தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 28:26 

தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம் இரட்சிப்பும், வல்லமையும் இழந்துபோனோமானால் மீண்டும் அதனை உபவாசத்தோடும் ஜெபத்தோடும் இருந்து பெற்றுக்கொள்ளவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த  வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் பெற்ற நித்திய ஜீவன் அந்நிய ஸ்திரீயாகிய பரஸ் ஸ்திரீயால் (உலகத்தின் ஆவி)கெட்டுப்போகாமல் காத்துக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 1:1-4

அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசான் என்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்,

என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன்.

அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள்.

இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:

மேற்கூறப்பட்ட வசனங்களில் அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷத்தில் கிஸ்லேயு மாதத்தில் சூசான் என்னும் அரண்மனையில் இருக்கும் போது சம்பவித்தது என்னவென்றால் எஸ்றா சொன்னது என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்.  அவர்களிடத்தில் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும் , எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன்.  அப்போது சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்த தேசத்தில் மகா தீங்கையும், நிந்தையும் அனுபவிக்கிறார்கள்.  எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய் கிடக்கிறது என்றார்கள்.   இந்த வார்த்தைகளை கேட்ட போது  நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய் துக்கித்து, உபவாசித்து மன்றாடி பரலாகத்தின் தேவனை நோக்கி

நெகேமியா 1:5-11

பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,

உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்.

நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம்.

நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும்,

நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்.

தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே.

ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.

-ல் எஸ்றா கர்த்தரிடத்தில் தங்களை தாழ்த்தி ஒப்புக்கொடுத்ததும், தங்கள் குறைகளை அறிக்கைப்பண்ணினதும், கர்த்தரை புகழ்ந்ததும் நாம் வாசிக்க முடிகிறது.  மேலும் அவன் கூறினது  ஆண்டவரே உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்கு பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்கு காரியத்தை கைக்கூடிவர, பண்ணி இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப் பண்ணியருளும் என்று பிரார்த்தித்து,  ராஜாவுக்கு பானபாத்திரகாரனாயிருந்தேன் என்றான்.

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களின் திருஷ்டாந்தம் என்னவென்றால் நம்முடைய ஆத்துமா சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு சிறைப்பட்டு உலக ஆசாபாசங்களினால் சிக்கி இருப்போமானால், நம்முடைய இரட்சிப்பும், கிறிஸ்துவின் வல்லமையையும் இழந்து விடுகிறோம்.  அதனை நாம் உணர்ந்துக் கொண்டு உபவாசித்து மன்றாடி பரலோகத்தின் தேவனிடத்தில் நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுத்து, குறைகளை அறிக்கைப்பண்ண வேண்டும்.  அல்லாமலும் கர்த்தர் மகத்துவத்தையும், பராக்கிரமத்தையும் அணிந்துக்கொண்டவராக விளங்குகிறார். மேலும் நாம் கர்த்தரின் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாதே போனபடியால் சத்துரு அலங்கத்தை இடித்து, வாசலை சுட்டெரித்து போட்டான் என்பதனையும் உணர்ந்துக்கொண்டு, அவர் நம்முடைய ஜெபத்தை கேட்கும்படியாகவும், கேட்டு நம்மேல் இரக்கம் பாராட்டும்படியாகவும் கெஞ்சுவோமானால் கர்த்தராகிய கிறிஸ்து நமக்காக மன்றாடுகிறவராயிருக்கிறார்.இப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.