தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 99:5
நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா பாபிலோனாகிய உலக கிரியைகளினால் சிறைபட்டிருந்தால் இந்நாளில் மீண்டும் புதுப்பிக்கப்படுவோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்தில் நம்முடைய எல்லா காரியங்களையும் ஒப்படைத்தால் அவர் நம்மை நன்மைகளால் நிரப்புவார் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நெகேமியா 7:1- 5
அலங்கம் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும், பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு,
நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல்விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
பட்டணம் விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது; அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.
அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்க்கிறதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்ய, என் தேவன் என் மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முந்தி வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புஸ்தகம் அப்பொழுது எனக்கு அகப்பட்டது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்,
அலங்கம் கட்டி முடிந்து கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும், பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தின பின்பு, நெகேமியா அவன் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவனும், தேவனுக்கு பயந்தவனுமாயிருந்த அரமனை தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்துகிறான். நெகேமியா அவர்களிடம் சொன்னது வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும் போதே கதவுகளை சாத்தி தாழ்ப்பாள்களைப் போட்டு , எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்பட வேண்டும் என்றான். பட்டணம் விஸ்தாரமும் பெரியதுமாயிருந்தது, அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள், வீடுகளும் கட்டபடவில்லை. பின்பு வம்ச அட்டவணை பார்க்கும்படி பிரபுக்களையும், அதிகாரிகளையும், ஜனங்களையும் கூடி வரச் செய்ய தேவன் மனதில் எண்ணம் தந்தபோது, முந்தி வந்தவர்களின் வம்ச அட்டவணை புஸ்தகம் கையில் கிடைக்க; அதில் எழுதியிருந்தது என்னவென்றால்
நெகேமியா 7:6-63
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியிறங்கினவர்களுமான இந்தத் தேசத்தின் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனங்களான மனிதரின் தொகையாவது:
பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத்மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப்பேர்.
ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.
சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர்.
சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.
பின்னூவின் புத்திரர் அறுநூற்று நாற்பத்தெட்டுப்பேர்.
பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்தெட்டுப்பேர்.
அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர்.
அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தேழுபேர்.
பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர்.
ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர்.
எசேக்கியாவின் சந்ததியான ஆதேரின் புத்திரர் தொண்ணூற்று எட்டுப்பேர்.
ஆசூமின் புத்திரர் முந்நூற்று இருபத்தெட்டுப்பேர்.
பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துநாலுபேர்.
ஆரீப்பின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.
கிபியோனின் புத்திரர் தொண்ணூற்று ஐந்துபேர்.
பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர்.
ஆனதோத்தூர் மனிதர் நூற்று இருபத்தெட்டுப்பேர்.
பெத்அஸ்மாவேத் ஊரார் நாற்பத்திரண்டுபேர்.
கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.
ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர்.
மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர்.
பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர்.
வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர்.
மற்றொரு ஏலாம் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.
ஆரீம் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.
எரிகோ புத்திரர் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்.
லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொருபேர்.
செனாகா புத்திரர் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பதுபேர்.
ஆசாரியரானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.
பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.
ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப் பதினேழுபேர்.
லேவியரானவர்கள்: ஒதியாவின் புத்திரருக்குள்ளே கத்மியேலின் குமாரனாகிய யெசுவாவின் புத்திரர் எழுபத்துநாலுபேர்.
பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர்.
வாசல் காவலாளரானவர்கள்: சல்லூமின் புத்திரர், அதேரின் புத்திரர், தல்மோனின் புத்திரர், அக்கூபின் புத்திரர், அதிதாவின் புத்திரர், சோபாயின் புத்திரர், ஆக நூற்று முப்பத்தெட்டுப்பேர்.
நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர்,
கேரோசின் புத்திரர், சீயாவின் புத்திரர், பாதோனின் புத்திரர்,
லெபானாவின் புத்திரர், அகாபாவின் புத்திரர், சல்மாயின் புத்திரர்,
ஆனானின் புத்திரர், கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர்,
ராயாகின் புத்திரர், ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர்,
காசாமின் புத்திரர், ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர்,
பேசாயின் புத்திரர், மெயுநீமின் புத்திரர், நெபிஷசீமின் புத்திரர்,
பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர்,
பஸ்லீதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,
பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர்,
நெத்சியாகின் புத்திரர், அதிபாவின் புத்திரர்,
சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெரிதாவின் புத்திரர்,
யாலாவின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர்,
செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், பொகெரேத் செபாயிமிலுள்ள புத்திரர், ஆமோனின் புத்திரர்.
நிதனீமியரும், சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
ஆசாரியர்களில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கிலேயாத்தியனான பர்சில்லாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரர்.
மேற்கூறியவைகள் என்னவென்றால் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத் நேச்சார் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டவர்களில் எருசலேமுக்கும், யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியிறங்கினவர்களின் பெயர்களும், வம்சங்களும் எழுதப்பட்டிருக்கிறது. அல்லாமலும் ஆசாரியர்களில் இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையில் தேடியும் காணாமற் போய் ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்களில் இழந்த இரட்சிப்பை மீண்டும் பெற்றுக்கொண்டு, எந்த துர்கிரியைகளுக்கும், பொல்லாப்புகளுக்கும் நம் உள்ளத்தில் இடம் கொடாதபடி கதவுகளால் அடைத்து கிறிஸ்துவின் ஆவியினால் தாழ்பாள்கள் போடபட்டு, அவர் வசனத்தால் நம் எல்லா சிந்தைகளையும் செயல்களையும் கிறிஸ்துவுக்குள் காத்துக்கொள்ள வேண்டும். அல்லாமலும் நாம் பெற்றுக்கொள்கிற அபிஷேகம் கிறிஸ்துவினால் உள்ள பரிசுத்த அபிஷேகமாக இருந்தால் மட்டும்,கிறிஸ்து நம் உள்ளத்தில் ஆசாரியராக செயல்படுகிறார் என்பது திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது. மற்றும் உலக கிரியைகள் இருந்தால் நாம் ஒரு போதும் நித்திய வீடாக முடியாது. மேலும் இரட்சிப்பை மீண்டும் புதுப்பித்துக்கொண்டால் நம் வீட்டாரை சத்துரு வீழ்த்தாதபடி எப்போதும் கர்த்தரின் வசனத்தால் வீட்டார் அனைவரையும் காக்கிறதில் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால் எத்தனையோ பேர் உலக செயல்படுபாடுகளில் இச்சை கொள்கிறதினால் பரலோக நன்மையை இழந்து விடுகிறார்கள்; இஸ்ரவேலராகிய எல்லாருக்கும் அந்த கிருபை கொடுக்கபடவில்லை என்பது திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது. ஆதலால் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் பரிசுத்தபாதையில் கிறிஸ்துவிலுள்ள சத்தியத்தின்படி நடந்து, அவர் ஆவியின் அபிஷேகம் பெற்று கிறிஸ்து நம்மில் ஆசாரியராக செயல்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.