தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 4:5

ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்தில் உறுதியான ஆணையோடு அவரை பின்பற்ற வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் அவிசுவாசிகளோடு பிணைக்கப்படக்கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

நெகேமியா 10:1-27 

முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,

செராயா, அசரியா, எரேமியா,

பஸ்கூர், அமரியா, மல்கிஜா,

அத்தூஸ், செபனியா, மல்லூக்,

ஆரீம், மெரெமோத், ஒபதியா,

 தானியேல், கிநேதோன், பாருக்,

மெசுல்லாம், அபியா, மீயாமின்,

மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,

லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,

அவர்கள் சகோதரராகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான்,

மீகா, ரேகோப், அசபியா,

சக்கூர், செரெபியா, செபனியா,

ஒதியா, பானி, பெனினு என்பவர்களும்,

 ஜனத்தின் தலைவராகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி,

புன்னி, அஸ்காத், பெபாயி,

அதோனியா, பிக்வாய், ஆதின்,

ஆதேர், இஸ்கியா, அசூர்,

ஒதியா, ஆசூம், பெத்சாய்,

ஆரீப், ஆனதோத், நெபாய்,

மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர்,

மெஷெசாபெயேல், சாதோக், யதுவா,

பெலத்தியா, ஆனான், ஆனாயா,

ஓசெயா, அனனியா, அசூப்,

அல்லோகேஸ், பிலகா, சோபேக்,

ரேகூம், அஷபனா, மாசெயா,

அகியா, கானான், ஆனான்,

மல்லூக், ஆரிம், பானா என்பவர்களுமே.

மேற்கூறப்பட்ட வனங்களில் கர்த்தரோடு ஜனங்களுக்காக உறுதியான உடன்படிக்கை பண்ணி முத்திரைபோட்டவர்கள் யாரென்றால் 

நெகேமியா 10:28

ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும், அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லாரும்,

மேற்கூறபட்டவர்கள் போக ஜனங்களின் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், நிதானீயரும், தேசத்தின் ஜனங்களை விட்டு பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கு திரும்பின அனைவரும், அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும், புத்தியுமுள்ளவர்களெல்லாரும், தங்களுக்கு பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடுகூட, மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துக்கொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும், சகல நீதி நியாயங்களையும், கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு அவைகளின்படி செய்வோம் என்றும், மேலும் 

நெகேமியா 10:31 

தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியதவசத்தையும் விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள்.

மேற்கூறப்பட்ட பிரகாரம் ஆணையிட்டு பிரமாணம் பண்ணினார்கள்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டவைகளில் எழுதப்பட்டவைகள் நாம் எப்படி கர்த்தரிடத்தில் பிரமாணத்தின் படி ஆணையிட வேண்டும் என்று திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.  அறிவும், புத்தியும் உள்ளவர்கள் தான் இதில் ஆணையிடுகிறார்கள் என்றும் எழுதப்பட்டிருக்கிறது.  ஆதலால் நாம் கர்த்தரிடத்திலிருந்து பரிசுத்த ஆவியாக புத்தியை அடைந்து, தேவனைப்பற்றி அறிகிற அறிவை அடைந்துக் கொண்டு, கர்த்தரோடு உறுதியான ஆணையோடு கர்த்தரைப்பற்றிக் கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.