தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 2:20

ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் பெற்ற நித்திய ஜீவன் அந்நிய ஸ்திரீயாகிய பரஸ் ஸ்திரீயால் (உலகத்தின் ஆவி) கெட்டுப்போகாமல் காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கு விலக்கி காத்துக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியனித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எஸ்றா 10:15-17 

ஆசகேலின் குமாரன் யோனத்தானும், திக்காவின் குமாரன் யக்சியாவுமாத்திரம் அதை விசாரிக்கும்படிக்கு வைக்கப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.

சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய எஸ்றாவும், தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாவம்சங்களின் தலைவர் அனைவரும், இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி பத்தாம் மாதம் முதல்தேதியிலே, தனித்து உட்கார்ந்து,

அந்நியஜாதியான ஸ்திரீகளைக்கொண்டவர்கள் எல்லாருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல்தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.

மேற்கூறிய வசனங்களில் ஆசகேலின் குமாரன் யோனத்தானும், திக்காவின் குமாரன் யக்சியாவும் மாத்திரம் அதை விசாரிக்கும்படிக்கு வைக்கப்பட்டார்கள். மெசுல்லாமும், சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள். சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இப்பிரகாரம் செய்ய ஆசாரியனாகிய எஸ்றாவும், தங்கள் பிதாக்களின் குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதா வம்ச தலைவர் அனைவரும் இந்த காரியத்தை விசாரிக்கும்படி பத்தாம் மாதம், முதல் தேதியிலே தனித்து உட்கார்ந்து அந்நிய ஸ்திரீகளை கொண்டவர்கள் எல்லாருடைய காரியத்தையும் முதலாம் முதலாம் தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.  அல்லாமலும் ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளை கொண்டவர்கள் 

எஸ்றா 10:18-43  

ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.

இவர்கள் தங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக்கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.

இம்மேரின் புத்திரரில் அனானியும், செபதியாவும்,

ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;

பஸ்கூரின் புத்திரரில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்;

லேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பேருமுள்ள கெலாயா, பெத்தகீயா, யூதா, எலியேசர் என்பவர்களும்;

பாடகரில் எலியாசிபும், வாசல் காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்;

மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;

ஏலாமின் புத்திரரில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும்;

சத்தூவின் புத்திரரில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா என்பவர்களும்;

பெபாயின் புத்திரரில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்;

பானியின் புத்திரரில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும்;

பாகாத்மோவாபின் புத்திரரில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும்;

ஆரீமின் புத்திரரில் எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன்,

பென்யமீன், மல்லூக், செமரியா என்பவர்களும்;

ஆசூமின் புத்திரரில் மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி என்பவர்களும்;

பானியின் புத்திரரில் மாதாயி, அம்ராம், ஊவேல்,

பெனாயா, பெதியா, கெல்லூ,

வனியா, மெரெமோத், எலெயாசீப்,

மத்தனியா, மதனாய், யாசாய்,

பானி, பின்னூயி, சிமெயி,

செலேமியா, நாத்தான், அதாயா,

மக்நாத்பாயி, சாசாயி, சாராயி,

அசரெயேல், செலேமியா, செமரியா,

சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும்;

நேபோவின் புத்திரரில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.

இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக்கொண்டவர்கள்,இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றார்கள்.

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்களில் அந்நிய பெண் என்றால் பரஸ்திரீ (உலகத்தின் ஆவி) இவை நம்முடைய உள்ளத்தில் கிரியைகள் செய்தால் நம் ஆத்துமாவில்  நித்திய ஜீவன் கெட்டுப்போகும்.  ஆதலால் நம் உள்ளம் எப்போதும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் நிரப்பப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.