தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எபிரெயர் 5:10
மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மில் கிறிஸ்து என்றன்றைக்கும் ஆசாரியராக வெளிப்படுகிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா பாபிலோனாகிய உலக கிரியைகளினால் சிறைபட்டிருந்தால் இந்நாளில் மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நெகேமியா 7:60-65
நிதனீமியரும், சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
ஆசாரியர்களில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கிலேயாத்தியனான பர்சில்லாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரர்.
இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், அவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
நெகேமியா 7:66-70
சபையார் எல்லாரும் ஏகத்துக்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும், வேலைக்காரிகளும் இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்கள் கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.
ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
வம்சத்தலைவரில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும், ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய வஸ்திரங்களையும் பொக்கிஷத்துக்குக் கொடுத்தான்.
மேற்கூறபட்ட வசனங்களில் ஒரு ஆசாரியர் தீர்க்கதரிசியாகவும், நியாயந்தீர்க்கிறவராகவும் ஜனங்களுக்குள்ளிலிருந்து எழும்புவார் என்பது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது. அல்லாமலும் வேலைக்காரர், வேலைக்காரிகள், பாடகர், பாடகிகளும் இருந்தார்கள். அவர்களுக்கு குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள் அநேகம் இருந்ததாக எழுதப்பட்டுள்ளது. வம்ச தலைவரில் சிலர் வேலைக்கென்று கொடுத்தாவது; திர்ஷாதா ஆயிரம் தங்க காசையும், ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய வஸ்திரங்களையும் பொக்கிஷத்துக்கு கொடுத்தான். மற்றும் சிலர் கொடுத்தவைகள்
நெகேமியா 7:71-73
வம்சத்தலைவரில் சிலர் வேலையின் பொக்கிஷத்துக்கு இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.
மற்ற ஜனங்கள் இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஜனங்களில் சிலரும், நிதனீமியரும், இஸ்ரவேலர் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.
மேற்கூறப்ட்டவைகளை கர்த்தருடைய வேலைக்கென்று கொடுத்தும், ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஜனங்களில் சிலரும், நிதனீமியரும், இஸ்ரவேலர் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்.
பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மில் என்றன்றைக்கும் ஆசாரியராக வெளிப்படுவார் என்பதும், அவர்தான் தீர்க்கதரிசியும், நியாயந்தீர்க்கிற நியாயதிபதியும், தேவனுடைய வேலைக்காரரையும், வேலைகாரர்களை நம்மில் நியமித்து எடுக்கிறவரும், பாடகரரையும் , பாடகிகளையும் ஏற்ப்படுத்துகிறவராகவும், இவ்விதமாய் ஜனங்களை கர்த்தரின் சமூகத்தில் கர்த்தரை ஆராதிக்கும்படியாக ஒவ்வொருவரையும் தனிதனியாக கர்த்தர் அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் மீட்டு ஒன்றாக தேவனுடைய ராஜ்யத்திலே கொண்டு வருகிறார் என்பது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது. ஆதலால் நாம் யாவரிலும் கிறிஸ்து ஆசாரியராக வெளிப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.