தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1கொரிந்தியர் 3:4,5 

ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா?

பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தேவ பெலன் தரித்துக் கொள்ளுதல்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் கர்த்தருடைய நியாயப்பிரமாண புஸ்தகம் நாம் ஒவ்வொருவருடைய பாவத்தை நமக்கு போதிக்கும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 8:10 

பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.

மேற்கூறிய வசனங்களில் நியாயப்பிரமாணம் விளக்கி காட்டினபோது ஜனங்கள் துக்கப்படவும், அழவும் செய்தார்கள்.  அப்போது அவர்களிடம் சொன்னது; இந்த நாள் கர்த்தருக்கு பரிசுத்தமான நாள்; துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்று சொல்லி அவர்களை நோக்கி: நீங்கள் போய் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதை குடித்து  ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள். பரிசுத்தமான நாளில் எதற்கும் விசாரப்படக்கூடாது என்றும், பரிசுத்தமாயிருப்பதே கர்த்தர் நமக்கு தரும் பெலன் என்றான். லேவியரும் அந்தபடியே  சொன்னார்கள்.  அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துக்கொண்டபடியினால், புசித்து குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது, நியாயப்பிரமாணமானது நம்முடைய கிரியைகளில் செய்வோமானால் அது ஒவ்வொன்றாக பரிசுத்தத்திற்கு ஊன்றுகோலாக இருக்கிறது. மேலும் நம்மை பரிசுத்தப்படுத்தபடுகிறது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கி நம்மை சுத்திகரிப்பதும், அவருடைய வசனம் நாம் ஏற்றுக்கொண்டு கற்பனைகள், கட்டளைகளின் பிரகாரம் தவறாமல் நடக்கும் போது, அது நம்மை பரிசுத்தப்படுத்துகிறது.  அவ்விதம் பரிசுத்தமாக கர்த்தரை அனுதினம் ஆராதனை செய்கிறவர்களாக இருக்க வேண்டும். அவ்விதமாக இருந்தால் நாம் எதற்கும் விசாரப்படாமலும், அழாமலும்  மகிழ்ச்சியாயிருப்பது தேவன் நமக்கு தருகிற பெலன். மேலும் நாம் தேவாராதனைக்கு பிறகு நாம் கொழுமையானதை புசித்து, மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் இவ்விதமாக தேவ பெலன் பெற்றுக்கொள்ளும்படியாக நம்மை ஒப்புக்கொடுக்க  வேண்டும்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.