தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 86:16

என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் குமாரனை இரட்சியும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் இழந்த இரட்சிப்பை மீண்டும் புதுபித்துக்கொள்ள வேண்டும். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம்  தியானித்த வேதப்பகுதியில்,  

மணவாட்டி சபையாகிய நாம் இழந்து போன சுதந்தரத்தை கர்த்தரிடத்திலிருந்து மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 2:9-12

அப்படியே நான் நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகளிடத்துக்கு வந்து, ராஜாவின் கடிதங்களை அவர்களுக்குக் கொடுத்தேன்; ராஜா என்னோடேகூட இராணுவச் சேர்வைக்காரரையும், குதிரைவீரரையும் அனுப்பியிருந்தார்.

இதை ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் விசனமாயிருந்தது.

நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு,

நான் சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ராத்திரியில் எழுந்து நகர சோதனை செய்தேன்; ஆனாலும் எருசலேமுக்காகச் செய்யும்படி என் தேவன் என் மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை; நான் ஏறிப்போன மிருகமேயல்லாமல் வேறொரு மிருகமும் என்னோடிருந்ததில்லை.

மேற்கூறிய வசனங்களில் நெகேமியா நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகளிடத்துக்கு வந்து கடிதங்களை கொடுத்து கிறிஸ்துவின் சகாயம் அலங்கம் கட்டுவதற்கு கிடைத்ததும் ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு விசனமாயிருந்தது.  அப்போது எருசலேமுக்குள் மூன்று நாள் தங்கியிருந்த பின்பு சில மனிதரை நெகேமியா கூட்டிக்கொண்டு ராத்திரியில் எழுந்து நகர சோதனை செய்ததை யாருக்கும் சொல்லாதபடி தன் மனதில் வைத்ததை யாருக்கும் அறிவிக்காமல்,  தான் ஏறி போன மிருகமேயல்லாமல் வேறொருவரும் அவனோடு இல்லாதிருந்தார்கள். 

பிரியமானவர்களே,  மேற்கூறிய வசனங்கள் நாம் இழந்து போன இரட்சிப்பை திரும்ப கட்டுவற்கு ஆயத்தம் ஆகிறதை காண்கிற எதிராளியாகிய பிசாசானவன் எப்போது அதனை அழிக்கலாம் என்று வகை தேடும்போது, நாம் குறையாமல் மூன்று நாள் உபவாசித்து கண்ணீரோடும், அழுகையோடும் கர்த்தருக்கு முன்பாக மன்றாடுகிறவர்களாக இருக்க வேண்டும்.  மேலும் நம் இரட்சிப்பை திரும்பப் பெற்றுக்கொள்ள ஜாக்கிரதையோடு இருக்கும் போது கர்த்தர் தமது இரதத்தில் வந்து நம்மை  நகர சோதனை செய்கிறவராயிருப்பார். ஆதலால் பிரியமானவர்களே,  இழந்து போன இரட்சிப்பை மீண்டும் ஜாக்கிரதையோடு இருந்து பெற்றுக் கொள்ளும்படியாக ஒப்புக் கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.