தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 29:24 
திருடனோடே பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் வார்த்தைகளையெல்லாம் நம்மில் நிறைவேற்ற வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில்

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய சபையாம் சகோதரரிடையில் வட்டியாவது, பொலிசையாவது வாங்கக் கூடாது என்பது குறித்து தியானனித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 5:13  

நான் என் வஸ்திரத்தை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர்; இந்தப்பிரகாரமாக அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாய்ப் போவானாக என்றேன்; அதற்குச் சபையார் எல்லாரும் ஆமென் என்று சொல்லி, கர்த்தரைத் துதித்தார்கள்; பின்பு ஜனங்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள்.

மேற்கூறிய  வசனங்களில் நெகேமியா பிரபுக்களையும், அதிகாரிகளிடமும் வட்டியைக் குறித்தும், பொலிசையைக் குறித்தும் ஆணையிடுவித்துக்கொண்ட பின் தன்னுடைய வஸ்திரத்தை உதறி விட்டு சொன்னது என்னவென்றால்  என் வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் , அவன் வீட்டிலிருந்தும், அவன் சம்பாத்தியத்திலிருந்தும் உதறிப் போட கடவர்; இந்த பிரகாரமாக உதறிப் போட்டு வெறுமையாய் போவானாக என்றேன்.  அதற்கு சபையார் எல்லாரும் ஆமென் என்று சொல்லி கர்த்தரை துதித்தார்கள்.  பின்பு ஜனங்கள் இந்த வார்த்தையின் படியே செய்தார்கள்.

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் திருஷ்டாந்தம் என்னவென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு நாம் செவிகொடாவிட்டால்  நம்மை அவருடைய வீடாகிய சபையிலிருந்தும், அவர் சம்பாத்தியத்திலிருந்தும் நம்மை உதறி போட்டு, எந்த இரட்சிப்பும் இல்லாமல் நம்மை கர்த்தர் வெறுமையாக்குவார்.  பிரியமானவர்களே, இந்த காரியத்தை நாம் பார்க்கும் போது, நாம் கர்த்தருடைய வார்த்தைகளை நம்மில் நிறைவேற்றி கர்த்தரை துதித்து ஸ்தோத்தரித்தவர்களாக நம்மை தேவனுக்கென்று ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.