தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 102:27
நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளான மனுஷனில் கிறிஸ்து எல்லாவற்றிற்கும் எல்லாவுமாகவும் மகிமைபடுகிறார் என்பதன் திருஷ்டாந்தம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தர் கோட்டையும், அரணும் காவலுமாயிருக்கிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நெகேமியா 12:44-45
அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதல் கனிகளையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்படியே வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்க்கும்படிக்கு, சில மனுஷர் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்மேலும் லேவியர்மேலும் யூதா மனிதர் சந்தோஷமாயிருந்தார்கள்.
பாடகரும், வாசல் காவலாளரும், தாவீதும் அவன் குமாரனாகிய சாலொமோனும் கற்பித்தபடியே தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.
மேற்கூறபட்ட வசனங்களில் தேவனுடய ஜனங்கள் கிறிஸ்துவுக்குள் களிப்பும் மகிழ்ச்சியுமாயிருந்த சத்தம் தூரத்திலும் கேட்கபட்ட அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதல் கனிகளையும் தசமபாகங்களை வைக்கும் அறைகளின் மேல் ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்படி வரவேண்டிய பட்டணத்தின் நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்க்கும்படிக்கு, சில மனுஷர் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டர்கள்; ஊழியஞ் செய்து நிற்கிற ஆசாரியர் மேலும், லேவியர் மேலும் யூத மனிதர் சந்தோஷமாயிருந்தார்கள். மற்றும் இங்கு எழுதபட்டிருக்கிறவர்கள் கற்பித்தபடியே தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள். மேலும்
நெகேமியா 12:46-47
தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகரின் தலைவரும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் திட்டம்பண்ணப்பட்டிருந்தது.
ஆகையால் செரூபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்; லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்.
வசனங்களின் படி அவர்கள் கற்பித்ததின் பிரகாரம் தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள். தாவீதும், ஆசாப்பும் இருந்த பூர்வ நாட்களின் பாடகரும் வைக்கப்பட்டு, தேவனுக்கு துதியும், ஸ்தோத்திரமும் செலுத்துகிற சங்கீதங்கள் திட்டம் பண்ணப்பட்டிருந்தது. ஆகையால் இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும், வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகியப் பங்குகளை கொடுத்தார்கள்; அவர்கள் லேவியருக்கென்று பிரதீஷ்டைப் பண்ணிக் கொடுத்தார்கள். லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்குகளை பிரதீஷ்டைப்பண்ணிக் கொடுத்தார்கள்.
பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களின் படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு விசாரணைகாரராக வருகிறார் என்பதும், ஆசாரியராகவும், லேவியராகவும் கிறிஸ்து இயேசு வெளிப்படுவார் என்பதனையும், கர்த்தரை உள்ளாக மகிமைபடுத்துகிறவர்கள் இதனால் கண்டு சந்தோஷபடுவார்கள் என்பது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது. மேலும் பாடகராகவும், வாசல் காவலாளராகவும், சுத்திகரிப்பின் காவலையும் காக்கிறவராக கிறிஸ்து மகிமைப்படுகிறார். அல்லாமலும் தேவனுக்கு துதியும், ஸ்தோத்திரமும் செலுத்துகிற சங்கீதங்கள் கிறிஸ்துவினால் நம் உள்ளான மனுஷனில் திட்டம்பண்ணப்படுகிறது. ஆதலால் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பங்குகளை கர்த்தருக்கென்று கொடுத்து பிரதீஷ்டைப் பண்ணிக்கொள்ளுகிறவர்காக மாற வேண்டும். இப்படியாக நம்மை கர்த்தருக்கென்று பிரதீஷ்டைப்பண்ணுகிறவர்களாக ஒப்புக் கொடுப்போம். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை..