தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 8:23

அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளான சரீரம் கிறிஸ்துவின் கூடாரமாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தேவ பெலன் தரித்துக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 8:13-14 

மறுநாளில் ஜனத்தின் சகல வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவினிடத்தில் கூடிவந்தார்கள்.

அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்கவேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டார்கள்.

மேற்கூறிய வசனங்களில் ஜனங்கள் நியாயப்பிரமாணம் கேட்டு தங்களை கர்த்தரின் சமூகத்தில் ஒப்புக்கொடுத்து, மகிழ்ச்சியோடு கர்த்தருக்கு ஆராதனை செய்தபோது, மறு நாளில் ஜனத்தின் சகல வம்சதலைவரும், ஆசாரியரும், லேவியரும், லேவியரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துக்கொள்ளும்படி கூடி வந்த போது இஸ்ரவேலர் ஏழாம் மாதத்திலே பண்டிகையிலே கூடாரங்களிலே இருக்க வேண்டும் என்று கர்த்தர் மோசேயை கொண்டு கற்பித்த காரியம் எழுதியிருக்கிறதை கண்டு 

நெகேமியா 8:15-16 

ஆகையால் எழுதியிருக்கிறபடி கூடாரங்களைப் போடும்படிக்கு, நீங்கள் மலைகளுக்குப் புறப்பட்டுப்போய் ஒலிவக்கிளைகளையும், காட்டு ஒலிவக்கிளைகளையும், மிருதுச் செடிகளின் கிளைகளையும், பேரீச்ச மட்டைகளையும், அடர்ந்த மரக்கிளைகளையும் கொண்டுவாருங்களென்று தங்களுடைய சகல பட்டணங்களிலும், எருசலேமிலும் கூறிப் பிரசித்தப்படுத்தினார்கள்.

அப்படியே ஜனங்கள் வெளியேபோய் அவைகளைக் கொண்டுவந்து, அவரவர் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் முற்றங்களிலும், தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும், தண்ணீர்வாசல் வீதியிலும், எப்பிராயீம் வாசல் வீதியிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள்.

மேறகூறிய வசனங்களில் எழுதியிருக்கிறபடி கூடாரங்களை போட்டார்கள்.  அவ்விதம் கூடாரங்களை போட்டு முதல் நாள் தொடங்கி கடைசி நாள் மட்டும் தினம் தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது.  எட்டாம் நாளோவெனில் விசேஷித்த ஆசாரிப்பு நாளாயிருந்தது.  

பிரியமானவர்களே மேற்கூறிய வசனங்கள் பிரகாரம் நாம் தியானிக்கும் போது நியாயப்பிரமாணத்தில் எழுதப்பட்டிருக்கிற கற்பனைகள் எல்லாரும் மிகவும் ஏற்றுக்கொள்ள வேண்டிய காரியமாயிருக்கிறது.  அதுமட்டுமல்லாம் கிறிஸ்துவின் சரீரமாகிய கூடாரமாக இருக்கும்படியாக நாம் எல்லாரும் தேவனுக்கு ஆராதனை செய்யும் போது தினம் தினம் நியாயப்பிரமாணம் கைக்கொள்ளுகிறவர்களுமாயிருக்க வேண்டும்.  இப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.