தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 61:3
சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாக நம்முடைய உள்ளத்திலுள்ள பாவ அழுக்கை அனுதினம் கர்த்தரின் வசனத்தாலும், அவருடைய இரத்தத்தாலும் கழுவி சுத்திக்கரிக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில்,
மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் கர்த்தருக்குரிய ஆராதனை ஸ்தலமாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில்
நெகேமியா 3:14
குப்பைமேட்டு வாசலைப் பெத்கேரேமின் மாகாணத்துப் பிரபுவாகிய ரெக்காவின் குமாரன் மல்கியா பழுதுபார்த்து அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் குப்பைப் மேட்டு வாசலை பழுது பார்த்து கட்டி, அதற்கு தாழ்பாழ்களையும் பூட்டுகளையும் போட்டவன் பெயர் எழுதப்பட்டுள்ளது.
பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் கருத்துக்கள் என்னவெனில் நம் உள்ளம் கர்த்தருடைய பரிசுத்த ஆராதனை ஸ்தலமாக தேவன் ஆசீர்வதித்தால் அனுதினம் நாம், நம்முடைய பாவ அழுக்குகளையும் அக்கிரமங்களையும் மீறுதல்களையும் கர்த்தரின் சமூகத்தில் அறிக்கை ப்பண்ணி நம்மை அனுதினம் சீர்திருத்தி பரிசுத்தப்படுத்திக் கொள்ளுகிற வாழ்வு நம்முடைய வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்பதனை குப்பை மேட்டு வாசல் என்று திருஷ்டாந்தப்படுத்தியிருக்கிறார். அவ்விதம் நாம் சுத்திகரித்தால் கர்த்தர் சாம்பலை சிங்காரமாக மாற்றுகிறார். அவ்விதம் சிங்காரமாக மாற்றினால், அது பரிசுத்த அலங்காரமாக காணப்படுவோம். இவ்விதம் பரிசுத்த அலங்காரத்தோடு கர்த்தரை தொழுதுக் கொள்ளும்படியாக ஒப்புக் கொடுப்போம். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.