தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு 26:26,27

அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.

பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்மில் உள்ள பாவங்களை துவக்க முதல் கடைசி பரிசுத்த பந்தி புசிக்கும் வரையிலும் உள்ள குறைகளை உணர்ந்து சுத்திகரித்துக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவின் பெலனால் குதிரைக்கு ஒப்பாக வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 3:31,32

அவனுக்குப் பின்னாகத் தட்டானின் குமாரன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே நிதனீமியரும் மளிகைக்காரரும் குடியிருக்கிற ஸ்தலமுதல் கோடியின் மேல்வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.

கோடியின் மேல்வீட்டுக்கும் ஆட்டுவாசலுக்கும் நடுவே இருக்கிறதைத் தட்டாரும் மளிகைக்காரரும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் கிறிஸ்து நம்முடைய சத்துருக்களோடு போராடி நமக்கு ஜெயம் கிடைத்த பின்பு கர்த்தர் செய்வது என்னவென்றால் மல்கியா ( மிப்காத் ) வாசலுக்கு எதிரே நிதனீமியரும் மளிகைக்காரரும் குடியிருக்கிற ஸ்தல முதல் கோடியின் மேல்வீடு மட்டாக இருக்கிறதை பழுதுப் பார்த்து கட்டுகிறார்.  கோடியின் மேல் வீட்டுக்கும், ஆட்டு வாசலுக்கும் நடுவே இருக்கிறதைத் தட்டாரும் மளிகைக்காரரும் பழுதுப்பார்த்துக் கட்டினார்கள்.

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்கள் என்னவென்றால் நம்முடைய ஆத்மீகத்தின் வளர்ச்சிக்கு மாறாக சத்துருவானவன் நம் உள்ளத்தை ஏதாவது தொழில் காரியமாக வஞ்சித்து வைத்திருப்பானானால், நாம் அவற்றின் உண்மையை கண்டறிந்து நம்மை சீர்திருத்திக் கொள்வது மிகவும் அவசியமாயிருக்கிறது.  அல்லாமலும் மிப்காத் வாசலாக நம்முடைய உள்ளம், பரிசுத்த பந்தி புசிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.  இந்த பந்தி புசிக்கும் முன்பாக நம் குறைகளை எல்லாம் உணர்ந்து கிறஸ்துவின் வசனத்தாலும், இரத்தத்தாலும் துவக்க முதல் இதுவரையிலும் உள்ள பாவங்களை பழுது பார்த்து சுத்திகரித்துக் கொண்டவர்களாக நம் இரட்சிப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.  இவ்விதம் பாதுகாத்துக்கொள்ளும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.