தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 2:7,8

தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;

என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் இரட்சிப்பின் தடைகளை தகர்த்து ஜெயிக்கிறவர்களாக இருக்க வேண்டும். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்ந நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், 

மணவாட்டி சபையாகிய நாம் நம்மில் உள்ள பாவங்களை துவக்க முதல் கடைசி பரிசுத்த பந்தி புசிக்கும்வரையிலும் உள்ள குறைகளை உணர்ந்து சுத்திகரித்துக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 4:1-9 

நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி:

அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளிலே முடித்துப்போடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனைக்கும் முன்பாகச் சொன்னான்.

அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான்.

எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும்.

அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்கள் பாவம் உமக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசினார்களே.

நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம்; அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது; ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள்.

எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்றும், இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டு வருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலாகி,

எருசலேமின்மேல் யுத்தம்பண்ண எல்லாரும் ஏகமாய் வரவும், வேலையைத் தடுக்கவும் கட்டுப்பாடு பண்ணினார்கள்.

ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும் பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம்.

மேற்கூறிய வசனங்களில் அலங்கத்தை கட்டுகிற செய்தியை சன்பல்லாத் கேட்டபோது, கோபித்து எரிச்சலாகி, யூதரை சக்கந்தம் பண்ணி; அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன என்றும், அவர்களுக்கு இடங் கொடுக்கப்படுமோ,  பலியிடுவார்களோ, ஒருநாளில் முடித்து விடுவார்களோ, சுட்டெரித்த மண் மேடுகளான கற்களுக்கு உயிர்க்கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும சமாரியாவின் சேனைக்கும் முன்பாக சொன்னான்.  அப்போது அம்மோனியனான தொபியா அவன் பக்கத்தில் நின்று சொன்னது; அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்கள் கற்சுவர் இடிந்து போகுமே என்றான்.  அதற்கு நெகேமியா தேவனிடம், எங்கள் தேவனே நாங்கள் அவமதிக்கப்படுகிறதை கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின் மேல் திருப்பி, அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும்    பின்னும்  நெகேமியா சொன்னது அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும், அவர்கள் பாவம் உமக்கு முன்பாக கொலைக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாக பேசினார்களே.  ஏனென்றால் அலங்கத்தை கட்டிவரும்போது  பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது; ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாய் இருந்தார்கள். எருசலேமின் அலங்க வேலை வளர்ந்தேறுகிறது என்றும், இடிக்கப்பட்ட இடங்கள் எல்லாம் அடைபட்டு வருகிறது என்றும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் கேட்டபோது, மிகவும் எரிச்சலாகி எருசலேமின் மேல் யுத்தம் பண்ணவும், எல்லாரும் ஏகமாய் வரவும் வேலையை தடுக்கவும் கட்டுபாடு பண்ணினார்கள்.  அப்போது எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி அவர்கள் நிமித்தம்  இரவும் பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களின் பிரகாரம் கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தபடுத்தியது என்னவென்றால் ஒருமுறை நாம் நித்திய ஜீவனை இழந்தும், மீண்டும் பெற்றுக்கொள்ள நாம் கர்த்தரின் கற்பனைக்கும், கட்டளைகளுக்கும் கீழ்படிந்து  நம்மை பரிசுத்த படுத்தி வரும்போது, நமக்கு எதிரான சத்துருக்கள் மிகவும் எரிச்சலடைந்து அதனை தடுத்து நிறுத்தும்படியாக பல தந்திரமான காரியங்களை நம் உள்ளத்தில் விதைத்து, அக்கிரமங்கள் செய்ய வைக்கிறதினால், நாம் மீண்டும் புதுபிக்காதபடி சத்துருவாகிய சாத்தான் தடை பண்ணுவான்; பல விதத்தில் சாத்தான் தந்திரமாக மனுஷர்கள் மூலமாக நம்மை பரியாசம் பண்ணுவான்; மற்றும்  பல வழிகளில் நம்மை நெருக்கத்திற்குட்படுத்தும். ஆனால் நாம் பயப்படாதபடி நம்மை திடன்படுத்திக்கொண்டு கர்த்தர் மேல் மட்டும் நம்பிக்கை வைக்கிறவர்களாக இருந்து இழந்து போன நித்திய ஜீவனை மீண்டும் பெற்றுக் கொள்ளும்படியாக நாம் இரவும் பகலும் கர்த்தரிடத்தில்  ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.  இப்படியாக இழந்து போன நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளும்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.