தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 41:10

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் இழந்து போன சுதந்தரத்தை கர்த்தரிடத்திலிருந்து மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம் இரட்சிப்பும், வல்லமையும் இழந்துபோனோமானல் மீண்டும்  அதனை உபவாசத்தோடும் ஜெபத்தோடும் இருந்து பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 2:1-4 

அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன் ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமாயிருந்ததில்லை.

அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து,

ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன்.

அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி,

அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், அதை அவருக்கு எடுத்து கொடுத்த போது நெகேமியா துக்க முகமாயிருந்ததை கண்ட ராஜா அவனிடம் கேட்டது; நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? என்றும் உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார்; அப்பொழுது அவன் மிகவும் பயந்து ராஜாவை நோக்கி; ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதன் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய் கிடக்கும் போது நான் துக்க  முகமாய் இராதிருப்பது எப்படி என்றான்.  அப்போது ராஜா அவனை பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்ற போது, அவன் பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம் பண்ணி, ராஜாவை பார்த்து 

நெகேமியா 2:5,6 

ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்ப வேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன்.

அப்பொழுது ராஜஸ்திரீயும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னைப் பார்த்து: உன் பிரயாணம் எத்தனை நாள் செல்லும், நீ எப்பொழுது திரும்பிவருவாய் என்று கேட்டார். இவ்வளவுகாலம் செல்லுமென்று நான் ராஜாவுக்குச் சொன்னபோது, என்னை அனுப்ப அவருக்குச் சித்தமாயிற்று.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளை நெகேமியா ராஜாவிடம் சொன்ன பின்பு, பின்னும் அவன் ராஜாவை பார்த்து ராஜாவுக்கு சித்தமாயிருந்தால், நான் யூதா தேசத்துக்கு போய் சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்கு கடிதங்கள் கொடுக்கும்படிக்கும்,தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்க போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்கு கொடுக்கும்படியாகவும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்பட வேண்டும் என்றேன். தேவனுடைய தயவுள்ள கரம் என்மேலிருந்தபடியால், ராஜா அவைகளை எனக்கு கட்டளையிட்டார். அப்படியே நான் நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகளிடத்திற்கு வந்து ராஜாவின் கடிதங்களை அவர்களுக்கு கொடுத்தேன்; ராஜா என்னோடேகூட இராணுவ சேர்வைக்காரரையும், குதிரை வீரரையும் அனுப்பியிருந்தார். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது, நாம் பெற்றுக்கொண்ட பரிசுத்த வாழ்வு சத்துருவால் வஞ்சிக்கப்படும்போது, நாம் அசுத்தத்தில் வாழ்கிறோம்.  அந்த அசுத்தத்தால் நாம் கறைபடும் போது நமக்கு உண்டாயிருந்த சந்தோஷம் நம்மை விட்டு மாறி ஆத்தும துக்கம் உண்டாகிறது.  இதனை பார்க்கிற நம்முடைய ராஜாவாகிய கிறிஸ்து நம்மில் இருக்கிற துக்கத்தை விசாரிக்கும் போது, நாம் கர்த்தரிடத்தில் ஜெபம் பண்ணி பரிசுத்தத்தை பெற்றுக் கொள்ளும்படியாக மன்றாட வேண்டும். அவ்விதம் மன்றாடினால் நம் பிதாக்களால் செய்த பாரம்பரிய வாழ்வால் நம் ஆத்துமா மரித்திருந்தால், கிறிஸ்துவின் ஜீவனால் நாம் ஒவ்வொருவரும் உயிர்பிக்கப்பட்டு நித்திய வாழ்வை அடையும்படி கிறிஸ்து நமக்காக பரிந்து பேசுகிறார்  அப்போது நம்மை எப்படி சீர்திருத்திக்கொள்ள வேண்டுமோ, அப்படியே நமக்கு கற்று தந்து கர்த்தரிடத்திலிருந்து  தயவு கிடைக்கப் பண்ணி, சகல தேசாதிபதிகளிடத்திலிருந்து நம்மை விடுதலை செய்து, கிறிஸ்து எப்போதும் நமக்கு துணையாக காணப்படுவார்.  கிறிஸ்துவின் சகாயம் நமக்கு கிடைக்கும்படியாக ஒப்புக் கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.