தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யோவான் 1:14
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தராகிய கிறிஸ்து கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் வாசம்பண்ணுகிறார் என்பதன் திருஷ்டாந்தம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்தில் உறுதியான ஆணையோடு அவரை பின்பற்ற வேண்டும் என்பதனைக்குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நெகேமியா 10:32-34
மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்தப்பங்களுக்கும், நித்திய போஜனபலிக்கும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நித்திய சர்வாங்க தகனபலிகளுக்கும், பண்டிகைகளுக்கும், பிரதிஷ்டையான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காக பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும்,
எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.
நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக, குறிக்கப்பட்ட காலங்களில் வருஷாவருஷம் எங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியருக்கும், லேவியருக்கும், ஜனத்துக்கும் சீட்டுப்போட்டோம்.
மேற்கூறிய வனங்களில் கர்த்தரோடு ஆணையிட்டுக் கொண்டவர்கள் சொன்னது; தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமூகதப்பங்களும்; நித்திய போஜனபலிக்கும், ஓய்வு நாட்களிலும், மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நித்திய சர்வாங்க தகனபலிகளுக்கும், பண்டிகைகளுக்கும், பிரதீஷ்டையான பொருட்களுக்கும், இஸ்ரவேலுக்காக பாவ நிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை ஏற்றுக்கொண்டார்கள். பின்னும் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக, குறிக்கப்பட்ட காலங்களில் வருஷா வருஷம் பிதாக்களுடைய குடும்பங்களின் படியே, தேவனுடைய ஆலயத்துக்கு கொண்டுவர வேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியருக்கும் லேவியருக்கும் ஜனத்துக்கும் சீட்டுப் போட்டார்கள். பின்னும் நாம் வாசிக்கும் போது
நெகேமியா 10:35-38
நாங்கள் வருஷந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும்,
நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் குமாரரில் முதற்பேறுகளையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் தலையீற்றுகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியரிடத்துக்கும் கொண்டுவரவும்,
நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும், எங்கள் படைப்புகளையும், சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும் எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்திற்கும் கொண்டுவரவும், லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்,
லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்.
மேற்கூறப்பட்டவைகள் தேவனுடைய ஆலயத்திற்கு கர்த்தருக்கு காணிக்கையாக கொண்டு வரும்படி திட்டம் பண்ணிக்கொள்கிறார்கள். பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளும், ஊழியஞ் செய்கிற ஆசாரியரும், வாசல் காவலாளரும், பாடகரும் இருக்கிற அந்த அறையிலே இஸ்ரவேல் புத்திரரும், லேவிபுத்திரரும், தானியம் எண்ணெய் திராட்ச ரசம் என்பவைகளின் படைப்புகளை கொண்டு வர வேண்டியது. இவ்விதமாய் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லை என்று திட்டம் பண்ணிக் கொண்டார்கள்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்கள் திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் கர்த்தருக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகள் எப்படிபட்டவைகளாக இருக்க வேண்டும் என்பதும், நம் உள்ளமெல்லாம் கர்த்தருக்கு ஆராதனை செய்வதற்கு ஏற்ற உள்ளமாக கர்த்தரின் வசனத்தால் நிறையப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதும், கர்த்தரின் பலிபீடத்தில் எப்போதும் எரிந்துக்கொண்டிருக்கிற விளக்காக கிறிஸ்து நம்மில் மகிமையாக பிரகாசிக்கும்படியாகவும் இருக்க வேண்டும் என்பதும்; மேலும் கிருபையும், சத்தியமும் நிறைந்தவராய் கிறிஸ்து நம்மில் வாசம் பண்ணும்படியாய் நம்மை முழுவதும் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.