தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எபேசியர் 6:10
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் இழந்து போன இரட்சிப்பை மீண்டும் நித்திய இரட்சிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் இழந்த இரட்சிப்பை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நெகேமியா 2:13-20
நான் அன்று ராத்திரி பள்ளத்தாக்கின் வாசல்வழியாய்ப் புறப்பட்டு, வலுசர்ப்பத் துரவைக் கடந்து, குப்பைமேட்டு வாசலுக்கு வந்து, எருசலேமில் இடிந்துபோன அலங்கத்தையும், அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும் பார்வையிட்டேன்.
அவ்விடத்தை விட்டு ஊருணி வாசலண்டைக்கும், ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோகிறதற்கு வழியில்லாதிருந்தது.
அன்று ராத்திரியிலேயே நான் ஆற்றோரமாய்ப் போய், அலங்கத்தைப் பார்வையிட்டுத் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல்வழியாய் வந்துவிட்டேன்.
நான் போனதும், நான் செய்ததும் அதிகாரிகள் ஒருவருக்கும் தெரியாது; அதுவரையிலும் நான் யூதருக்காகிலும், ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காகிலும், வேலைசெய்கிற மற்றவர்களுக்காகிலும் ஒன்றும் அறிவிக்கவில்லை.
பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி,
என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு அறிவித்தேன்; அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.
ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களைப் பரியாசம்பண்ணி, எங்களை நிந்தித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ என்றார்கள்.
அதற்கு நான் மறுமொழியாக: பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார்; அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோவென்றால் எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பேர் விளங்க ஒன்றும் இல்லையென்று அவர்களுடனே சொன்னேன்.
மேற்கூறிய வசனங்களில் நெகேமியாவை கர்த்தராகிய இயேசுவுக்கு திருஷ்டாந்தப்படுத்தப்பட்டிருக்கிறது. கர்த்தராகிய இயேசு எருசலேமாகிய நம் உள்ளம் எப்படிபட்டதாயிருக்கிறது என்பதனை சோதனை செய்கிறவராயிருக்கிறார். நம்முடைய இழந்த இரட்சிப்பை மீண்டும் புதுப்பிக்கும் வண்ணம் நாம் ஆயத்தமாகும் போது, நம்முடைய செயல்பாடுகளை நம் உள்ளத்திலிருந்தே ஆராய்ந்து அறிகிறவராயிருக்கிறார். அவர் ராத்திரியில் பள்ளதாக்குகளில் ஏறி வாசல்வழியாய்ப் புறப்பட்டு வலுசர்ப்ப துரவை கடந்து, குப்பைமேட்டு வாசலுக்கு வந்து, எருசலேமின் இடிந்து போன அலங்கத்தையும், அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும் பார்வையிட்டார். பின்பு அவ்விடத்தை விட்டு ஊருணி வாசலண்டைக்கும், ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்து போகிறதற்கு வழியில்லாதிருந்தது. அன்று ராத்திரியிலேயே நான் ஆற்றோரமாய் போய், அலங்கத்தைப் பார்வையிட்டு திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல்வழியாய் வந்துவிட்டேன். மேலும் நெகேமியா செய்ததை யாருக்கும், எந்த அதிகாரிகளுக்காகிலும் அறிவிக்கவில்லை. பின்பு அவன் ஜனங்களிடத்தில் சொன்னது எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதன் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டு கிடக்கிறதையும் நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே, நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தை கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, தேவனுடைய கரம் என் மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தகளையும் அவர்களுக்கு அறிவித்தேன்; அப்பொழுது அவர்கள் எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்கு தங்கள் கைகளை திடப்படுத்தினார்கள். ஓரோனியனான சன்னபல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதனைக் கேட்ட போது பரியாசம்பண்ணி, எங்களை நிந்தித்து நீங்கள் செய்கிற இந்த காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாக கலகம் பண்ண போகிறீர்களோ என்றார்கள். அதற்கு நெகேமியா மறுமொழியாக பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைக்கூடிவரப்பண்ணுவார். எங்களுடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்துக் கட்டுவோம். உங்களுக்கோவெனில் எருசலேமில் பங்குமில்லை, பாத்தியதையுமில்லை; உங்கள் பேர் விளங்க ஒன்றுமில்லையென்று அவர்களுடனே சொன்னேன் என்கிற வார்த்தைகள் நமக்கு திருஷ்டாந்தத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களில் நாம் தியானிக்கும் போது இரட்சிப்பை இழந்த நாம் மீண்டும் புதுப்பிக்க நம்மை ஆயத்தப்படுத்தும்போது, கரத்தர் நம்மை நகர சோதனை செய்வதுமல்லாமல், உலகத்தின் ஆவியை கடந்து கிறிஸ்துவின் வாசல்கள் வழியாய் உட்பிரவேசித்து, அவருடைய சுவிசேஷத்தின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து, அதன் மூலம் நம்முடைய பாவங்களை கர்த்தரின் சமூகத்தில் அறிக்கை செய்யும் போது, கர்த்தரின் கரம் நம்மேல் நன்மைக்காக வைக்கும் போது, அதற்கு எதிராளியாகிய பிசாசானவன் பல உபாய தந்திரங்களோடு நம் உள்ளத்தில் செயல்படுவான். அப்போது பிசாசானவனுடைய தந்திரங்களுக்கு எதிர்த்து நின்று விசுவாசத்தினால் போராடி கிறிஸ்துவினால் ஜெயம் பெற்று மீண்டும் புதிய இரட்சிப்பைப் அடைந்துக்கொள்ள வேண்டும். அப்போது சத்துருவாகிய சாத்தானுக்கு நம்மிடத்தில் எந்த பங்குமில்லை, பாத்தியதையுமில்லாதபடி உள்ளத்தை தேவ அன்பினால் நிறைத்து, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தால் நாம் கிறிஸ்துவின் வல்லைமையை தரித்துக்கொண்டு நித்திய இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.