சானோவாகின் குடிகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, குப்பைமேட்டு வாசல்மட்டாக அலங்கத்தில் ஆயிரம் முழம் கட்டினார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் மூன்று வாசல்கள் நாம் தியானித்தோம்.  பின்பு நான்காவது வாசல் பள்ளதாக்கின் வாசல் என்பது கர்த்தராகிய இயேசுவினால் நாம் நம்முடைய ஆத்துமாவையும், மற்றும் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொண்டவர்களாய் இருக்கும் போது சபைகூடிவருதல் நமக்கு மிக முக்கியம்.  அவ்விதம் நாமும் நம்மால் ஆதாயப்படுத்திக்கொண்டவர்களும் ஒன்று சேர்ந்து சபைகூடி கர்த்தரை ஆராதிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.  இவ்விதமாக நம் உள்ளமானது ஒரு ஆராதனை ஸ்தலமாக இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.