தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு 26:26-27 

அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.

பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய நற்கிரியைகளினால் கரத்தர் நமக்கு நன்மையுண்டாக செய்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் வார்த்தைகளை நம்மில் நிறைவேற்றுகிறவர்களாக இருக்க வேண்டும்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 5:14-19 

நான் யூதாதேசத்திலே அதிபதியாயிருக்கும்படி ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்குக் கற்பித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருஷம்தொடங்கி, அவருடைய முப்பத்திரண்டாம் வருஷம்வரைக்கும் இருந்த பன்னிரண்டு வருஷகாலமாய், நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை.

எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பது சேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை.

ஒரு வயலையாவது நாங்கள் கொள்ளவில்லை; அந்த அலங்கத்தின் வேலையிலே முயன்று நின்றேன்; என் வேலைக்காரரனைவரும் கூட்டமாய் அந்த வேலைக்குக் கூடிவந்தார்கள்.

யூதரும் மூப்பருமான நூற்றைம்பதுபேரும், எங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்தவர்களும் என் பந்தியில் சாப்பிட்டார்கள்.

நாளொன்றுக்கு ஒரு காளையும், முதல்தரமான ஆறு ஆடும் சமைக்கப்பட்டது; பட்சிகளும் சமைக்கப்பட்டது; பத்துநாளைக்கு ஒருதரம் நானாவிதத் திராட்சரசமும் செலவழிந்தது. இப்படியெல்லாம் இருந்தபோதும், இந்த ஜனங்கள் பட்டபாடு கடினமாயிருந்தபடியால், அதிபதிகள் வாங்குகிற படியை நான் வாங்கவில்லை.

என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் நெகேமியா சொன்னது; நான் யூதா தேசத்திலே அதிபதியாயிருக்கும்படி ராஜாவாகிய அர்தசஷ்டா கனக்கு கற்பித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருஷம் தொடங்கி, அவருடைய முப்பத்திரண்டாம் வருஷம் வரைக்குமிருந்த பன்னிரண்டு வருஷ காலமாய், நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கி சாப்பிடவில்லை. எனக்கு முன்னிருந்த அதிபதிகள் எனக்கு பாரமாயிருந்து அவர்கள் கையில் அப்பமும் திராட்சரசமும் வாங்கினதுமல்லாமல் நாற்பது சேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள் மேல் அதிகாரம் செலுத்தி  வந்தார்கள்.  நானோ தேவனுக்கு பயந்ததினால் அப்படி செய்யவில்லை.  ஒரு வயலையாவது கொள்ளவில்லை; அலங்கத்து வேலையிலே முயன்று நின்றேன்.   வேலைகாரர் கூடி வந்து வேலை செய்தார்கள். யூதரும், மூப்பருமானவர்களும், புறஜாதிகளிடத்திலிருந்து எங்களிடத்தில் வந்தவர்களும் பந்தியில் சாப்பிட்டார்கள்.  நாளொன்றுக்கு ஒரு காளையும், முதல்தரமான ஆறு ஆடும் சமைக்கப்பட்டது; பட்சிகளும் சமைக்கப்பட்டது; பத்து நாளைக்கு ஒரு முறை நானாவித திராட்சரசமும் செலவழிந்தது.  இப்படியிருந்த போதிலும்,  ஜனங்கள் பட்டபாடு கடினமாயிருந்தபடியினால் அதிபதிகள் வாங்குகிற படியை நெகேமியா வாங்கவில்லை.  மீண்டும் அவன் சொன்னது, என் தேவனே நான் இந்த ஜனத்துக்காக செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும் என்கிறான். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களின்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனுக்கு முன்பாக எப்படி தேவனுக்காக செய்கிறார் என்பது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.  அவர் பிதாவாகிய தேவன் தன்னிடத்தில் ஒப்புவித்த எல்லா வேலைகளையும் எந்த படியையும் வாங்காமல் செய்கிறார் என்பது திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆனால் கிறிஸ்து நம்மில் வருவதற்கு முன்னால் எந்த அதிபதிகளும் அவ்விதம் செய்யவில்லை.  அவர்கள் ஜனங்கள் மேல் அதிகாரம் செலுத்தி வந்தார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக இரத்தம் சிந்தினவராக, அவர் சரீரம் நமக்காக அடிக்கப்பட்டு, அந்த மாம்சமும், இரத்தமும்  நமக்கு போஜனமாக புசிக்க அப்பத்தையும், திராட்சரசமும் நமக்காக ஆயத்தப்படுத்தி, பிதாவினால் முத்திரிக்கப்பட்டு நம்மோடு கூட பரிசுத்த பந்தியில் கிறிஸ்து  புசிக்கிறார் என்பது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.  இவ்விதம் நாம் செய்கிறவர்களாயிருந்து அனுதினம் நம்முடைய ஆவி ஆத்துமா சரீரம் பரிசுத்தமாயிருக்கும்படி நம்மை முழுமையும் கர்த்தருக்கு முன்பாக ஜீவபலியான காணிக்கையாக ஒப்புக்கொடுத்தால் அவர் நமக்கு இவை எல்லாவற்றின்படியும் நன்மையுண்டாக செய்வார்.  இப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.